Monday 5 July 2021

Creations from Classical Elements

Creations from Classical Elements
பஞ்சபூத கோட்பாடு 

உலகின் பல நகரீகங்களும் மத கோட்பாடுகளும் பரிணாம கோட்பாட்டை விடுத்து மனிதனின் உருவாக்கத்தில் இருந்தே துவங்குகிறது காரணம் இவ்வுலகம் பரிணாமத்தில் திளைத்த மற்ற எந்த உயிரிகளுக்கும் அல்லாது மனிதனை மையமாக கொண்டே இயங்குகிறது இதில் மற்ற உயிரினங்களும் உட்படும் எவ்வாறென்றால் மனிதனால் மற்றவையும் மற்றவையால் மனிதனும் பிழைத்திருக்கும் வகையில் ஒரு சங்கிலி தொடரமைப்பில் பின்னி கொண்டுள்ளது.இவ்வாறாக உள்ள மனிதன் எப்படி படைக்கப்பட்டான்?.ஒவ்வொரு நாகரீகத்திலும் படைப்பிற்கென தனித்தனி கடவுள்கள் உள்ளனர் ஒரே தேவன் என்ற கோட்பாட்டை கொண்ட மதங்களும் கூட மனிதனை கடவுள் தான் உருவாக்கினார் குறிப்பாக அவர் மனிதனை களிமண்ணில்(நிலத்தில்) இருந்து உருவாக்கினார் என கூறுகிறது மதகோட்பாடும்,வாய்வழி கதைகளும்.சரி களிமண்ணை ஏன் குறிப்பாக கொண்டு படைப்புகள் உருவாகியிருக்க வேண்டும்.அதன் பின் ஒளிந்துள்ளதே பஞ்சபூத கோட்பாடு,ஆம் களிமண்-நிலம்,அதை குழைத்து உருவாக்க நீர் மற்றும் வெப்பம் கொண்டு காய நெருப்பும்,காற்றும் - இவை அனைத்தும் சேர்ந்தே ஒரு உயிர் உருவாகியிருக்கும் இதை சற்றே நவீன டார்வினிய கருத்துகளோடு ஒப்பிட்டு பார்த்தால் முதலில் ஒரு செல் உயிர் உயிரி-வேதிய கனிம கூட்டு பொருட்களால் உருவானவை இவை அனைத்தும் நிலத்தில் கிடைக்கக்கூடியவையே அது மெல்ல நீரில் வாழ்ந்து கரையை தொட குளிர்வை விட்டு வெப்பத்தில் வாழ்ந்தது பின் ஓங்கி மூச்செடுக்க இறுதியில் பூத உடலை கொண்ட மனிதன் உருவானான் மனித உடலில் நீராக ரத்தமும், நிலமாக கனிம கூட்டு பொருட்களும்,வாயுவாக பிராணமும், நெருப்பாக உடல் வெப்பமும் உள்ளது இது களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைக்கு தேவையான பண்புகளை ஒத்துள்ளது.இந்த பரிணாமம் பஞ்சபூதத்திற்கானதே இதன் சுழற்சியில் உருவான சோதனை மாதிரிகளே பிற உயிர்கள் அதனால் தான் மனிதனை இறுதியான மேம்பட்ட உயிரினமாக கடவுள் படைத்தார்.இதே தத்துவத்தை சிவ ஐந்தெழுத்து தத்துவதோடு ஒப்பிட்டால் இங்கு ஐந்தெழுத்து என்பது "நமசிவய"- இந்த எழுத்துக்களில், ந - பிருதிவியையும், ம - நீரையும், சி - நெருப்பையும், வ - வாயுவையும், ய - ஆகாயத்தையும் குறிக்கும்.

மேற்கூறிய அனைத்து கருத்தியலிலும் ஒரே விஷயம் மட்டும் கேள்வியாக இருக்கும் அதுதான் ஆகாயம் - இதை நவீன டார்வினியத்தால் கூட விளக்க இயலாது.அது தான் உயிர்,ஆன்மா,ஜீவன் என பலவாறு அழைக்கப்படும் பிரபஞ்ச பேராற்றல். என்னதான் களிமண்ணால்(நிலம்,நீர்,நெருப்பு,காற்று கொண்டு) ஒரு பொம்மையை(மனிதனை) உருவாக்கினாலும் அதற்கு உயிரான ஆன்மாவை கொடுப்பது இப்பிரபஞ்சமே அதனால்தான் எங்கும் நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சதோடு கலந்த கருப்பு ஆற்றல்கள் மனிதனை போல் அல்லாமல் ஒரே ஒரு தன்மையை மற்றும் பெற்றுள்ளன(ஆகாயம்) 

தென் மாவட்டங்களில் சுடப்படாத களிமண்ணால் தெய்வ உருவங்கள் செய்யப்பட்டு திருவிழாக்கள் நடத்தப்படும் இந்த மண் சிற்பங்கள் செய்து கண்திறக்கும் போது குறிப்பிட்ட பலி கொடுக்கப்பட்டு தங்களுக்கு தேவையான கருப்பொருள் ஆற்றல் சிற்பத்தினுள் புகுத்தப்பட்டு ஒரு ஆற்றல் வாய்ந்த உருவமாக கொண்டு விழாக்கள் நடத்தி மக்கள் தங்கள் வேண்டுதல்களை முன்வைப்பர்.இதை திருவிழா முடிந்ததும் தண்ணீரில் கரைத்து விடுவார்கள் அதே சமயம் பச்சையாக சுடப்படாத களிமண் சிலைகளை வீட்டிற்குள் வைக்க மாட்டார்கள் பேய் பிடிக்கும் ன்னு ஒரு பேச்சுவழக்கு உண்டு.இப்போ இதையே புது வீட்டிற்கு கொடுக்கப்படும் பலியோடு ஒப்பிட்டு பாருங்க.
நான்கு பூதங்களால் அடங்கிய ஒன்றினுள் தனித்திருக்கும் ஐந்தாவது ஒன்று உட்புக முயற்சிக்கும்.இதை அக்குபஞ்சர் மருத்துவர்கள் அருமையாக விளக்குவார்கள்.சிலருக்கு பேய் பிடிப்பதும் இதனடிப்படையில் தான் ஐந்தில் ஒன்று பலவீணமடைந்து திசைமாறும் பட்சத்தில் மீதமுள்ள நான்கையும் ஒன்று வந்து ஆக்கிரமிக்கும்.இதை தான் நம்ம டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் Neuralink என்ற நிறுவனத்தை உருவாக்கி அதற்கான ஆராய்ச்சியை முடுக்கி கொண்டிருக்கிறார்.

பின் குறிப்பு : இஸ்லாம்,சுமேரியன்,எகிப்து,கிரேக்கம், மாயன்,ஜொராஷ்டரியம்,சீனம்,பாபிலோனிய மறையியல்,யூதம் என அனைத்து மதங்களும் களிமண்ணால் மனிதன் உருவாக்கப்பட்டதை கூறுகிறது.