Wednesday 8 January 2020

Evil Eye - கண்திருஷ்டி

Evil Eye
கண்திருஷ்டி-கண்ணூறு

இதை பொதுவாக மூடப்பழக்கம் ன்னு சொல்லிட்டு வாராங்க..ஆனால் இதை  மூடப்பட்ட
பழக்கம் ன்னு தான் பொருள் கொள்ளனும்.

வீட்டின் முன், தொழில் செய்யும் இடத்தின் முன்,வாகனங்களில் ஒரு கருப்பு கயிரோ,எலுமிச்சம்பழமோ,நாக்கு தள்ளி கொம்புடன் கூடிய பொம்மையோ,தேங்காயோ அல்லது தடியங்காயோ வைக்க பட்டிருக்கும்..
இதன் பயன்பாடு என்ன ன்னு பாக்குறதுக்கு முன்னாடி திருஷ்டி எவ்வாறு உருவாகுது ன்னு பாப்போம்..

எண்ண அலைகள் க்கு எப்படி பிறரை கட்டுப்படுத்தும் வலிமை உள்ளதோ அது போல தான் மனித பார்வைக்கும் வலிமை உள்ளது (உதாரணம் : நோக்கு வர்மம்)..அடுத்ததாக வாயூறு அல்லது சாபம் ன்னு சொல்லலாம் ஒருவர் கூறும் இழிச்சொல் பிறரை தாக்குவது (உதாரணம் : கோவில்களில் மந்திரம் ஜெபித்தல்), காற்றனவு காற்றின் மூலம் கேடு விளைவிக்கும் ரசவாத பொருட்களை கொண்டு குறிப்பிட்ட மனிதரின் நிலையை குலைத்து நோய்வாய்ப்பட செய்தல் (உதாரணம்: மாந்த்ரீக ஏவல்)

இப்படி ஒருவரின் வளர்ச்சியை கண்டோ அல்லது அவர் மீது உள்ள தவறான எண்ணத்தினாலோ அல்லது அவர் செய்த காரியத்தை கண்டு வியந்தோ அல்லது முன்பகை காரணமாவோ அவர் மீது தீய எண்ணத்தோடு குவிக்கப்படும் பார்வையே கண் திருஷ்டி..அதே போல் தான் அவரை பலித்து பேசினாலும் அந்த சொற்கள் பிரபஞ்சத்தில் கலந்து அதற்கு சொந்தமானவருக்கு இடையூறு செய்யும் உடல்நலகுறைபாடு,வியாபார முடக்கம்,குடும்ப சிக்கல்,குழப்ப மனநிலை என கண்ணூறு செய்வோரின் எண்ணம் போல் அவருக்கு விளைவுகள் ஏற்படும்..

இதை தடுக்கும் வகையில் தான் கரிகட்டயுடன் கூடிய எலுமிச்சம்பழம் பயன்படுத்தபடுகிறது..
கரிக்கட்டை இயல்பாகவே இது எதிர்மறை ஆற்றல்களை வீட்டினுள் வாராமல் தடுக்கும்.. தேங்காயும் இதே போல் தான் எதிர்மறை ஆற்றல்களை உள்வாங்கி கொள்ளும் (தொழில் செய்யும் இடத்தை சுற்றி விடலை எரிவார்கள்)..வெறுக்கத்தக்க உறுவமுள்ள படங்கள் கீழே காட்டியவாறுகொம்புடன் கூடிய ஒரு உருவம்..இதுபெரும்பாலும் புது வீடு மற்றும் புதிய தொழிலகங்களில் காணலாம் இது பார்ப்பவரின் பார்வையை திசை திருப்பும் அதாவது அழகான ஒரு வீட்டை பார்த்து எதிர்மறையான எண்ணங்களை குவிக்கும் நேரத்தில் இத்தகைய பொம்மை உருவங்கள் பார்ப்பவர் பார்வையை திசை திருப்பும்..

"உலைவாயை மூடினாலும்,
ஊர்வாயை மூட முடியாது
                  - ன்னு பழமொழி இருக்கு...அதாவது ஒருவரின் செயலை கண்டு ஊரார் பேசும் வாயூறு (வியந்து போய் அவர் மீது எதிர்மறை எண்ணங்களை குவித்தல்) மிகவும் ஆபத்தானது.. ஒருவரின் எண்ண அலைகளே கொடியது இதில் ஒரு ஊரே எண்ணங்களை குவித்தால் என்ன ஆகும்..இதற்கு தான் அன்னதானம் ங்குற பேரில் அனைவரது கவனத்தையும் திசை திருப்புவாங்க.. இப்போவும் வசதி படைத்தவர்கள் ஏதேனும் புதிய லாபகர செயல்கள் செய்தால் ஊராருக்கு அன்னதானம் செய்வார்கள்...இதனால் அம்மக்களின் எண்ணம் அனைத்தும் திசை திரும்பும் ( மன்னர்கள் பலர் கோவில் கட்டும் போதும் இது நடந்தது,இன்றும் பல இடங்களில் இது தொடருது)

இப்படி பார்வையால்,வாயூரால் ஒருவருக்கு உருவாகும் தீய எண்ணங்களின் தாக்கம் ஒரு ரசவாத மருந்து போல மாறி வயிற்றில் உருவாகும் தொக்கம் எடுத்தல் ங்குற முறையால் அதை வெளியெடுத்து தெரிந்து கொள்ளாலாம்..இது பில்லி சூனிய ஏவலாலும் நிகழும்..
இந்த எதிர்மறை எண்ணங்கள் பிரபஞ்சத்தில் கலந்து அதற்கு சொந்தமான நபருக்கு இடையூறு ஏற்படுத்தும்...பகையாளிகளாக இருப்பின் இது முற்றிப்போய் ஏவல் எனும் சூனியத்தில் தான் முடியும் அதுகுறித்து அடுத்து பாப்போம்..
கரிக்கட்டை,வரமிளகாய், கருப்புகயிறு, எலுமிச்சம்பழம் - இவை திருஷ்டிக்கு மட்டுமல்லாமல் தீய ஆன்மாக்களிடம் இருந்து நம்மை  பாத்துக்கொள்ளும்..(இறைச்சி வாங்க போகும்போது கரிக்கட்டை,வரமிளகாய் கொண்டு போவது ஞாபகம் இருக்கட்டும்)

No comments: