Sunday 29 December 2019

ஆன்மா சுழற்சி (part-2)

ஆன்மா சுழற்சி
part-2

சொர்க்கம்,நரகம் இல்ல ன்னா நமக்கான நன்மை,தீமை கணக்கு எங்க தீர்க்கப்படும்....கண்டிப்பா அது இந்த பூமியிலே தான் தீர்க்கப்படும்...உதாரணத்துக்கு ஒருத்தர் இறந்த பிறகு அவருடைய நன்மையும்,தீமையும் அவருக்கு ஈம சடங்கு செஞ்ச வாரிசுகளுக்கு போகும்...அதுலயும் யாரு மொட்டை அடிச்சு காரியம் பண்ணுறங்களோ அவங்களுக்கு தாக்கம் அதிகமா இருக்கும்...காரணம் மொட்ட அடிச்சு தனது உடலுக்குள் இறந்தவங்க உயிராற்றலை இறக்கி கொள்வாங்க....இது எங்கேயோ படிச்சது...முடியை மழித்து உச்சந்தலை வழியே தன் இறந்த முன்னோரின் ஜீவ ஆற்றலை வாங்கி கொள்வாங்க...அதன் பின் இறந்தவங்க நல்லவராக இருப்பின் நன்மை கிட்டும்... தீயவராக இருப்பின் கர்மாவின் அடிப்படையில் அவருக்கான நியாய கணக்கு அவரின் சந்ததிக்கு தொடரும்...இறந்தவரின் சந்ததிகள் பூத உடலோடு பூமியில் அனுபவிக்கும் கஷ்ட, நஷ்டங்களை கண்டு சுத்த வெளியில் கருப்போடு கருப்பாய் கலந்திருக்கும் அவரின்  ஆன்மா வருத்தம் கொள்ளும்...

(இப்போ நீங்க கேட்கலாம் அப்பன் தப்பு செஞ்சத்துக்கு அவன் புள்ளைய ஏன் தண்டிக்கணும் ன்னு...அப்பன் சேத்து வெச்ச சொத்து,பேர்,புகழ் மட்டும் மகனுக்கும் சேரும் ஆனால் பாவ புண்ணியங்கள் மட்டும் சேராதோ)

அப்பன் செஞ்ச பாவம் புள்ளைய விடாது - இந்த வழக்கு இன்னும் தமிழ்நாட்டுல இருக்கு.

இதே நல்லவங்களா இருப்பின் அவங்க கர்மா அவங்க சந்ததிக்கு நன்மையா அமையும்...இதனால் அவங்க இறப்பிற்கு பின்னும் கஷ்ட பட தேவையில்லை...

ஆகவே,சொர்க்கம் நரகம் லாம் கிடையாது வாழும்போது ஒழுக்க நெறியோடு வாழ்ந்தால்.. நமக்கு பின்னர் வரும் சந்ததியினர் நல்லா இருப்பாங்க அவ்ளோ தான் நான் சொல்ல வந்தது...

உதாரணத்துக்கு கல்யாணமான ஒருத்தன் குடிச்சிட்டு ஊதாரிய சுத்திட்டு செல்வங்களை அளிச்சு தீய வழியில் செத்து போறான்...இப்போ அவன் சந்ததி என்னாகும்...வருமையினால் நடுத்தெருவுக்கு வரும் இப்போ சொல்லுங்க அப்பன் தப்பா இருந்தா மகன் நல்லவனா இருந்தாலும் பாதிப்பு உண்டு தானே...

சரி மொத்தமா இப்போவே முடிச்சிகலாம்...

இறந்த உயிர்கள் மீண்டும் மனிதனோட தொடர்புகொள்ள நினைக்கும்...அது உன் முன்னோரா இருந்தா அது தான் குல தெய்வம் ன்னு சொல்லுவோம்(இறந்த எல்லாரும் குல தெய்வமாக ஆக முடியாது)...வேற யாரோ தீய எண்ணங்களுடன் இறந்திருந்தால் அவங்க தான்பா பேய் பிசாசு ன்னு சொல்றது...
தீராத கோபத்தோடு இறந்தவங்க இறந்த பின்பும் அடுத்தவர்களை துன்புறுத்த நினைப்பவங்க...

நல்லவங்களா கெட்டவங்களோ அவங்க நம்ம கூட தொடர்பு கொள்ள பயன்படுத்தும் கருவி தான் ரத்தம்....முன்னோர் வழிபாட்டில் நம்மலே பலி கொடுத்து அவங்களை அழைச்சு நமக்கு தேவையான கால சூழல்களை (குறி கேட்டல்&அருள்வாக்கு) கேட்டு பிடித்த பண்டங்களை படையலிட்டு அனுப்புவோம்...கெட்டவங்களா இருந்தா ரத்தம் உள்ள இடங்களில் அதுவே வந்து காத்து கிடக்கும் அதற்கான உடல் கிடைத்ததும் உள்ளே இறங்கி ஆட்டுவிக்கும் இது தான் பேயாட்டம்...

சரி கரிக்கடை பாய் க்கு ஏன் பேய் பிடிக்கல ன்னு கேட்கலாம்... இறந்த ஆன்மாக்களால் எல்லா இடத்துக்கும் வர முடியாது இடுகாடு ன்னு சொல்லப்படும் இடம்...சில முச்சந்தி...சில களத்துமேடு,கண்மாய் ஓரம்,சில பனைமரத்தில் கூட தங்கிடும் (பனைமரத்தில் பேயும் இருக்கும் & முனியும் இருக்கும்)  இதுக்கு தான் கறி வாங்க போகும்போது கரிக்கட்டை, மிளகாய் கொண்டு போறோம்...

சரி நம்ம முன்னோர் நினைவலை வழிபாட்டுக்கு வருவோம்...

இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு -நம்பித்தான் ஆகணும். இல்லாத, நீ பாக்காத சொர்க்க,நரகத்த நம்பும்போது உனக்கு முன்னாடி வாழ்ந்த உன் முன்னோரை நம்ப மாட்டியா....

ஏன் போன தலைமுறைக்கு முன்னாடி நெறியுடன் வாழ்ந்து இறந்த ஒரு மூதாட்டிய ( எங்க அப்பாவோட பாட்டி) தெய்வமா வணங்கி  வர்றாங்க...எல்லோராலும் அவங்கவங்க முன்னோரை தொடர்பு கொண்டு நெறியோட வாழலாம்...அவர்களின் நினைவலைகள் நம்மை வழிநடத்தும்... உங்களுக்கு தேவையான அருள்வாக்குகளை கேட்டு பெறலாம்.இது எல்லாருக்கும் சாத்தியமே...


1 comment:

Prabaroose said...
This comment has been removed by the author.