Tuesday 11 August 2020

Uncertainty - நிலையில்லா கோட்பாடு

Uncertainty - நிலையற்றதன்மை
         
இந்த பரந்த உலகத்தில் புழு,பூச்சியில் ஆரம்பிச்சு..பரிணாமத்தின் உச்சம் ன்னு நினைக்கும் மனித குலம் வரைக்கும் எல்லாமே தொடர்ந்து இயங்கிட்டு தான் இருக்கு...இப்படி கட்டுபாடில்லாம இயங்கும் இயக்கமானது சீராக இருப்பதில்லை..நிலையற்ற தன்மையிலே அமைகிறது...இந்த நிலையற்ற தன்மை அனைத்தின் அடிப்படை கூறான அணுக்கரு வின் எலக்ட்ரான் இல் துவங்கி...இந்த ஒட்டுமொத்த உலக இயக்கத்தையும் வரையறுக்கிறது...நிலையற்ற அல்லது ஒழுங்கற்ற எலக்ட்ரான் இயக்கம்...ஒரு உலோக அல்லது ஏனைய தளத்தில் எலக்ட்ரான் இயக்கமானது ஒழுங்கில்லாமல் இஷ்டம் போல நகர்ந்து கொண்டே இருக்கும்...கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும்...இவ்வாறு சீரற்று பயணித்து கொண்டிருக்கும் ஒரு துகளின் நிலை(position) அல்லது உந்தம் ( பயணிக்கும் திசை) ஆகியவற்றை ஒரே நேரத்தில் கணிக்க முடியாது - இது தான் Heisenberg ன் நிலையில்லா கோட்பாடு...இந்த சீரற்ற இயக்கத்தின் விளைவு தான் நிலையில்லாமல் இந்த துகள்கள் இயங்குவது...இதற்கும் duality கும் நெருங்கிய தொடர்பு இருக்கு...துகளாக பயணிக்கும் ஒரு matter அலை தன்மையும் கொண்டிருக்கும்..இந்த துகளுக்கும் அலைக்கும் இடையேயான நிலைப்பாட்டை உறுதி செய்யவே இந்த இயக்கம் நோக்கம் போல குண்டக்க மண்டக்க இயங்கிட்டு இருக்கு...இதை அப்படியே மனிதனுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் பொறுத்தி பாப்போம்..

(அலை-மனம் : துகள்-உடல் ) இந்த ரெண்டு duality குள்ளேயும் மாட்டிக்கிட்டு நம்ம ஆன்மா படும் பாடு தான் இந்த இயக்கமே...துகளானது சூழ்நிலைக்கு ஏற்றார்போல் வேலை செய்யும்...ஆனால் அலை இயக்கம் எப்போதும் ஒற்றை செயல் முறையை கொண்டே தான் இருக்கும்...அலை வடிவில் இருக்கும் ஆன்மாக்கள் பிடிவாதம் கொண்டதாக இருப்பதன் காரணமும் இது தான் - சில விஷயங்களை தராவிட்டால் மன்னிக்கவே மன்னிக்காது..கிடா பலி கேட்பது - நேத்திகடன் செய்வது போன்றவற்றை கண்டிப்புடன் கேட்டு பெறுவது போன்றவை இதற்கு சான்றாக கொள்ளலாம்...இதே துகளாக இருக்கும் மனிதர்கள் அப்படி இல்லை ஏன்னா நாம மூளையினுடன் தொடர்புல இருக்கோம்...மூளை புலனுறுப்புகளுடன் தொடர்புல இருக்கு...எனவே  இதன் இயக்கம் வேற மாதிரி இருக்கும்...இதற்கு உதாரணமா ஒருத்தன் என்னதான் சிறுநீரை அடக்க மனதளவில் முயற்சித்தாலும் அவனது உடல் ஒத்துழைக்காது... காரணம் மூளை உடலின் துகள் நிலையை தக்கவைத்து கொள்ள முயற்சி பண்ணும்....இந்த மனதுக்கும் உடலுக்கும் இடையேயான சண்டை தான் இந்த சீரற்ற இயக்கம்....main road பக்கம் போய் ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க எவ்வளவு வாகனங்கள்,எவ்வளவு மக்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக வேகமாக இயங்கிட்டு இருக்காங்க...ஒரு சீர் இல்லாமல் போய்கிட்டே இருப்பாங்க..

இந்த நிலையற்ற தன்மையை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்க...நேத்து இரவு வரைக்கும் நல்லா பேசுனவன் இன்னிக்கு காலைல பேச மாட்டான்... ஒருவருசம் முன்னாடி நாம யார்கூட நெருக்கமா இருந்தோம் இப்போ யார்கூட நெருக்கமா இருக்கோம்...ஒரு நேரம் சிரிச்சு அன்பா பேசுறாங்க ஒரு நேரம் அவங்களே நம்மல கோவப்படுத்துறங்க...நேத்து பிடிக்கல ன்னு விலகி போனவங்க இன்னிக்கு நெருங்கி வந்து பேசுறாங்க..நேத்து வரைக்கும் கஞ்சிக்கே வழியில்லாம இருந்தவன் இன்னிக்கு கோடீசுவரன்,லட்சாதிபதியா இருந்தவன் இன்னிக்கு தினக்கூலி வேலைக்கு போறான்
அப்பப்பா என்ன ஒரு நிலையில்லா உலகு...

இந்த உலகம் துவங்கியது தொட்டே இந்த இயக்கம் இப்படி தான் இருக்கும்..இது துகளிற்கும் அலையிற்கும் இடையே நடக்கும் யுத்தம் இதுல சிக்கிக்கிட்டு ஏன் ஒடுறோம் எதுக்கு ஓடுறோம் எதுக்கும் சம்பாதிக்குறோம் என்ன செய்யுறோம் ன்னு அலஞ்சு திரியும்போதே வாழ்க்கை முடிஞ்சிரும்...

இந்த சீரற்ற நிலையை கணிப்பது கடினம் ஏன் சாத்தியாமே இல்லாமலும் போகலாம்...இது இப்படி இருப்பதால் தான் இந்த நிலையற்ற கோட்பாடு உறுதியற்றதாகவும் இருக்கு...இது தான் நிகழ்தகவியல் இத இன்னொரு நாள் பதிவிடுறேன்..

இதை சீர்தூக்கி பார்த்த சிலர் தான் இன்னிக்கு தத்துவ ஞானிகளா இருக்காங்க.. துகளையும் அடக்கி அலையையும் அடக்கி அந்த duality என்னும் நிலையை உடைச்சி சித்தம் தெளிஞ்சவங்க...

இருக்கு ஆனா இல்ல - இதுவும் இதன் அடிப்படையில தான் இயங்குது எல்லாமே நிகழ்தகவின் அடிப்படை கோட்பாடு தான்..50/50 நடைமுறை தான் இங்க நிலைபாட்டியலே..
இதை இன்னமும் தெளிவா சொல்ல தெரியல...

Uncertain relativity
சூழ்நிலைகளும்,உணர்ச்சி/உணர்வுகளும் தான் ஏதேனும் ஒரு நிலையை தேர்வு செய்யும் முயற்சியில் இந்த நிலையற்ற இயக்கத்தை நகர்த்துகிறது..உடல் ஒரு மூளையுடன் பிணைக்கப்பட்டுள்ளதால் ஆம்,இல்லை என்ற இரண்டில் ஒரு நிலைப்பாட்டை கண்டிப்பாக தேர்வு செய்தே ஆகணும்...அதனால் தான் உண்மை எது பொய் எது ன்னே தெரியாம பல இடங்களில் குழப்பம் மட்டும் மிஞ்சுகிறது...என்ன செய்யுறோமோ தெரியாது ஆனா எதையாவது செஞ்சு நம்மல நாமே திருப்தி படுத்திக்கணும்..நல்லதோ கெட்டதோஅதுமட்டுமன்றி இந்த duality இல் ஏதேனும் ஒன்றை ஏதோ ஒரு காரணத்துக்காக தேர்வு செஞ்சே ஆகணும்...கோவிலில் வரிசையில் நிக்கும்போது, ஒன்னு முன்னாடி நகரனும் இல்ல ன்னா வழிய விட்டு பின்னாடி போய்டனும் அத விட்டு நடுவுல நின்னா கண்டிப்பா எவனாச்சும் திட்டுவான்...ஏன்னா அவன் நகரனும் அவனால் யோசிக்க முடியாது..காரணம் அவன் அடுத்தகட்ட நகர்வுக்கு தள்ளப்படுறான் அது தான் நிலையற்ற சார்பு - சரியோ தப்போ ஏதோ ஒன்ன பண்ணியே ஆகணும் இல்ல ன்னா இங்க survive பண்ண முடியாது...

ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க..எவ்வளவு பெரிய உலகம் எத்தனை நாடுகள்,மதங்கள்,அரசியலமைப்பு,பணம்,பொருளாதாரம், போர்,புரட்சி - எல்லாம் எதுக்கு...சம்பந்தமே நிலை  இல்லாத நகர்வுக்காக மட்டுமே..அதுவும் ஒழுங்கற்ற இயக்கம்...

நிலையில்லா இந்த உலகத்துல நிலைகொள்ள முடியாது ன்னு தெரிஞ்சும் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள நினைக்கும் மக்கள் ; பாவம்,அவங்களுக்கு தெரியாது அதுவும் நிலையில்லாமல் தான் போகும் ன்னு - காரணம் நிலையில்லாமல் இயங்கும் இந்த நிலையில்லா கோட்பாட்டின் நிலைப்பாடு தான்,நாளைக்கு இதுவும் நிலையில்லாமல் போகும்..

Friday 7 August 2020

Inside Dream - Human Reaction

Inside Dream
HUMAN REACTION
இது உடலுக்கும்,மூளைக்கும் இடையே நடக்கும் ஒரு அனிச்சை இயக்கம் ன்னு சொல்லலாம்.அது என்ன ன்னா..பொதுவாக கனவுகள் ஒருவரின் எண்ணங்களை பொறுத்து தோன்றும் அதவது ஏக்கங்கள் - ஒருத்தன் உடலளவிலும் மனதளவிலும் ஏக்கங்கள் கொண்டிருந்தால் நிச்சயமாக அவனது உடல் மற்றும் மூளை இரண்டுமே அதை தீர்த்துக்கொள்ளவே முனையும்...உதாரணத்துக்கு தாகமா இருக்கும் குழந்தை தண்ணீரை தேடி ஓடும்..அது எங்க இருந்தாலும் அதை குடிக்க முயலும் இல்ல ன்னா அழுகும்..இது தான் ஏக்கம் இந்த ஏக்கம் தான் எண்ணங்களாக,ஆசையாக கடைசியில் கனவாகவும் உருவெடுக்குது..கனவு ன்னா நீங்க நெனைக்குற மாதிரி லட்சியம் கிடையாது..தூங்கும்போது ஏற்படும் கனவு..ஏக்கங்களால் அல்லது வேதனையால் நிறைந்த உங்களது மனது அதை தீர்த்துக்கொள்ளும் நோக்கிலே செயல்பட துவங்கும்..உதாரணத்துக்கு கார் ஓட்டனும் ன்னு ஆசையில் தூங்குறவனுக்கு நிஜத்திலே கார் ஓட்டிவிட்டது போல கனவுகள் வரும்..இது அவனது மூளை செயர்க்கையாக உருவகம் செய்யும் நிகழ்வு இதில் அவன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்...ஆனால்,இது சரியாக உருவாக காரணம் அவனது எண்ணங்களும் ஏக்கங்களும் தான்...ஒருவனது கனவில் பல மணிநேரங்கள் சில நொடிகளில் நடக்கும் இதெல்லாம் நம் மூளை நம் ஆன்மாவிற்காக உருவாக்கும் போலியான காட்சியமைப்பு..இந்த நிகழ்வின் போது உடல் உறுப்புகளின் பங்களிப்பு பெரிதாக தேவைப்படாது...காரணம் நமது ஆன்மா தான் கனவுலகில் வாழ்கிறது...ஆனால் நம் ஆன்மா கனவுலகில் அனுபவிக்கும் செயல்களுக்கு reaction நம்ம உடல்ல உணரலாம்...என்ன தான் கனவில் ஆன்மா மட்டுமே ஈடுபட்டாலும் கனவை தோற்றுவிக்கும் நமது மூளை உடலோடு தான் இணைஞ்சிருக்கு எனவே கனவில் நம்ம ஆன்மா அனுபவிக்கும் செயல்களுக்கு reaction நம்ம பூத உடலில் உணரலாம்...உதாரணத்துக்கு கடும் குளிரில் சுருண்டு போய் உறங்குபவனுக்கு குளிர்காய்வது போலவும்,போர்வைக்குள் சுருண்டு கொள்வது போலவும் கனவு வந்தால் அந்த இதமான கதகதப்பை அவன் உடலாலும் உணரலாம்...இது எல்லா புலன்களுக்கும் பொருந்தும்...கனவில் சாப்பிடுவது போல இருந்தால் நிஜத்தில் வாயை திறப்பது,வாயில் எச்சில் சுரப்பது..கனவில் அடிபட்டால் வலிக்காது ஆனால் வலிப்பதை போல மனது பாவனை செய்யும்..இங்க உண்மையில் எந்த சுவையும்,கதகதப்பான உணர்வும் தோன்றவில்லை எல்லாம் நமது மூளை உருவாக்கும் போலியான உருவகம்..மூளை உடலோடு இணைப்பில் உள்ளதால் அவை நம்மால் உணர முடிகிறது எப்படியோ...சந்தோஷமான கனவா இருந்தால் நல்லது தான்....இது போல நமக்கு தேவையான கனவுகளை உருவாக்கி அனுபவங்களை தெரிஞ்சிக்கலாம்...உடலால் உணர முடியாததை ஆன்மாவால் உணரலாம்...இதே போல ஒருவர் கணவுக்குள்ள இன்னொருவர் நுழைய முடியுமா ன்னு போக போக தெரிஞ்சிக்கலாம்....

 கனவுல சுச்சு போறதா நெனச்சு நிஜத்தில எத்தனை பேர் சுச்சு போனவங்க கைய தூக்குங்க (நான் first)

Inception
Inception - அதாவது பிறரது கனவில் ஊடுருவி அவர்களது மூளையில் உள்ள தகவல்களை திருடுவது தான் இந்த கதை...நிஜத்தில் இந்தளவுக்கு சாத்தியமா ன்னு தெரியல ஆனால்,பிறரது கனவில் நாம் ஊடுருவலாம் ங்குறது மட்டும் தெளிவா தெரியும்...எப்டி ன்னு தான கேக்குறீங்க~??..முதல்ல சாதாரணமாக ஒருத்தர் மூளையில் நமது கருத்துக்களை விதைப்பது/திணிப்பது குறித்து பாப்போம்...ஒருத்தர் கிட்ட போய் நீங்க ஒரு ஆப்பிளை நினைக்காதீங்க ன்னு சொன்னா அவர் கண்டிப்பாக ஆப்பிளை தான் நினைப்பார் (இது ஏற்கனவே நான் சொன்ன உதாரணம் தான்)...இதுல இருந்து என்ன தெரியுது ன்னா புலன்களின் வழியா நாம் குடுக்கும் சமிக்கை தான் அவரது மூளையில் பிம்பங்களை ஏற்படுத்தும்...இத அடிப்படையா வெச்சிக்கிவோம்... மனிதன் துகள்(உடல்) அளவில் இயங்கும் போது அலையாக ஊடுருவ முடியாது அதே சமயம் ஒருத்தர் தூங்கிட்டு இருந்தாலும் அவரது மூளையில் உண்டாகும் எண்ண காட்சிப்படிமங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை தோற்றுவிக்கும் இந்த அலைவரிசையில் சரியாக ஒன்றிப்போர் அவரது கனவில் தோன்ற வாய்ப்பிருக்கு...இதுக்கு முதலில் இருவரின் எண்ண அலைகளும் ஒன்றிக்கணும் அப்படி நடந்தா கனவில் தகவல் பரிமாற்றம் சாத்தியமாகும்..இதற்கு முதலில் உடலவிலும் மன அளவிலும் பல சோதனைகள் இருக்கு...மேலும் கனவில் நாம் தொடர்புகொள்ளும் நபருக்கும் நமக்கும் இடையேயான எண்ண பரிமாற்றம்(Telepathy) பொறுத்தும் அமையும்ஆனா இது இன்னும் ஒரு pseudoscience தான்...ஏன்னா சில மனோதத்துவ மருத்துவர்கள் இது அவங்க மூளை ஏற்படுத்தும் ஏக்கத்தினால் வந்த விளைவு உண்மையில் யாரும் கனவில் வருவது இல்ல ன்னு சொல்றாங்க..சரி மனிதரால் முடியாது ன்னா அலைவடிவமாக இருக்கும் ஆன்மாக்களால் சாத்தியம் தான...இந்த குறிப்பிட்ட அலைவரிசையில் ஆன்மாக்கள் ஒன்றிக்கும் போது...கனவு காண்பவர் மூளையில் ஆன்மாக்கள் ஏற்படுத்தும் பிம்பங்கள் பதியும் அவை கூற முனையும் விடயங்கள் சில சைகை அடிப்படையில்(குறிப்பிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட நிகழ்வுகள் நடப்பதை எச்சரிக்கும் ன்னு சொல்லுவாங்க) உணர்த்தும் இன்னும் சிலருக்கு முழு உருவமாக காட்சிப்படும் அந்த ஆன்மா அவரிடம் பேசும்...இதை தான் கிராமங்களில் இறந்தவர்கள் கனவில் வருவாங்க ன்னு சொல்லுவாங்க இதை உண்மை ன்னு சொல்லுவாங்க...கனவுல சாமி வந்து இதை செய்ய சொல்லுச்சு,அது கேட்டுச்சு ன்னு சொல்லுவாங்க...இது நினைவூட்டலாகவும் இருக்கலாம்..
தமிழகத்தில் குலதெய்வதோடு தொடர்புகொள்ள கனவு தான் சிறந்த வழி ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க...தென்மாவட்டங்களில் இது சாதாரணமா நடக்கக்கூடியது...கனவில் குறிகேட்டு சொல்லும் அறிய பழக்கமும் இங்க இருந்துட்டு தான் வருது... இதை பத்தி பொதுவுல விரிவா பேச கூடாது..ஆன்மாக்களோடு ஆன்மா தொடர்புகொள்ளும் ஒரு அற்புத நிகழ்வு அது...எல்லோருக்கும் அது சாத்தியப்படுவது அரிது.. கனவை ஒரு ஊடகமாக பயன்படுத்தி இந்தளவுக்கு தொடர்புகளை ஏற்படுத்த முடியும் ன்னா இதை வெச்சி சில கெட்டதும் செய்யலாம்...
பாம்பை கனவில் கண்டால் கெட்டது ன்னு சொல்லுவாங்க இதெல்லாம் சமிக்கை குறியீடு தான்..

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஒருவருக்கு எதிரா மற்றவர் உண்டாக்கும் எதிர்மறை ஆற்றல் (ஏவல்)..அவரது ஆன்மாவை தான் முதலில் பாதிக்க துவங்கும்..ஆன்மாக்களை தொடர்புகொள்ள சரியான நேரம் தூக்கம் (கனவு) தான்....இந்த நேரத்தில் தான் அந்த எதிர்மறை ஆற்றல் அந்த ஆன்மாவின் மூளையில் தேவையற்ற பிம்பங்களை தோற்றுவித்து அவரது புலன்களுக்கு பய உணர்வையும்,பெரிய ஒரு தாக்கத்தையும் குடுக்கும்...இதற்கு உதரணம் சொல்லணும் ன்னா நம்ம வீட்டில் உள்ள TV, cellphone எப்படி நம்ம மூளையை பாதிச்சு தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவற்றை உருவாக்குதோ அப்படி தான்....

நமக்கு சம்பந்தமில்லாத ஒரு ஆன்மா...
நம்மோடு...
கனவில் தொடர்பு கொள்கிறதே..?
இது எப்படி சாத்தியம்..?

இது தான் யட்சிணி/துர்தேவதை/தீய ஆன்மாக்களின் தீண்டல் ன்னு சொல்லுவாங்க - யாராலோ ஏவப்பட்டோ அல்லது தாமாக சுயதேவைக்காகவோ ஒருவரின் உடல் மற்றும் மூளையை தொடர்புகொள்ள நினைக்கும் ஆற்றல் அல்லது ஆன்மாக்களின் செயல் தான் இது...இது செய்வினை,ஏவல் போன்றவற்றில் அடங்கும்...தாமாக வருவது அதன் சுயதேவைக்காக அமையலாம்....