Saturday 4 January 2020

எண்ணஅலைகளும்-நீர்மமும்

Emotional Frequencies andWater Molecule
எண்ணஅலைகளும்-நீர்மமும்


நீர் இரு ஹைட்ரஜன் ஒரு ஆக்சிஜன் சேர்ந்த மூலக்கூறு..இந்த அடிப்படை நீர்மமானது உயிர்களின் உணர்வுகளையும்,எண்ணங்களையும் பிரதிபலிக்க அல்லது கடத்தக் கூடியது...
அன்றாட மனித வாழ்வியல் ல இது எந்தளவுக்கு வேலை செய்யுது ன்னு இப்போ பாப்போம்..

காதலோடு தொடும்போது ஒரு வடிவிலும்,
கோபமாக தொடும்போது ஒரு வடிவிலும்,
பிரார்த்திக்கும் போது  ஒரு வடிவிலும்,
என பல வடிவங்களில் H-O-H நீர்மமானது தனது தன்மையை மாற்றி கொள்கிறது..
                   

சரி எப்படி நீர் எண்ணங்களை பிரதிபலிக்கும்??..ஒருவர் செய்த பாவங்களை கழுவும் கங்கை..அவரது எண்ணங்கள் அனைத்தும் கலைந்து தூயவராக மாற்றும் வல்லமை பெற்றது நீர்மம்...
சித்தர்கள் கமண்டலத்தில் உள்ள நீரை ஜெபித்து அதனை பிறர் மீது தெளித்து தான் ஆசீர்வதிப்பார்..அதாவது கமண்டலத்தில் உள்ள நீரில் நன்மையையோ?? தீங்கையோ??(சாபமிடுதல்) எண்ணி தெளிப்பார்..அவரது எண்ண அலைகள் அந்த நீர் மூலம் பிறருக்கு கடத்தப்படும்..அந்த எண்ணங்கள் அவர் மீது செயல்படும்..

படையலிட்டு வழிபாடு செய்யும் போது..ஒரு பாத்திரத்தில் எச்சில் படாத நீர் வைக்கபப்படும்..வழிபாட்டின் போது அந்த நீரை பிரார்த்தனை செய்து படையலின் மீது தெளிப்பாங்க.. இந்த படையலை ஏற்றுக்கொள்ள வேண்டி பிரபஞ்சத்தில் கலந்திருக்கும் முன்னோர் நினைவலைகளுக்கு வேண்டுதல் செய்வாங்க..

இதையே பெரிய level ல பல காரியங்களுக்கு பயன்படுத்தி வாராங்க.. கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில்..உள்ள லிங்கத்தின் மீது எப்போதும் நீரானது பட்டு கொண்டே இருக்கும்..இந்த நீரானது அங்குள்ள சிலரால் மந்திர உச்சாடனங்கள் செய்து பின்னர் லிங்கத்தின் மீது படுமாறு செய்து அவர்களது எண்ண அலைகளை பிரபஞ்சத்தில் பதிவு செய்கிறார்கள்..அதே போல் ஆதியோகி சிலை முன்பு தாமிரத்தால் ஆன லிங்கமும் அதை சுற்றி ஒரு சக்கர வளையம்(circuit) போன்ற அமைப்பு செய்யப்பட்டிருக்கும்..அந்த லிங்கத்திற்கு நாமும் நேரடியாக நீர் ஊற்றலாம்..ஆனால்,நம் எண்ணங்களை பதிவு செய்ய முடியாது.. காரணம் அங்கு எப்போதும் மந்திர ஜெபம் நடந்து கொண்டே இருக்கும்..நாம் சொந்தமாக வேண்டுதல் செய்ய முடியாத வகையில் அவர்கள் கூறும் மந்திரங்களை உச்சரிக்க சொல்வார்கள்..மறைமுகமாக அவர்கள் ஏதோ ஒரு காரியத்திற்கு எண்ண அலைகளை உருவாக்கி இப்பிரபஞ்சத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கிறார்கள்..

மிச்சிகன் மாகாணத்துல ஊர் நன்மைக்காக அந்த ஊர் நதில கிருஸ்துவ பிசப்புகள் ஒன்னு கூடி பிரார்த்தனை செய்து அந்த புனித நீரை ஆற்றில் கலந்தங்க..இதுவும் ஒரு வகையில் நல்ல எண்ண அலைகளை அனைவருக்கும் பரவ செய்யும் விடயம் தான்..

தமிழ்நாட்டில தென்மாவட்டங்களில் சில ஊர்களில் ஒரு வழக்கம் இருக்கு..என்ன ன்னா இரு குடும்பத்திற்கு இடையே பிரச்சனை எனில் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் தண்ணீர் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்..இதன் பெயர் தான் #நீர்_சத்தியம் ..அதாவது இவரும் எதிராளியின் வீட்டில் நீர் பருக மாட்டார்...காரணம், ஒருவருக்கு ஒருவர் பகை ஏற்படும் போது எதிரானவர் மீது தீய எண்ணங்கள் உருவாகும்...ஒருவேளை எதிராளி வீட்டில் நீர் பருகினால் இந்த எண்ண அலைகள் வேலையை காட்டிவிடும்..எந்தமாதிரி அவர் வீழ வேண்டும் என நினைத்தாரோ அதே மாதிரி எதிரி வீழ்வார்...சில சமயங்களில் இந்த நீர் சத்தியம் பரம்பரையாக தொடரும்
இப்படி இருக்கும் சூழலில் இந்த இரண்டு பகையாளிகளும் பொதுவாக உணவு, நீர் பரிமாறும் இடத்திற்கு போக மாட்டார்கள்...
இந்த சத்தியத்தை முறியடிக்க ஒரே வழி தான்..பகையாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தம் அவரவர் சந்ததிகளை அழைத்து அனைவரின் வீட்டில் இருந்தும் நீர் கொண்டு வரச்சொல்லி பொதுவான ஒரு இடத்தில் வைத்து ஒன்று கூடுவார்கள்(பகை தொடர்ந்த தலைமுறையினர் உயிரோடு இருக்கும்போதே செய்ய வேண்டும்)

1 comment: