Sunday 22 November 2020

Time and Movement - காலமும் இயக்கமும்

Time and Movement - காலமும் இயக்கமும்
நேரம் முழுக்க முழுக்க இயக்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியது...இந்த இயக்கமானது எப்படி ஒவ்வொரு இடத்திலும் வேறுபடுகிறதோ அதே போல தான் நேரமும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு அமையும்..கிட்டத்தட்ட வானியல் ஜாதக கணிப்புகள் போல...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புகள்,திசை இயக்கங்கள் (இயக்கத்திற்கு திசை முக்கியமானது)...இப்போ எதார்த்த நிலையில் இதை பாப்போம் - 40 பேர் உள்ள ஒரு வகுப்பறையில் 1 மணிநேர வகுப்பு நடக்குது...இதில் இந்த ஒரு மணி நேரம் என்பது எல்லாருக்கும் பொதுவானது தான் ஆனால் அதை நமது மூளை ஏற்றுக்கொள்வதையும்,நமது முழு மனதின் பங்கேற்பும் தான் அவரவருக்கான நேர விரயத்தை தீர்மானிக்குது...அதாவது அந்த வகுப்பில் சிலருக்கு 1மணிநேரம் சீக்கிரமா கடந்த மாதிரி இருக்கலாம்,சிலருக்கு ரொம்ப நேரம் போன மாதிரி இருக்கும்,இன்னும் சிலருக்கு எப்ப டா முடியும் ங்குற அளவுக்கு இருக்கும்,சிலர் என்னடா இன்னிக்கு சீக்கிரம் முடிஞ்சது ன்னு நெனைப்பாங்க..நல்ல பரபரப்பா இயங்கிட்டு இருக்குற ஒரு தெரு முனையின் ஓரத்தில் நின்னு அங்கு நடக்கும் மனிதர்களின் நடமாட்டத்தை கவனிச்சோம் ன்னா ஒவ்வொருவருக்கும் இடையேயான தனித்தன்மை இயக்கத்தை பார்க்கலாம்..வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு வேலைகளை செஞ்சிட்டு இருப்பாங்க...குறிப்பிட்ட ஒரு காலம் அங்குள்ள அனைவருக்கும் வெவ்வேறு சுய அளவைகளில் நிகழும்..உதாரணத்துக்கு சில கஷ்டமான,சோகமான காலகட்டத்தில் நேரம் சீக்கிரம் போகவே போகாது...சில சந்தோஷமான காலத்தில் நேரம் டக்குனு போயிடும்...நாமலும் நமது மனதும் எந்தளவுக்கு ஒரு நிகழ்வை அனுபவிக்குது என்பதை பொறுத்து தான் இங்கு காலம் தீர்மானிக்கபடுது...(எனக்கு கூட சமீபத்தில் பிடிக்காத ஒரு வேலையை செய்யும்போது நேரம் போகவே இல்லை நானும் எவ்வளவு நேரம் கடத்தி கடத்தி பார்த்தும் நகரவே இல்லை ஒரு நிமிடம் ஒரு நாள் போல கடந்தது அந்த நேரத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் என் மனதில் ஆழப்பதிந்தது..அதே வேலையை அதே இடத்தில் இன்னொருமுறை தொடர்ந்தேன் ஆனால் அப்போ எனக்கு பிடிச்சு அதை செஞ்சேன் அந்த சமயம் எனக்கு நேரம் போதுமானதாக இல்லை அந்தளவுக்கு காலம் வேகமா நகர்ந்திடுச்சு...

ஒரு மனிதன் ஒரு 10அடி நகர்வதற்கு சில வினாடிகள் ஆகும்,அதே ஒரு எறும்பு கடக்குறதுக்கு நிமிடங்கள் ஆகும்,அதே ஒரு முயல் கடக்குறதுக்கு மனிதனை விட குறைவான நேரமே எடுத்துக்கொள்ளும்...இவை முழுக்க முழுக்க இயக்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு எடுத்துக்காட்டு ஆனால் இதை உற்றுநோக்கும் போது மனதளவில் ஒவ்வொரு உயிரினமும் எந்தளவுக்கு அந்த நிகழ்வை அனுபவித்துள்ளதோ அதனை பொறுத்தே காலம் தீர்மானிக்கப்படும்....கடிகாரமே இல்லாத உலகத்தில் இது எளிதாக விளங்கும்...

No comments: