Wednesday 30 June 2021

Quantum ZENO



குவாண்டம் உலகம் ரொம்ப விசித்திரமானது ன்னு கேள்விபட்டிருப்போம்.ஆமா, ஆச்சார்யமான சில விஷயங்களை கொண்ட விசித்திர உலகம் தான் அது.ஆனாலும் அதுவும் பிரபஞ்ச நியதிக்கு உட்பட்டே நடக்கணும் அது தான் விதி.இங்க நடக்கும் எந்தவொரு நிகழ்வும் uncertainty அடிப்படையில் தான் நிகழும்.அதாவது நடக்கும்/நடக்காது (yes or no )என்னும் இரு வாய்ப்புகளுக்குள்ளே அடங்கி விடும்.இதை நம்ம scrodinger cat experiment ஓட ஒப்பிட்டு பார்த்தோம் ன்னா விசமுள்ள பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பூனை ஒரு நிமிடம் கழித்து திறந்து பார்க்கையில் ஒன்று உயிரோட இருக்கணும் இல்லை இறந்து போய் இருக்கணும்.அதே சமயம் அந்த ஒரு நிமிடத்தில் 10 வினாடிகளுக்கு ஒரு முறை பெட்டியை திறந்து பார்த்தோம் ன்னா குறிப்பிட்ட நேரம் பூனை உயிரோடு இருக்க வாய்ப்புகள் இருக்கு அதாவது பூனை நமது கண்ணில் படுமாறு இருக்கும் போது அது நம்மால் காப்பாற்றப்படும் அது முதல் 10 வினாடிகளில் இறந்தாலும் நிகழ்தகவின் அடிப்படையிலே அமையும். அதுவே ஒவ்வொரு வினாடியும் பெட்டியை திறந்து பார்த்துக்கொண்டிருந்தால். அந்த பூனை கண்டிப்பாக ஒரு நிமிடம் கழித்து உயிரோடு தான் இருக்கும்.இது தான் quantum zeno அதாவது கவனித்து/பார்த்துக் கொண்டே இருந்தால் அமைப்பின் செயல்பாடு மாறாது(அல்லது மாறுபட்டு காணப்படும்).இதற்கு எளிய உதாரணம் சொல்லணும் ன்னா சேட்டைகள் செய்யும் குழந்தையை அம்மா கவனித்து பார்த்துக்கொண்டே இருக்கும் போது குழந்தையின் சேட்டைகள் இருக்காது சமத்து குழந்தையாக நடந்து கொள்ளும்.அதேபோல வகுப்பில் ஆசிரியர்கள் இருக்கும் போது ஏற்படும் அமைதியான சூழல் என கவனிக்கப்படும் போது இந்த அமைப்பு மாற்றம் கொள்கிறது.எனக்கு நடந்த ஒரு விஷயத்தை இத்தோடு ஒப்பிட்டு பகிர்கிறேன் " அன்று எனக்கு 1.5kms running test அதை 6.30 நிமிடத்தில் கடக்கணும் ஆனால் ஏற்கவனவே நான் 6 நிமிடத்தில் கடந்துள்ளேன் இருப்பினும் coach முன்னாடி செய்து காட்டனும் சரி ன்னு ஓடுனேன் ஓடுனேன் 7.15 நிமிடத்துக்கு ஓடுனேன்.ஆனால் மறுநாளே யாருமில்லா நேரத்தில் நானாக ஓடி 6.15 நிமிடத்தில் ஓடிமுடித்தேன் " அதற்கான காரணம் எனக்கு கொஞ்சம் தாமதமாக தான் விளங்கியது.இதேமாதிரி தான் கண்காணிக்கப்படும் எந்தவொரு விஷயங்களும் கட்டுப்படுத்தப்படும் அல்லது இயக்கம் திசைதிருப்பப்படும்.பாத்துகிட்டே இருந்தா பாலும் பொங்காது / கடிகார முள்ளும் நகராது.இத அடிப்படையா வெச்சு நேரத்தை கவனிக்க தொடங்கினால்? ஒவ்வொரு மில்லி மைக்ரோ நொடிகளும் கவனிக்கப்பட்டால் இங்கு நேரத்தை சிறு சிறு துண்டாக்கலாம்.Bootstarp Paradox மாதிரி ( குறிப்பிட்ட தொலைவை பாதியாக கொண்டு அதை மீண்டும் பாதியாக அளந்து அதை மீண்டும் பாதியாக அளப்பதே Bootstrap) 

எலக்ட்ரான் Double Slit Experiment இதைத்தான் சொல்லுது கவனிக்கப்படும் போது எலக்ட்ரான்கள் நகராமலோ/மாறுபட்ட இயக்கத்திலோ இயங்குகிறது.இப்போ இதை மனித வாழ்கைக்குள்ள கொண்டு வந்து பாருங்க கடவுள் ன்ற ஒரு கண் நம்மை கவனிக்குது ன்னு ஆணித்தனமா நம்புறவங்க கேட்ட செயல்களில் ஈடுபட கொஞ்சம் பயப்படுவாங்க.School, College, Officeகளில் நடக்கும் inspection/auditing கூட ஒரு வகையில் குவாண்டம் zeno தான்.நீங்களே முயற்சி பண்ணுங்க உங்க அறையில் ஒரு கண் மட்டும் உள்ள படத்தை வெச்சு அதை ஒரு camera மாதிரி நெனச்சிட்டு உங்க வேலையை செய்யுங்க மாற்றம் தெரியும்.இங்குள்ள cctv களும் அப்படியே.நான் கண் ன்னு சொன்னதும் வேற ஒரு கண்ணை நினைக்காதீங்க நான் கண்டிப்பா அத சொல்லல