Tuesday 31 December 2019

Time-Illusion(மாயை)

Time-Illusion
காலம்-மாயை

ஒவ்வொரு வருடமும் எல்லாரும் புத்தாண்டு வர போகுது ன்னு கொண்டாட்டத்திற்கு தயாராகிட்டு இருப்பாங்க..அப்போ இது வரைக்கும் இருந்தது பழசா..?? இனி வரப்போவது புதுசா..??
கொஞ்சம் யோசிங்க இன்னிக்கி இருக்குற இடத்துல தான் நாளைக்கும் இருப்போம்...இன்னிக்கு நடந்த நடவடிக்கை தான் நாளைக்கும் தொடரும்...இப்படி இருக்கையில் எது புதுசு?? எது பழசு?? ன்னு அவசியம் தெரிஞ்சிக்கணும்...

விஷயத்துக்கு வருவோம்...நாட்களையும்,காலத்தையும் எதை வெச்சு கணக்கிடுறோம்...கடிகாரம்,காலண்டர், இரவு,பகல் மாற்றம் - இதை வெச்சு தான் மொத்த உலகமும் காலத்தையும்,நேரத்தையும் கணக்கிடுறங்க..சரி அப்போ இந்த உலகத்துல constant ஆ இருக்க விஷயங்களை எடுத்து விட்டு பாப்போம்...கடிகாரத்தை எடுத்துவிட்டா நமக்கு நேரம் தெரியாது...அது போல சூரியனை எடுத்துவிட்டால் பொழுதுகள் தெரியாது...அந்த நிலையில் அனைத்து நேரமும் ஒரே மாதிரி தான் இருக்கும்...எப்பவும் இருட்டா இருந்தா எப்போ 12மணி எப்போ 6மணி ன்னு எப்படி கணக்கிட முடியும்...மொத்தத்தில பாத்தா நேரம் அப்டிங்குறது ஒரு மாயை...புவியில் உள்ள அனைத்து உயிருள்ள,உயிரற்ற பொருட்களின் செயல்பாடுகளை பிரபஞ்சத்தில் பதிவு செய்வதே நேரம் என மதிப்பிடப்படுகிறது...இதில் சுவாரஸ்யம் என்ன ன்னா நம் செயல்பாடுகளை பிரபஞ்சத்தில் பதிவுசெய்த பின் திரும்ப மாற்றங்கள் செய்ய இயலாது...

இப்போ நான் இதை எழுதுறதும், அதை நீங்க படிக்குறதும் கூட பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும் விஷயம் தான்...இதில் நம் தேவைக்கேற்ப மாற்றம் செய்ய முடியாது.
ஆனால், அவற்றை திருப்பி பாக்கலாம்..எப்படி ன்னா பிரபஞ்சத்தில் கலந்துள்ள தகவல்களை பிரபஞ்சத்தில் கலந்துள்ள ஒரு உயிராற்றல் மூலமா(பிரபஞ்சத்தில் கருப்போடு கருப்பா கலந்தவங்க)..அது தான் இறந்தவர்களின் ஆன்மா க்கள்..குறிசொல்லும்போது கூட நாம் செஞ்ச தவறுகளை சுட்டிக்காட்டுவாங்க ல அது போல தான்.வெத்தலை ல மை போட்டுபாக்கும் மாயமும் இதுவே..

பூமியை பொறுத்தளவுல ஒவ்வொரு நொடியும் புதுசு தான்...நீங்க சும்மா இருந்தாலும் சரி இயக்கத்தில் இருந்தாலும் செரி -அனைத்தும் இப்பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும்(காலம் மட்டும் யாருக்காகவும் நிக்காது).
காலங்களையும் நேரங்களையும் கட்டுப்படுத்தும் பல கடவுள்கள் பல சமயங்கள்ல இருக்காங்க..ஜோதிடவியல் அடிப்படையில் பார்த்தால் கூட கோள்களின் இயக்கங்கள் கூட பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும் ஒன்னு தான். கோள்களும் ஓரிடத்தில் நிற்பதில்லை அவற்றின் சுற்றியக்கமும் பதிவு செய்ய்யப்பட்டே வரும்..சில கிரக செயல்பாடுகள் கூட பல வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் ன்னு தான் சொல்றாங்க..ஒருபோதும் புதுசா நடக்குது ன்னு சொல்ல மாட்டாங்க ஏனென்றால் இங்க எல்லாமே புதுசு தான் எல்லாமே பழசு தான்..

இப்போ மணி 11.59.59 secs ன்னு வெச்சிக்குவோம்..அடுத்து வர்ர நொடி புதுசு ன்னு சொல்றதுக்குள்ள பழசாகிடும்... எல்லாமே மில்லி மைக்ரோ நொடிகள் ல நடக்குது...இந்த புதுசுக்கும் பழசுக்கும்  இடைப்பட்ட மணித்துளிகள் தான் முக்கியமானவை..அது தான்  0° - zero degree..
ஆக மொத்தத்தில காலத்தையும்,நேரத்தையும் நிர்ணயிக்கவோ,கட்டுப்படுத்தவோ சாமானியனால் முடியாது.. அதுக்கும் வேற tricks இருக்கும்..

Time and Memories
நம் வாழ்க்கையில் நினைவுகள் மிக அற்புதமானது..பிரபஞ்சத்தில் வாழும் ஜீவராசிகளுக்கு கிடைத்த அருமையான வரம்..இது இறந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் (memories)...அதே மனிதர்கள் அதே இடம் என்றாலும் அந்த நினைவை மட்டும் நம்மால் மீளுருவாக்கம் செய்ய முடியாது....

காரணம்? காலம்(நேரம்) Time...
பிரபஞ்சத்தில் மனிதன் காலத்தின் மீது பயணிப்பதன் விளைவாக தான் நினைவுகளும் அதை நினைத்து பார்க்கவும் முடிகிறது...நினைவு மட்டுமன்றி இன்னும் பல விடயங்களை காலம் தான் தன்னுள் அடக்கி கொண்டுள்ளது..காலத்தை மட்டும் நீக்கிவிட்டால் நினைவுகள் மட்டுமன்றி எந்த ஒரு இயக்கமும் இருக்காது...
சந்தோஷ பட்டுக்கோங்க..காலத்தின் மீது பயணிப்பதால் தான் நினைவுகளை நினைத்து பார்த்து சந்தோசப்படவும்/வேதனைப்படவும் முடிகிறது...

நேற்று போல் இன்று இல்லை;
இன்று போல் நாளை இல்லை 
காரணம் - Time

மேலும் காலம் என்பது ஒளியை போல் நேர்கோட்டில் பயணிக்க கூடியது...அது மட்டும் நேர்கோடல்லாமல் எங்கும் பரவி பயணித்தால் நேற்று இன்று நாளை லாம் இருக்காது...எல்லாமே குழம்பி விடும்.


Present Illusion

நிகழ்வு - நிகழ்காலம் இது இருப்பதிலேயே மிகவும் குழப்பமான நுணுக்கமான மாய தோற்றம்..முழுவதும் கண்ணாடியால் ஆன பல அறைகள் உள்ள ஒரு கட்டிடத்தின் உள் நுழைந்தால் எந்தளவுக்கு நம் கண்கள் விழித்திருக்கும்போதே மறைக்கப்படுமோ அதே போல இந்த நிகழ்காலம் எனும் மாய பிம்பம்..நாம் காலத்தில் தான் பயணிக்குறோம் ன்னு சொல்றாங்க உண்மைய சொல்ல போனால் நாம ஒரு சுழலில் மட்டிக்கிட்டு தவிக்கிறோம் கடந்தகாலம், நிகழ்காலம்,எதிர்காலம் என்னும் சுழல்...இதில் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தை சுட்டி காட்டலாம் ஆனால் ஒரு போதும் நாம் நிகழ்காலத்தில் இருப்பதை உணர முடியாது..இப்போ நீங்க present ல இருக்கீங்க ன்னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே அது இறந்தகாலமாகிடும் எல்லாம் நுண்ணிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துட்டு இருக்கு...காலம் நேரம் மட்டுமல்ல அனைத்து இயக்கங்களும் மிக மிக நுண்ணிய மனித புலனுக்கு எட்டாத வகையில் நடக்குது...போன நொடி வரை உயிரோட இருந்த மனுஷன் இந்த நொடி மரணிக்கிறான்...இந்த கால நகர்வு தான் எல்லாவற்றையும் தீர்மானிக்குது காலமும் இயக்கமும் ரெட்டை குழந்தைகள் ஒன்றை ஒன்று பிரியாது...உனக்கு நேரம் சரியில்ல time சரியில்ல ன்னு சொல்றது லாம் இதன் விரிவாக்கம் தான் கால சுழற்சியில் இயக்கங்கள் மாறி மாறி நிகழும் அது சாமானியனுக்கு  சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம்...இந்த காலச்சக்கரத்தில் நாம ஒரு துகள் போல இஷ்டம் போல சுழலுவோம் இயக்கம் போல நகருவோம்...எது நிழல் எது நிஜம் ன்னு கணிக்க முடியாத ஒரு நிலை நிகழ்கலாம்...

No comments: