Friday 27 December 2019

ஆன்மா சுழற்சி (Part-1)

Heaven and Hell (part-1)
ஆன்மா சுழற்சி

சொர்க்கம் & நரகம் -- உலகின் பல சமயங்களும்,மதங்களும் போதித்து மக்களை பயத்தில் ஆழ்த்தி கட்டுப்படுத்தி வருகிறது...உதாரணமாக கிறிஸ்துவத்தில்,இஸ்லாமில் ஏதோ மைதானத்தில் வைத்து கேள்வி கேப்பாங்க ன்னு சொல்லுவாங்க,இந்து மதத்துல கருட புராண எண்ணெய் சட்டி, மற்றும் பல சமயங்கள் இதை போதிக்குது...சரி சொர்க்கம்,நகரத்துக்கு முன்னாடி ஒருவர் இறந்த பின்னாடி என்ன நடக்கும் ன்னு பாப்போம்(இதை பத்தி நெறய பேர் சொல்லிருக்காங்க - இருந்தாலும் என் கருத்து கொஞ்சம் மாறுபட்டது)...பூத உடலில் இருந்து உயிர் பிரிந்த பின்னர் அந்த ஆன்மா (உயிராற்றல்) கருப்பாக மாறி சுத்தவெளியை அடைகிறது(Outer Space)...இதை எளிதில் அறியலாம் யாராவது இறந்தா மேல போய்ட்டாங்க ன்னு தான சொல்றோம்...சரி சுத்தவெளியை அடையும் ஆன்மா பிரபஞ்சத்தோட கலந்திடும்...
இதுவரைக்கும் இருக்கட்டும், இறந்த (உடலை விட்டு பிரிந்த ) ஆன்மாவுக்கு புலன் உணர்வுகள் இருக்காது...ஆனால் ஆசைகள் இருக்கும்... அதன் ஆசையை தீர்த்துக்கொள்ள வேற உடலை நாடும் போது தான் பேய் பிடிக்குது ன்னு சொல்றாங்க...இதுவே நல்ல ஆன்மாவாக இருப்பின்...அதன் சந்ததிகளை காக்கும் பொருட்டு...அதன் வாரிசுகளை காக்க தொடங்கும்...இதுபடி பார்த்தால் சொர்க்கம் நரகம் ன்னு ஒரு ஊரு இல்ல...அங்க யாரும் கொடுமைகளை அனுபவிக்கல...சொர்க்கத்தில யாரும் சந்தோஷமா இல்ல...சொல்ல போனால் அப்டி ஒன்னு இல்லவே இல்ல...மக்கள் தீங்கிழைக்காமல் நெறியோட வாழ தான் அப்படி சொல்லபட்டுச்சு...ஆனால் இங்கே அதை வெச்சு பயமுறுத்திட்டு சுத்துறாங்க...

இது ஒரு சுழற்சி,இங்க நீயும் நானும் தனிப்பட்ட ஆள் இல்ல,உன் முன்னோர்களின் ஒட்டுமொத்த வடிவம் தான் நீ,நாளைக்கு உன் சந்ததிகளிலும் நீ இருப்ப...

No comments: