Thursday 2 January 2020

காலப்பயணமும் நேரமுடக்கமும்


காலப்பயணமும்-நேரமுடக்கமும்
Timetravel-TimeFreezing

முதலில் காலபயணம் ன்னா என்ன ன்னு பாப்போம்.. Time Travel ன்னு எல்லாரும் அறிஞ்ச விஷயம் தான்..காலத்தின் முன்னும் பின்னும் நகர முடியும் என்பது தான் இதன் பொருள்..சரி எப்படி இது சாத்தியம் ன்னு பாப்போம்.

ஒரு பொருள் 1km வேகத்துல குறிப்பிட்ட தொலைவை 10 mins ல கடக்குது ன்னு வெச்சிக்குவோம்..
இப்போ ஒரு பௌதீக அடிப்படை சூத்திரத்தை பாப்போம்.. திசைவேகம் காலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்..அதாவது "திசைவேகம் அதிகரிக்கும் போது நேரம் குறையும்"..இதை கீழ இருக்குற படத்தில் தெளிவா சொலிருப்பேன்..

இப்படி இருக்கையில் 1km ~ 10mins கடக்கும் பொருளின் திசைவேகத்தை அதிகரித்தால்..அதாவது 2km வேகத்தில் பயணித்தால் 5mins ஆக நேரம் குறையும்..இப்படி திசைவேகத்தை அதிகரித்துக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நேரம் பூஜ்ஜியமாகி(கீழே உள்ள படத்தில் கணக்கீடு மூலம் தெரிந்துகொள்ளலாம்) எதிர்மறை எண்ணளவில்(negative intiger like -1,-2,-3,..) அமையும்..நேரமானது எதிர்மறையில் அமைய வேண்டுமெனில் ஒரு பொருள் அதிகபட்ச திசைவேகத்தில் பயணிக்க வேண்டும்..அதைத்தான் அறிவியலாளர்கள் ஒளியின் திசைவேகம் ன்னு சொல்றாங்க..

இன்னொன்னு என்ன ன்னா..ஒருபொருள் அதிகபட்ச அல்லது குறைந்தபட்ச திசைவேகத்தில் இயங்கும் பொழுது அதன் இயக்கமானது கண்ணுக்கு புலப்படாது..(lucy படத்தில் வரும் கார் நகரும் காட்சி உதாரணம் - matrix படத்தில் பொருட்களை நிலை நிறுத்தும் காட்சி)

பட்டாசு வெடிக்கும் போது ஒளி முன்னடியும் ஒலி பின்னடியும் நமக்கு தெரியும் அதை நினைவு படுத்தி பாருங்க..அது போல காலபயணத்துக்கு இன்னொரு உதாரணம் என்ன ன்னா விண்வெளியில் நம்ம இன்னிக்கு பாக்கும் நட்சத்திரங்கள் உண்மையில் இப்போ அங்கு இருப்பதில்லை..நாம் காண்பது அவற்றின் இறந்த காலத்தை தான் அதாவது நாம் இன்று காணும் நட்சத்திரம் உண்மையில் இன்று அங்கு இருக்காது வேறு எங்கயோ நகர்ந்திருக்கலாம்..இல்லையெனில் வெடித்து சிதறி இருக்கலாம்.. distance illusion விளைவால் நாம் அதன் இறந்த காலத்தை தான் பார்க்கிறோம்..
இன்னும் எளிதாக சொன்னால் புவிக்கு மிக தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து தொலைநோக்கியை கொண்டு பூமியை பார்த்தால் நாம் இருக்க மாட்டோம் தூரத்தை பொருத்து நம்முடைய இறந்த காலம் தான் தெரியும்...அதில் நாம் பிறக்காமல் கூட இருக்கலாம் ஏன் டைனோசர்கள் காலத்தை கூட பாக்கலாம்..

கால முடக்கம் - Time freezing
24 படத்தில் ஒரு காட்சியில் சூர்யா உலகத்தின் இயக்கத்தை ஒரு நிமிடம் நிறுத்துவது போல காட்சிகள் இருக்கும்..இது எப்படி சாத்தியம்..இவ்வுலகில் நேரம் தான் பொதுவானது அதை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த உலக இயக்கத்தையும் கூட கட்டுப்படுத்தலாம்
(கீழ உள்ள படத்தில் இரண்டாம் படத்தை பாருங்க)
பழையபடி 1km ~ 10mins கடக்கும் எனில்,
வேகத்தை குறைத்தால் நேரம் அதிகரிக்கும்..இப்படி ஒரு பொருளானது குறைந்த பட்ச வேகத்தில் இயங்கும் பொழுது அதன் இயக்கத்தை நம்மால் பார்க்க இயலாது அந்த பொருள் ஒரே இடத்தில் நிலைகொண்டு இருப்பது போலவே தெரியும்...உதாரணத்திற்கு slow motion வீடியோ எடுக்கும் போது அதன் நேரத்தை பலமடங்கு குறைத்தால் என்ன ஆகும்..ஒரு கட்டத்தில் வீடியோ play ஆகும் ஆனால் எந்த நகர்தலும் நமக்கு புலப்படாது..
இதற்கு திசைவேகம் ஒருகாரணமாக இருந்தாலும் காலம் தான் இதை நிர்ணயிக்குது..

"ஒரு பொருளானது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச திசைவேகத்தில் இயங்கும்போது அதன் இயக்கமானது கண்ணுக்கு புலப்படாது"

குறைந்தபட்ச & அதிகபட்ச திசைவேகத்தில் பயணிக்கும்போது அந்த பொருளானது இப்பிரபஞ்சத்தோடு ஒன்றி பயணிக்கும்..அணு நகர்வுகள் மனித கண்களுக்கு புலப்படாத அளவில் இருக்கும்.

உண்மைய சொல்ல போனால் காலத்தினால் தான் இங்க எல்லாம் சாத்தியம்

No comments: