Thursday 20 May 2021

Patterned Formulas

Patterned Formulas

பொதுவா formulas கணிதம்,வேதியல், இயற்பியலில் பயன்பட கூடிய சிக்கலான அமைப்புகளை தீர்க்க பயன்படும் ஒரு திறவுகோல் ன்னு வெச்சிகலாம்.இது பூவுலகின் அனைத்து நீள, அகல,உயர அளவைகள் மட்டுமல்லாது வேதிய பிணைப்புகளையும் கட்டுப்படுத்துது.உதாரணத்துக்கு E=Mc2 ல ஆரம்பிச்சு பாலில் சர்க்கரை கலந்து டீ போடுறது வரைக்கும் இந்தவகை சமன்பாடுகளை அடிப்படையாக கொண்டு தான் நடக்குது.மனிதர்கள் தங்கள் அறிவுக்கு எட்டிய விடயங்களை வைத்து இதுவரை கண்டறிந்துள்ள சூத்திரங்கள் குறைவு தான் இவை பெரும்பாலும் பொறியியல் பயன்பாட்டுக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.இந்த formulas தான் ஒட்டுமொத்த உலகத்தையே இயக்குது ன்னா உங்களால நம்ப முடியுமா?? ஆமா,உண்மை தான்.இது போன்ற மனிதனுக்கு எட்டாத சில சூத்திரங்கள் தான் இந்த உலகத்தை மட்டுமல்லாது உங்களையும் என்னையும் கூட இயக்குது.அதுதான் Patterned அதாவது முறைப்படுத்தப்பட்ட சூத்திரங்கள்.இதன்படி தான் இங்க எல்லாமே இயங்கிட்டு இருக்கு.இந்த formulas ஒன்றுக்கொன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையது. உதாரணத்துக்கு புவியில் உள்ள அழுத்தம்,எடை,வெப்பநிலை லாம் நிலையானது ன்னு நெனச்சிட்டு இருக்கோம்.ஆனா இந்த அமைப்புல ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் அது மொத்தமும் மாறிடும் constant (மாறிலி) மதிப்புகள் மாறினால் இங்குள்ள சூத்திரம் அனைத்துமே மாற்றம் கண்டிடும்.இந்த மாற்றங்கள் நிகழலாம ஓடிட்டு இருக்குறதும் ஒரு formula வின் அடிப்படையில் தான்.சூரியன் கிழக்கே உதிப்பது முதல்,பூமி சூரியனை சுற்றுவது,சந்திரன் சுழற்சி ன்னு எல்லாமும் இந்த formula அடிப்படையில் தான்.சரி எல்லாமே formula படிதான் இயங்குது  ன்னா அப்போ நம்ம இயக்கமும் அப்படியா?? மனிதனின் இயக்கம் இரண்டுவகையில் இருக்கும்  ஒன்று மனதளவில் மற்றொன்று உடலளவில் இவ்விரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும் உதாரணத்துக்கு ஒருதனால் 50கிலோ எடையை தூக்க முடியும் ஆனால் மனது அதற்கு சம்மதிக்காது,அதேபோல் மனதளவில் முடியும் ன்னு நினைக்கும் போது உடல் ஒத்துழைக்காது. இது தான் Uncertainty - நிலையற்ற தன்மை இந்த நிலையில் இருக்கையில் மனிதனின் இயக்கம் மட்டும் எப்படி formulas அடிப்படையில் நடக்கும்? கண்டிப்பா இதுக்கும் ஒரு formula இருக்கு.அது தான் மற்ற formula களின் கூட்டு வெளிப்பாடு.நாம என்ன தான் இங்க நம்ம இஷ்டத்துக்கு இயங்குனாலும் நாம இந்த அமைப்புக்குள்ள(பூமிகுள்ள) தான் இருக்ககோம். நாம சூத்திரங்களை பயன்படுத்தாவிட்டாலும் சூத்திரங்களுக்குள்ள தான் இயங்குறோம்.இதற்கு உதாரணமா ஒரு பகடைய(Dice) சொல்லலாம்.ஒரு பகடைய உருட்டும் போது என்ன தான் நிலயற்றதா கணிக்க முடியாம விழுந்தாலும் அது கண்டிப்பாக 6 வகையான எண்களை மட்டுமே காட்ட முடியும்.இத அப்படியே மனித இயக்கத்துடன் பொருத்தி பார்த்தோம் ன்னா மனிதனுக்கு Duality (yes or no).இதன்படி ஒரு பகடைய காட்டிலும் ஒரு மனிதனின் இயக்கம் எளிதில் இந்த அமைப்போடு ஒத்துப்போகும்.

இந்த formula விளையாட்டின் சில ஆச்சர்ய பகுதிதான் 3,6,9 series - Fibonacci series எல்லாம்.நமக்கு தெரிந்தவரை formula க்களை கணித பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துறோம் ஆனா இதே formulas தான் உலகில் பல ஆச்சர்யங்களுக்கு அடிப்படையாக அமையுது. இந்த formula க்களை சரிவர கட்டுப்படுத்தும் master program தான் உலகில் உள்ள அனைத்திற்கும் மூலம்.AI, Computer programmers, Computer Coders க்கு இதன் ஆழம்  புரியலாம்.எல்லாம் விதிப்படி ன்னு சொல்லிட்டு திரியும் பாமரனுக்கும் புரியும்.ஆக எல்லாம் முன்னரே திட்டமிட்டு இப்படி தான் நடக்கணும் ன்னு நடப்பதில்ல.மாறாக,எப்படி எல்லாம் நடக்கணும் ங்குறதுக்கு முறைப்படுத்தப்பட்ட சூத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கு.இதன் விளைவா தான் முக்காலத்துக்கும் பயணித்து குறிசொல்ல முடியுது

ஆட்டுவிப்பவன் அவனே!!!


Humans - Advanced Evolution(மேம்பட்ட பரிணாமம்)

Humans - Advanced Evolution
(மேம்பட்ட பரிணாமம்)

பொதுவா இந்த உலகம் எப்படி தோன்றுச்சு,பிரபஞ்சம் எப்படி உருவாச்சு ன்னு இருக்குற பல கேள்விகளில் முக்கியமா கருதப்படுறது மனிதன் எப்படி உருவானான்??.உடனே டார்வினியத்தை தூக்கிட்டு வர வேண்டாம். ஏனென்றால் நான் பேசப்போறது உருவாக்கம்பற்றி,பரிணாமம் பெற்றதை பற்றி கிடையாது.அப்படியே பரிணாமத்தை பற்றி டார்வின் சொல்லியிருந்தாலும் United States, Wales, Scandinavia,Baltic region, Siberia, and China - போன்ற பகுதிகளில் வெவ்வேறு கால இடைவெளியில் பெறப்பட்ட Cambrian fossils படிமங்கள் அவரது மொத்த theory-யையும் திணற வெச்சது.எனவே,டார்வினை ஓரமா வெச்சிட்டு இயற்கையில் என்ன நடந்தது ன்னு பாப்போம்.கூடவே பண்டைய பெரு நாகரீங்கள்ல என்ன சொல்றாங்கன்னும் பாப்போம்.ஹிந்து மதத்தில் பிரம்மா போல எகிப்தில் khnum இவர்தான் மனிதர்களை உருவாக்கும் கடவுள் இவர் ஆட்டின் தலையை கொண்டவர்.ஆட்டுக்கும் படைப்பும் என்ன சம்பந்தம் ன்னா இந்த ஆட்டின் தலையை மனித பெண்ணின் uteres உடன் ஒப்பிடப்படுகிறது.இதே போல கிரேக்கத்தில் Prometheus,Aztec இல் Quetzalcoatl என ஒவ்வொரு இடத்திலும் படைப்புக்கு தனிதனியே கடவுள்கள் உண்டு.அப்படி இருக்கையில மனிதன் மட்டும் ஏன் ஒரு உயர்ந்த நிலையில் படைக்கப்படனும்.மறுபடியும் பரிணாமம் ன்னு டார்வினிய கோணத்தில் யோசிக்காம கொஞ்சம் சாதாரணமா யோசிங்க. அப்படியே சிறு உயிரினம் முதல் டைனோசர் வரை பரிணமித்து உருவாகி இருந்தாலும் மனிதன் மட்டும் ஏன் இன்று மேம்பட்டு இருக்கிறான்.இதை Natural Selection ன்னு பாக்காம. selected creation or super creation ன்னு வெச்சு பாருங்க.அதாவது மனிதன் மனிதனாக தான் உருவாக்கப்பட்டான்.குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் ன்னு சொல்றாங்க ஆனா எனக்கென்னமோ குரங்கை போல மனிதன் இருப்பதால் மட்டும் சொல்லிட முடியாதே.நியாண்டர்தால் இனம் மனித முன்னோடி எனவும் குரங்கிலிருந்து பரினாமித்தான் ன்னு சொல்றாங்க ஆனா நம்ம ஹோமோசேப்பியன் தான் natural selection ஆள அவங்களை வீழ்த்திட்டோம் ன்னு நம்புராங்க.அதாவது இதுபோல காரணங்களால நம்ப வைக்கப்படுரோம்.மேம்பட்ட மனிதன் பைனாகுலர் பார்வை,வெட்டும் பற்கள்,விரலிடை சவ்வு,உடல் முழுதும் ரோமங்கள்,கை கால்களில் நகம்,உதட்டில் ஆர்பிக்குழாரிஸ் தசைகள் என அனைத்து பரிணாமங்களில் இருந்தும் சில பொருத்தமான தகவமைப்புடனே படைக்கப்பட்டிருக்கிறான்.புவியீர்ப்புக்கு எதிரான நிலத்தன்மை,மரம் ஏர வசதியான உடலமைப்பு,எதையும் பற்றிக்கொள்ள கட்டைவிரல் ன்னு எல்லாவற்றிற்கும் மேல சிந்திக்கும் திறனையும் பெற்று ஒரு மேம்பட்ட உயிரினமா உருவாக்க பட்டிருக்கிறான்.இவை அனைத்தும் ஒரு செல் உயிராக ஒரு கரு உருவாவதில் இருந்து 9மாதம் வளரும் வரை இந்த அத்தனை பரிணாமங்களிலும் பரிணாமிக்கிறது இதற்கு சான்றாக முதுகு தண்டுக்கு கீல் இருக்கும் வால் போன்ற முள்ளெலும்பு,கரு வளர்ச்சியின் போது கழுத்தில் ஏற்படும் செதில்கள்.இத்தனை அம்சங்களும் பெற்ற மனிதன் உருவாக்கப்பட்டதாகவும் முக்கியமா களிமண்ணில் செய்யப்பட்டதாகவும் பண்டைய நாகரீகங்கள் சொல்லுது.பூமி உருவாகி எத்தனையோ காலம் நகர்ந்துவிட்டது.இன்னமும் ஆறடி உயரமும் அதீத சிந்திக்கும் திறனும் உடைய ஒரு உயிரினம் மற்ற உயிரினங்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தி பிழைத்து வருகிறது என்றால்.இது வெறுமென பரிணாம கோட்பாடால் மட்டும் சாத்தியமல்ல.மாறாக இந்த  மேம்பட்ட மனித உயிரினம் திட்டமிடப்பட்ட வகையில் தனித்து உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஒருவேளை பரிணாமகோட்பாடு மனிதனை உருவாக்கும் ஒத்திகையாக இருக்கலாம்.அப்படி இருந்தாலும் இவ்வளவு கோளாறுகளுடன் அமைந்திருக்காது.உயிரினங்கள் அனைத்தும் தனித்துவம் கொண்டது.அதே சமயம் மனித பரிணாமமும் தனித்தே உருவாக்கபட்டது.