Monday 27 January 2020

DNA-மரபுப்பொருள்

DNA-மரபுப்பொருள்

DNA - மனித செல்லின் உட்கருவில் அமைந்துள்ள ஒரு நுண்பொருள்..இது பொதுவாக மரபுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்துகிறது...

இதற்கு எடுத்துக்காட்டா பரம்பரை வியாதிகள்,பரம்பரை பழக்கம் ன்னு நிறையா இருக்கு...இதோட மேம்பட்ட பயன்பாடு ஒருவர் அனுபவித்த,உணர்ந்த விஷயங்களையும் அவருக்கு நடந்த நிகழ்வுகளையும் கடத்துவது...இப்போ இதுக்கு ஒரு உதாரணம் பாப்போம் முதல் தலைமுறையினர் செயற்கையான நோய்தடுப்பாற்றல்(vaccination) பெற்றிருப்பின் அது  எந்த வித உட்செலுத்தலும் இல்லாமல் இரண்டாம் தலைமுறைக்கு  கடத்தப்படுதல் (Artificial Immunization without Injection)...ஆனா இது எந்தளவுக்கு சாத்தியம் ன்னு சொல்ல முடியாது ஆனாலும் இது சாத்தியம் தான்...

இந்த மரபு கடத்தலுக்கு வேறு ஒரு உண்மை உதாரணம் பாப்போம்...நான் மண்பாண்டம் செய்யும் குயவன் குடில பிறந்தவன்..மண்பாண்ட கடவுள் சிலைகள் உருவாக்கத்தில் எங்க தாத்தாவின் தலைமுறை தான் சிறந்து இருந்துச்சு எங்க அப்பாக்கு சுத்தமா தொழில் தெரியாது..என்னோட துறுதிஷ்டம் 3 வது வயசுலயே நகரத்துக்கு குடிபெயர்ந்தோம்...ஆனால் யாரும் கற்பிக்காமலேயே 5 அடி உயரம் வரை சிற்பங்கள் வடிக்க முடிந்தது...இதற்கு காரணம் மரபணுக்கள் தான்..

மரபணுக்களை வைத்து சில துஷ்ட சம்பவங்களும் நடக்குது...அது தான் பில்லி, சூனியம்,ஏவல்.ஒரு மனிதனின் முடி,வியர்வை,கோழை(living cells) பொருட்களில் இருந்து கூட ஒரு மனிதனின் DNA   sample எடுக்க முடியும்...இதை அப்படியே சூனியம்,ஏவலுக்கு தொடர்புபடுத்தி பாருங்க..ஏவல்கள் செய்வதற்கும் எதிராளியின் துணி,முடி போன்ற பொருட்கள் தான் பயன்படுத்தப்படும்...இது சம்பந்தப்பட்ட DNA விற்கு சொந்தமானவரையும் அவரது ரத்த உறவுகளையும் பாதிக்கும்...அதாவது programming command...

இவ்வாறு மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும் நரம்புகள் வழி மூளைக்கு கடத்தப்பட்டு செல்களில் பதியவைக்கப்படும்...இந்த பதிந்த தரவுகள்(data ) சந்ததிகளுக்கு DNA மூலமாக கடத்தப்படும்...இந்த தகவல் அந்த சந்ததிக்கு தேவைப்படும் போது உதவும்...
எப்படியென்றால் உங்களுக்கு வாழ்க்கைல நடக்குற சில நிகழ்வுகள்/பிரச்சனைகள்/அனுபவங்கள் ஏற்கனவே நடந்த மாதிரி இருக்கும் அதற்கு intuition ஒரு காரணமா இருந்தாலும்...ஏற்கனவே முதல்  தலைமுறையினருக்கு அந்த நிகழ்வோ/பிரச்சனையோ நடந்திருந்தால் அது அவரது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி அதற்கான தீர்வு மற்றும் செயல்பாடுகளை அவரது மூளை செல்லில் பதிந்து கொள்ளும்...இந்த தகவல் சந்ததிக்கு கடத்தப்படுவதன் விளைவாக அதுபோல நடக்கும் விஷயங்கள் ஏற்கனவே நடந்தது போல் தோற்றமளிக்கும்...இது பல விஷயங்களுக்கு பொருந்தும் உங்கள் முன்னனோர் பார்த்த,உணர்ந்த,ருசித்த,நுகர்ந்த,கேட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்குள் பதிந்திருக்கும்...எடுத்துக்காட்டாக:- ஒரு குறிப்பிட்ட உணவு பண்டத்தை அப்பாவும்,மகனும்,தாத்தாவும் விரும்பி உண்பது போல...

இதில் ஒரு கெட்ட விஷயம் என்ன ன்னா முதல்தலைமுறையினன் தீய பழக்கங்கள் உடையவனா இருந்தால் அது அவனது சந்ததிக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும்(மொராட்டுகுடிகாரன் மகனுக்கு மதுவின் வாசனை பட்டாலே போதும்  அவனது உடல் செல்கள் வேலைசெய்ய துவங்கும்)

Current Updated Data's

மேல பாத்த தகவல் பரிமாற்றம் லாம் சந்ததி to சந்ததி நெடுங்கால இடைவெளியில் தான் பகிரப்படும்...அதாவது ஒரு கரு(குழந்தை) உருவாவதற்கு முன்னாடி வரை update செய்யப்படும்..பிறந்த பின்னரும் அப்பா உணரும் விஷயங்கள் மகனுக்கு கடத்தப்படும். இது தான் currently updated data's.இதை புரிஞ்சிக்கணும் ன்னா குவாண்டம் இயக்கவியல் பத்தி தெரிஞ்சிக்கணும்..ஒரு மூலகூறில் இருந்து பிரிக்கப்படும் இருவேறு அணுக்கள் வெவ்வேறு இடத்தில் இருப்பினும்,ஒன்றில் ஏற்படுத்தும் மாற்றமானது மற்றொன்றிலும் எவ்வித தொடர்புமின்றி மாற்றத்தை ஏற்படுத்தும்..இதன்படி இப்போ உங்க அப்பா ஒரு விஷயத்தையோ/நிகழ்வயோ உணர்ந்தால் அது குவாண்டம் கொள்கையின்படி உங்கள் உடல் செல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்..அப்பா மனசுல என்ன நெனைக்குறார் ன்னு மகனுக்கு தெரியாதா...இது எண்ணங்களுக்கு இடையேயான தொடர்பா இருந்தாலும் இது குவாண்டம் கொள்கையின்படி DNA-வாலும் அவ்வப்போது தகவல்கள் கடத்தப்படும்..அப்பா சோகமா இருந்தா நமக்கு மன அழுத்தம் ஏற்படும் அந்த சோகத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வை நோக்கி சிந்திக்க மூளை செயல்பட ஆரம்பிக்கும்..நான் வியாபாரம் பேசும்போது கூட எங்க அப்பா என்ன நெனைக்குறார்,என்ன பேசுவார்,அடுத்து என்ன செய்வார் ன்னு என் மூளை சொல்லும் பேசும்போது அவருக்கு தேவையான points கூட எடுத்து தருவேன்...

No comments: