Thursday 5 August 2021

Artificial Programmes

Artificial Programmes
Mystical Bots
 செயற்கையாக கட்டமைக்கப்பட்ட விலங்குகள் - இவை ஏதோ புராண,திரைப்படங்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்கள் போல தெரியலாம்.ஆனால்,இவற்றை சற்று ஆழமாக கவனித்தோமானால் இன்றைய artificial intelligence தொழில்நுட்பமும் அதனை விட ஏதோ ஆற்றல் மிகுந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கலாம் என்பதும் தெளிவாகிறது.இந்த செயற்கையான விலங்குகள்/பூதங்கள் போன்றவை சிலரது சுய தேவைக்காக முதலில் கட்டமைக்கப்பட்டன.சில மாந்திரீக முறையில் programme செய்யப்பட்டு உருவமில்லா கட்டமைப்புகளும், Hybrid முறை போன்ற உருவத்துடன் கூடிய விலங்குகளும் உருவாக்கப்பட்டன.பெரும்பாலும் இந்த உருவம் கொண்ட விலங்குகள் பல உயிரினங்களின் கூட்டு கலப்பு வெளிப்பாடாக உருவாக்கப்படுகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக யாளி,சீனாவின் டிராகன்,ஒற்றை கொம்புள்ள குதிரை போன்றவை வெவ்வேறு அமைப்புகளில் உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள் இன்னமும் உலகம் முழுவதும் உள்ள கோவில்களில் காணலாம் ( இவை உருவாக்குபவரின் தேவைக்கேற்ப உடலமைப்புடனும்,செயல்பாட்டு உள்ளிணைப்புடனும் பல கைகள் பல கால் அசாத்திய உயரமான பெரிய உருவம் நீண்ட பற்கள் மனித தோற்றம் கொண்ட பெரு உயிரினம் போன்ற உருவ அமைப்புகள் மற்றும் உருவமே இல்லாத மாந்திரீக முறையில் கட்டமைக்கப்பட்ட working software களும் அடங்கும் ).இவற்றின் தற்கால எடுத்துக்காட்டாக   Liger,Tigon,Beefalo,Leopon -போன்றவை இரு வெவ்வேறு உயிரிகளின் கலப்பில் உருவானவை இதைப்போலவே தான் பண்டைய நாகரீகங்களில் விலங்குகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.இதனை இன்னமும் வலுப்படுத்தும் விதமாக இந்த hybrid விலங்குகளை போலவே இந்த யாளி,டிராகன் போன்றவையும் திறமையில்,வலிமையிலும் அற்புதமானவை அதேசமயம் இனப்பெருக்கம் செய்ய இயலாது.இதுவே அறிவியல்படியும்,ஆன்மீகத்தின்படியும் இவை இயற்கைக்கு எதிராகவே கருதப்படுது.

மேலும் இந்த கட்டமைப்புகள் விலங்குபோன்ற அமைப்பு மட்டுமல்லாமல் அசாத்திய மனிதர்கள் (Giants) போன்றவற்றையும் உருவாக்கி அதற்கான செயல்பாட்டை(programme task) அதனுள் பொருத்தி அதற்காகவே அதை இயங்க செய்துள்ளனர்.இதற்கு சான்றாக சிலப்பதிகாரம் சொல்லும் சதுக்கபூதத்தை எடுத்துக்கொள்ளலாம்.இந்த பூதத்தின் சதுக்கத்தின் நடுவே அமைந்திருக்கும் பொய் பேசுபவர்கள்,பெண்களுக்கு எதிராக நடந்து கொள்பவர்கள்,திருடுபவர்கள் போன்றோரை பிடித்து கொன்றுவிடும் இல்லையெனில் கட்டிவைத்து அடிக்குமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.இதை அப்படியே நவீன அறிவியலின் artificial intelligence உடன் ஒப்பிட்டு பார்த்தால் இதற்கிடையே ஒரு ஒற்றுமை உண்டு இந்த பூதத்திற்கு இரக்கம் கிடையாது என்ற கூற்று, அதாவது உணர்வுகள் அற்ற சொல்லக்கூடிய செயல்களை மட்டுமே செய்துமுடிக்க கூடிய தன்மை கொண்டது.இன்று நமது Traffic Signal களில் பொருத்தப்பட்டுள்ள Over Speed Analyzer மற்றும் Fastag போன்ற தொழில் நுட்பம் இவற்றிற்கும் இரக்கம் கிடையாது.இதை விட பெரிய எடுத்துக்காட்டு நம் நாட்டில் பொதுபயன்பாட்டில் இல்லை சீனா போன்ற வளரும் நாடுகளில் உள்ள cibil score system - ஒரு மனிதனின் நன்னடத்தை கொண்டு கண்காணிக்கும் திட்டம் இது அப்படியே இந்த பூதத்தோடு பொருந்தும்.

சரி இவையெல்லாம் பொதுவான பயன்பாட்டுக்கு.நமது computer க்கு போடப்படும் antivirus,வாகனம் தொலைந்தால் கண்டுபிடிக்க உதவும் tracking system, Anti theft,CCTV, Security Scanner போன்ற சுய பயன்பாட்டுக்கும் இது போன்ற பூதங்களையும்,விலங்குகளையும் கட்டமைத்து தோட்டங்களுக்கு காவலாகவும், அரண்மனை வாயில்காவலாகவும், செல்வங்களையும் முக்கிய இடங்களையும் காப்பதற்கு உருவமுடனோ அல்லது உருவமற்ற(invisible programme) நிலையிலோ வளர்க்கப்பட்டு வந்தன காலப்போக்கில் இவற்றின் செயல்பாடுகள் அதை கட்டமைத்தவனுக்கோ அல்லது அப்பாவி மக்களுக்கு தொந்தரவாக இருந்ததால் பலவும் கட்டப்பட்டிருக்கலாம் (deactivate) எஞ்சியுள்ளவற்றிடம் தற்காத்துக்கொள்ள அதை தெய்வமாக கொண்டு இன்றளவும் பலியிட்டு மக்கள் வணங்கி வருகின்றனர்.இந்த நிகழ்வை எந்திரன் படத்தோடு ஒப்பிட்டு பாருங்க கொஞ்சம் எளிமையா புரியும் ஒரு robot மனிதனுக்கு எதிரா திரும்புவது.இவ்வாறு உருவாக்கப்படும் செயற்கை கட்டமைப்புகள் உருவாக்கியவரின் சந்ததிகளை காக்கவும் செய்யும் வழிவழியாக அதை வணங்கவும் செய்வார்கள் ஆதியின் ஆதிக்கர்கள்.தில்லுக்கு துட்டு-2 படத்தில் கதாநாயகியின் மலையாள மாந்திரீக தந்தை தன் மகளை காக்க இது போன்ற ஒரு கட்டமைப்பை அதற்கு காவலாக வைத்திருப்பார்.

நவீன உலகில் போக போக இதுபோன்ற உருவுள்ள hybrid விலங்குகளின் பயன்பாடும்,robotics animals இன் பயன்பாடும் அதிகரிக்கும்.மேலும் நாம் இன்று பயன்படுத்தும்  உருவமற்ற google asst இல் தொடங்கி cibil score அளிக்கும் சதுக்கபூதமாகவும் உருவெடுக்கும் இந்த artificial intelligence

எகிப்தில் ஆரம்பித்து ஆதிக்க மனிதன் வாழ்ந்த அத்தனை பகுதிகளிலும் தமிழகம் உட்பட இந்த வழக்கம் இருந்துள்ளது.உலகம் முழுக்க வாணிபம் செய்வதிலே ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு முன்னோடியாக இருந்தவன் இந்த யாளி,பூதம் போன்றவற்றை வெறும் கட்டுகதயாக மட்டும் செய்திருக்க மாட்டான்.

செயற்கையாக கட்டமைக்கப்பட்ட உருவமற்ற உருவக விலங்கின பூதங்களை காட்டிலும் வடிவங்கள் அதீத ஆற்றலுடயது.Artificial Programme with Quantum Computing - அதிவேக செயல்பாடு கூடவே முறைப்படுத்தப்பட்ட சூத்திர(formula) செயல்பாடு.

ஸ்ரீ யந்திரம் - Nazca Lines - Crop Circles - CPU Mother Board - Holographic Projection

Monday 2 August 2021

Entropic Environment

Entropic Environment


வெப்பஇயக்கவியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் பகுதி தான் entropy. அதாவது ஒரு அமைப்பின் சீரற்றதன்மையை குறிப்பது.எளிதாக சொல்லணும் ன்னா வீட்டில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்துக்குவோம் தற்போது அதன் entropy - 0 அதே புத்தகங்கள் அறை முழுவதும் கலைத்து போடப்படுகிறது தற்போது குறிப்பிட்ட வேலை நடந்துள்ளது. எனவே,அமைப்பின் entropy அதிகரிக்கும். தற்போது entropy - 1 என வைத்துக்கொள்வோம்.இவ்வாறு உலகில் செய்யப்படும் எந்த ஒரு வேலைக்கும்/ஓய்வுக்கும் entropy என்ற மதிப்பு இருந்துகொண்டே வரும்.இந்த entropy வெப்பத்துடன் தொடர்புகொண்டது.எவ்வாறென்றால், பிரபஞ்சத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்விலும் இறுதிக்கட்ட ஆற்றல் வெளிப்படானது வெப்ப நிலையிலே வெளியிடப்படும்.அதே சமயம் "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது,ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்றலாம்" - அப்படி இருக்கையில் எந்தவொரு இயக்கமும் இறுதியில் வெப்பதிலேயே முடிவடைகிறது.நாம் உடலளவில் ஒரு பொருளை நகர்த்தினால் கூட நமது உடலில் சிறிது வெப்பம் உருவாக்கப்படும்,இதே தத்துவம் தான் அனைத்து இயந்திர இயக்கங்களுக்கும்.சரி திரும்ப புத்தக கதைக்கே வருவோம்.கலைக்கப்பட்ட புத்தகங்களின் entropy-1 எனில் திரும்பவும் அந்த புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படுகிறது தற்போது அதன் entropy-2 என அதிகரிக்கும்.அதாவது மீள் வினையோ,மீளா வினையோ ஒரு அமைப்பின் entropy ஆனது அதிகரித்துக்கொண்டே தான் போகும்.உண்மையில் சொல்லப்போனால் 0-entropy மதிப்பில் பிரபஞ்சத்தில் எந்தவொரு பொருளும் இல்லை.நமது கணக்கீட்டிற்காகவே ஒரு குறிப்பிட்ட நிலையை 0 என எடுத்துக்கொள்கிறோம்.ஒரு பொருள் ஓய்விலே இருந்தாலும் அது இயங்கிக்கொண்டு தான் உள்ளது அதற்கான குறிப்பிட்ட அளவு entropy உயர்ந்துகொண்டே தான் செல்லும்.ஏனென்றால்,ஒருவர் எதுவும் செய்யாமல் ஓய்வில் இருந்தாலும் இந்த பிரபஞ்ச பேரசைவு நம்மை ஆட்கொண்டுள்ளது - அது தான் String Theory. ஒரு மெல்லிய அதிர்வில் தொடங்கி பிரபஞ்சம் முழுதும் அதிர்ந்துகொண்டு உள்ளது.அந்த அதிர்வோடு இயைந்து ஆடும் ஆட்டம் தான் மனிதர்களின் பூவுலக வாழ்க்கை.entropy காலத்தை போல நேர்கோடாக பயணிக்க கூடியது.இது காலத்தோடு இயைந்த அதிர்வில் இருந்து விடுபட மேற்கொண்டு வினைகளை நிகழ்த்தாமல் இருக்கவே சில ஆன்மீகவாதிகள் இந்த அதிர்வுகளை விட்டு விலகி இருக்கும் யோக முறைகளை பின்பற்றி முடிந்தளவு தனது entropy மதிப்பை கூட விடாமல் பார்த்துக்கொண்டனர்.இது இயற்கைக்கு மாறே.entropy காலத்தோடு சேர்ந்து பயணிக்கும் இதனடிப்படையில் பார்த்தால் entropy தான் காலம்.அதாவது ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை செய்யும்போது அமைப்பின் entropy அதிகரிக்கும் அதேசமயம் காலமும் அதிகரிக்கும்.இதன்படி ஒரு கூற்று தெளிவாகிறது பிரபஞ்சத்தில் ஏற்படுகின்ற/பதிவுசெய்யப்படுகிற ஒவ்வொரு செயலும்/இயக்கமும் காலம்.காலத்தை எப்படி பின்னோக்கி நகர செய்ய முடியாதோ அதே போல தான் இயக்கங்களையும் entropy யையும் பின்னோக்கி நகர்த்த முடியாது.இதை காலபயணத்தோடு தொடர்புபடுத்தினால் - உடலளவில் மனிதன் காலபயணத்திற்கு ஏற்றவன் அல்ல ஏனென்றால் அதற்கு பெரும் முட்டுகட்டு இந்த entropy.எப்படி ன்னா இப்போ நாம உணவு உண்கிறோம் இத அப்படியே reverse timetravel பண்ணுறோம் ன்னு வைங்க.இப்போ விழுங்கப்பட்ட உணவு இரைப்பையில் இருந்து உணவு குழாய் வழியே வெளியேறும் இது மனிதருக்கு ஒப்பானது அல்ல கிட்டத்தட்ட வாந்தி எடுப்பது போன்று இருக்கும் இதுமட்டுமல்லாமல் வெப்பளவில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு ஒவ்வாது.பிரபஞ்சத்தில் பயன்படுத்தப்படும் ஆற்றல்கள் தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரேமாதிரி இருப்பதில்லை.100km திறனுள்ள என்ஜினுக்கு 1லிட்டர் பெட்ரோல் என இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அது 100km பயணிக்காது இல்லையேல் சில மில்லி பெட்ரோல் இழக்கப்பட்டிருக்கும் - energy loss. இதேபோல தான் இறுதியில் வெப்பமாக வெளியிடப்படும் ஆற்றல் இந்த பிரபஞ்சத்தில் சமன்செய்யப்பட்டு பயன்படுத்த இயலா ஆற்றல்களாக மாறிவிடுகின்றன.இதற்கு எடுத்துக்காட்டு வெப்ப ஆற்றலை பயன்படுத்தி நீரை கொதிக்க வச்சு பின்னர் அந்த நீர் ஆவியாக பிரபஞ்சத்தில் சமன் செய்யப்படுகிறது.இந்த ஆற்றலை பயன்படுத்தும் நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை ஒருவேளை இது கண்டறியப்பட்டால் ஆற்றலுக்கு பஞ்சமே இருக்காது.அதே சமயம் இந்த பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொரு entropy மாற்றங்களும் நினைவுகளாக (free energy) பதியப்பட்டுள்ளது.இந்த நினைவுகள் காலத்தால் கட்டப்பட்டு மீட்டெடுக்க முடியாமல் உள்ளது.இதற்கு எதிர் பரிணாமமாக இருளில் பயணித்தால் நினைவுகளோடு காலத்தையும் வென்றெடுக்கலாம்.