Friday 27 November 2020

Dream and Decryption

Dream and Decryption

Decryption or Decoding - மறைமுகமாக நமக்கு தேவையான ஒரு விஷயத்தை நமக்கு தேவையற்ற அல்லது புரியாத ஒரு விஷயத்தின் மூலம் நமக்கு கடத்துவது...இது கண்டிப்பாக புரியவேண்டியவர்களுக்கு மட்டும் புரியும் வகையில் இருக்கும்..ஏனென்றால் அவர்களால் மட்டுமே இதை கணிக்க இயலும்,சில நேரங்களில் அவர்களால் கூட கணிக்க முடியாமல் மர்மமாகவே போகலாம்...decryption நுட்பமானது மறையியலில் பெரும்பங்கு வகிக்கிறது...இது கனவுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது...சிலர் கனவுகளுக்கு விளக்கம் தேடி செல்வதை பாத்திருப்போம்..எல்லாம் இதன் விளைவால் தான்..இன்னும் கிராம புறங்களில் ஒவ்வொரு விதமான கனவுகளுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்களை வைத்திருப்பர்..அது முற்றிலும் அந்த கனவுக்கு தொடர்பு இல்லாத மாதிரியே இருக்கும்...இந்த கனவுகள் பல காரணங்களால் தோன்றுகிறது இதில் ஒன்று தான் உடல்-மன ஒன்றிப்பால் ஏற்படுவது...உடலில் ஏற்படும் வினைகளுக்கு ஏற்றார் போல் கனவுகள் நிகழ்வது... இதற்கு ஒரு உதாரணம் சொல்றேன் இது எனக்கு நடந்த ஒரு கனவு " இருட்டான வீட்டுக்குள்ள அரை தூக்கத்தில் நடந்துட்டு இருக்கேன் அதுவும் எங்க வீட்டுக்குள்ள தான்...சரியான தாகம் தொண்டை வறண்டு வயிறு எரியும் அளவுக்கு தாகம்,தடுமாறி போய் refrigerator அ திறந்து உள்ள இருந்து பெரிய cool drinks பாட்டிலை எடுத்து குடிக்கிறேன் நான் குடிக்க குடிக்க அதிலுள்ள ஜூஸ் பாட்டிலின் மேல்புறத்தில மிதக்குது நானும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் குடிக்க முடியல திரும்பி பார்த்த tining table ல ஒரு இளநீர் இருந்துச்சு அதை எடுத்துட்டு அவசரமா வெளிய ஓடுறேன் வெளிய போய் உக்காந்து அந்த இளநீரை மேலே சீவுறேன் இளநீர் கீழ்ப்பக்கம் தானாகவே ஓட்டை விழுந்து தண்ணீர் கீழே கொட்டிடுச்சு " - பதறிப்போய் முழிச்சிகிட்டேன் கனவில் ஏற்பட்ட அதே வயிறு எரிச்சல்,தீராத தாகம் மற்றும் தொண்டை வறட்சி ஓடி போய் தண்ணீர் குடிச்சு நிதானத்துக்கு வந்ததுக்கு அப்றம் தான் தெரியுது அது கனவு ன்னு...இரவு சிக்கன் ரைஸ் சாப்டுட்டு தண்ணீர் குடிக்காமலே தூங்குனதால ஏற்பட்ட விளைவு தான் இந்த தாகம்...இந்த தாகம் என்னும் உடல் இயக்கத்தை என் மூளை அதுக்கு தெரிஞ்ச வகையில எனக்கு உணர்த்த முயற்சி பண்ணிருக்கு (cooldrinks, இளநீர்)....இதே போல தான் நம்ம ஆழ்மனது உணரக்கூடிய விடயங்களை கனவுகள் மூலமாக நமது மூளை நமக்கு உணர்த்த முயலும் ஆனால் சரியான விளக்கம் கொடுக்க முடியாமல் தேவையற்ற மெய்நிகற்காட்சிகளை தோற்றுவித்து குழப்பம் அடைய செய்யும்...நமது மூளை ஒரு விஷயத்தை அப்படியே கடத்தாது - அதுக்கு தெரிஞ்ச வகையில் அதற்கு உண்டான காட்சிகளையும்,நிகழ்வுகளையும் மட்டுமே காட்டும்...ஒருவர் எதிரில் நிற்கும் மற்றொருவருக்கு வாயை திறக்காமல் சைகையிலே ஒரு விஷயத்தை உணர்த்தனும் ன்னா அவர் என்னென்ன செய்வாரோ அதே போல தான் இந்த மூளையும் கனவின் போது இயங்கும்....கனவின் மூலம் ஆன்மாக்கள் தொடர்புகொள்ளும் ன்னு ஏற்கனவே பாத்திருக்கோம்...அதுபோன்ற வெளிப்புறத்திலிருந்து பெறப்படும் தகவல்களும் இப்படி குழப்பமாக தான் இருக்கும் அதை decrypt செய்து அதற்கான அர்த்தத்தை அறிவது ரொம்ப கடினம்...அதே சமயம் சில கனவுகள் நாம எளிதில் decode பண்ணுகிற அளவுக்கு தான் இருக்கும் காரணம் அலைவரிசை ஒன்றிப்பு....நாய்களின் கண்ணுக்கு பேய் தெரியும் ன்னு சொல்றத போல தான்... சிலரால் மட்டுமே சில விஷங்களை மறைக்குள் இருந்து வெளிக்கொணர முடியும்....சிலருக்கு அது என்னவென்று தெரிய வந்தாலும் அதை தெரிந்து கொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார்கள் காரணம் அது தேவையற்ற நிகழ்வாக காட்சிப்படும்....கனவில் மட்டுமல்லாமல் மெய் வாழ்க்கையிலும் சில விஷயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன அதை decrypt செய்ய முயன்றாலும் முடியாது..காரணம் அதுவும் கொண்டவர்களை போய் சேரும் வகையிலே அமைந்திருக்கும்...நிலையில்லா பிரபஞ்ச நகர்வில் சில விடயங்கள் சரியாக கடத்தப்பட்டு கொண்டிருப்பது ஆச்சரியமூட்டும் ஒரு வேடிக்கை தான்

Sunday 22 November 2020

Time and Movement - காலமும் இயக்கமும்

Time and Movement - காலமும் இயக்கமும்
நேரம் முழுக்க முழுக்க இயக்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியது...இந்த இயக்கமானது எப்படி ஒவ்வொரு இடத்திலும் வேறுபடுகிறதோ அதே போல தான் நேரமும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு அமையும்..கிட்டத்தட்ட வானியல் ஜாதக கணிப்புகள் போல...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புகள்,திசை இயக்கங்கள் (இயக்கத்திற்கு திசை முக்கியமானது)...இப்போ எதார்த்த நிலையில் இதை பாப்போம் - 40 பேர் உள்ள ஒரு வகுப்பறையில் 1 மணிநேர வகுப்பு நடக்குது...இதில் இந்த ஒரு மணி நேரம் என்பது எல்லாருக்கும் பொதுவானது தான் ஆனால் அதை நமது மூளை ஏற்றுக்கொள்வதையும்,நமது முழு மனதின் பங்கேற்பும் தான் அவரவருக்கான நேர விரயத்தை தீர்மானிக்குது...அதாவது அந்த வகுப்பில் சிலருக்கு 1மணிநேரம் சீக்கிரமா கடந்த மாதிரி இருக்கலாம்,சிலருக்கு ரொம்ப நேரம் போன மாதிரி இருக்கும்,இன்னும் சிலருக்கு எப்ப டா முடியும் ங்குற அளவுக்கு இருக்கும்,சிலர் என்னடா இன்னிக்கு சீக்கிரம் முடிஞ்சது ன்னு நெனைப்பாங்க..நல்ல பரபரப்பா இயங்கிட்டு இருக்குற ஒரு தெரு முனையின் ஓரத்தில் நின்னு அங்கு நடக்கும் மனிதர்களின் நடமாட்டத்தை கவனிச்சோம் ன்னா ஒவ்வொருவருக்கும் இடையேயான தனித்தன்மை இயக்கத்தை பார்க்கலாம்..வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு வேலைகளை செஞ்சிட்டு இருப்பாங்க...குறிப்பிட்ட ஒரு காலம் அங்குள்ள அனைவருக்கும் வெவ்வேறு சுய அளவைகளில் நிகழும்..உதாரணத்துக்கு சில கஷ்டமான,சோகமான காலகட்டத்தில் நேரம் சீக்கிரம் போகவே போகாது...சில சந்தோஷமான காலத்தில் நேரம் டக்குனு போயிடும்...நாமலும் நமது மனதும் எந்தளவுக்கு ஒரு நிகழ்வை அனுபவிக்குது என்பதை பொறுத்து தான் இங்கு காலம் தீர்மானிக்கபடுது...(எனக்கு கூட சமீபத்தில் பிடிக்காத ஒரு வேலையை செய்யும்போது நேரம் போகவே இல்லை நானும் எவ்வளவு நேரம் கடத்தி கடத்தி பார்த்தும் நகரவே இல்லை ஒரு நிமிடம் ஒரு நாள் போல கடந்தது அந்த நேரத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் என் மனதில் ஆழப்பதிந்தது..அதே வேலையை அதே இடத்தில் இன்னொருமுறை தொடர்ந்தேன் ஆனால் அப்போ எனக்கு பிடிச்சு அதை செஞ்சேன் அந்த சமயம் எனக்கு நேரம் போதுமானதாக இல்லை அந்தளவுக்கு காலம் வேகமா நகர்ந்திடுச்சு...

ஒரு மனிதன் ஒரு 10அடி நகர்வதற்கு சில வினாடிகள் ஆகும்,அதே ஒரு எறும்பு கடக்குறதுக்கு நிமிடங்கள் ஆகும்,அதே ஒரு முயல் கடக்குறதுக்கு மனிதனை விட குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும்...இவை முழுக்க முழுக்க இயக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு எடுத்துக்காட்டு ஆனால் இதை உற்றுநோக்கும் போது மனதளவில் ஒவ்வொரு உயிரினமும் எந்தளவுக்கு அந்த நிகழ்வை அனுபவித்துள்ளதோ அதனை பொறுத்தே காலம் தீர்மானிக்கப்படும்....கடிகாரமே இல்லாத உலகத்தில் இது எளிதாக விளங்கும்...