Saturday 18 January 2020

Artificial Programming - செயற்கை கட்டமைப்பு

Artificial Programming - செயற்கை கட்டமைப்பு
இங்குள்ள அனைவரும் ஏதோ ஒரு programme க்குள் சிக்கி கொண்டவர்கள் தான்...அதை விட்டு வெளியேறுவது கடினம்..ஆனால் அந்த ப்ரோக்ராமில் நாம் அவர்கள்கூறும்படி task completion செய்யாமல்.நமக்கு தேவையானவற்றை மட்டும் நிறைவேற்றி கொண்டு..உள்ளிருந்தே எதிர் இயக்கம் அல்லது இயக்கமற்ற நிலையை கையாள வேண்டும்...பின்னர் மெல்ல மெல்ல அந்த ப்ரோக்ராமை விட்டு வெளியேறி..அவர்கள் உங்களை நெருங்காத வகையில் உங்களுக்கென ஒரு ப்ரோக்ராமை கட்டடமைத்து அதற்குள் நீங்கள் உங்கள் விளையாட்டை தொடங்கலாம்...

தொலைக்காட்சி ஆக சிறந்த ஒரு artificial programmer..இதன் விளைவாக தான் கருப்பு/வெள்ளை வேறுபாடு,சீரியல்கள் மூலம் குடும்பத்தில் குழப்பம்,விளம்பர மோகம்,etc...மேலும் தொலைக்காட்சியின் electromagnetic waves மனிதனின் மய நரம்பு மண்டலத்தை கட்டுக்குள் கொண்டுவரும்..இதற்கு United States Patentம் வாங்கப்பட்டுள்ளது..
Patent ID : US6506148B2

ஒரு சாதாரண தொலைக்காட்சியில் மட்டும் இந்தளவுக்கு உள்ளது...ஆனால் இங்கு சில மனிதர்கள் இயந்திரங்களின் உதவியோடு கட்டமைக்கபட்ட programmeகள் நம்மை உயிருள்ள பொம்மைகளாக நடமாட செய்யும்.அவர்களின் பசிக்கு நாம் உணவு உண்டும்,அவர்களின் தூக்கத்திற்கு நாம் கண்விழித்தும் கிடக்க வேண்டும்..

Programming :
கொஞ்சம் உங்க வாழ்க்கைல நடக்குற,நடந்த விஷயங்களை புரட்டி பாருங்க..நீங்க சரியா தான் பயணிக்குறீங்களா...நீங்க இப்போ நிக்குற இடத்திற்கு நீங்களா தான் வந்தீங்களா..இல்ல ஒரு artificial programme ல மாட்டி அது உங்களை இங்க கொண்டு வந்துச்சா???..

சரி programme... Programme ன்னு சொல்றேனே நாமெல்லாம் எந்திரங்களா நம் மீது programme செய்ய ன்னு நீங்க கேள்வி எழுப்பலாம்...அதற்கு முன்னாடி நமக்கும் எந்திரங்களுக்கும் நூல் இடை தான் வித்தியாசம்...நாம்(மனிதர்கள்) பிரபஞ்ச ஆற்றலால் படைக்க பட்டோம்...இயந்திரங்கள் நம்மால்(மனிதர்களால்) படைக்கப்பட்டது..மேலும் அண்டத்தின் எந்த ஒரு பொருளிற்கும் அடிப்படை கட்டமைப்பு அணு தான்...எனவே நமக்கும் எந்திரங்களுக்கும் நிறைய வித்தியாசம் அல்ல...

அடிப்படையான மெக்காலே அடிமை கல்வி programme பற்றி பார்ப்போம்...1வது முதல் 10ம் வகுப்பு வரை ஐந்து புத்தகம் தான் அதற்குள்ளே தான் ஒரு மாணவனின் தேடலும் அறிவும் அமையும்...அடிமை கல்வி எனும் programme இல் எங்கேயும் நகர முடியாது...அது போல தான் கல்லூரியில் பிடித்த ஒரு துறையில் சேர்ந்தாலும் அந்த துறை சார்ந்து மட்டுமே தேடலும் அறிவுசார் நுட்பமும் இருக்கும்...
(கல்லூரியில் முதல் 6 மாதம் இப்படி தான் இருந்தேன்..பின்னர் துறைசார் பாடங்களை குறைத்து சுயமாக எனக்கு தேவையான பிடித்தமான பாடங்களை கற்க துவங்கினேன்)

இதுபோல் தான் ஜனநாயகமும் இங்குள்ள மக்களின் மன நிலையை நன்கு அறிந்த ஒருவன் ஜனநாயகம் எனும் கட்டமைப்பையும் அதை வைத்து பிழைப்பு நடத்த அரசியல் கட்சிகளையும் அமைத்து programme செய்து கொடுத்துள்ளான்...அதன்படி அன்று முதல் இன்று வரை நாம் இன்னமும் அதே இடத்தில் தான் இருந்து வருகிறோம்.  ஆனால் அந்த programme இல் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அடிக்கடி update ஆகிக்கொண்டே உள்ளனர்..

அரசாங்கமும் ரேஷன் கார்டு,ஆதர்கார்டு,பான் கார்டு,வங்கி கணக்கு,ATM card, Credit card,etc..என பல வழிகளில் நம்மை கட்டமைத்து வைத்துள்ளது...
சற்று சிந்தித்து பாருங்கள் நீங்கள் தற்போது என்ன வேலை செய்து கொண்டுள்ளீர்கள்..அதன் மூலம் யார் யார் பயனடைவார்கள்..நீங்கள் சுயதொழில் செய்பவராக இருப்பினும் உங்கள் உழைப்பு ஒரு programme இல் தான் உள்ளது..அதன் output source இன்னொருவனுக்கே சாரும்...அல்லது அந்த உழைப்பின் input source இன்னொருவனுடையாதாக இருக்கலாம்...

புரியும்படியான சில Artificial Programmes:-
>>Apartment living areas
>>CBSE/ICSE/Matric syllabus
>>B.sc/M.sc/P.hd/Dip./B.com/ B.E study         structure
>>Bank/Credit/Debit
>>Marketing worker/IT worker/other corporate   workers

அன்று  இலவச கல்வி எனும் கட்டமைப்பை உருவாக்கினார்கள்..அதன் விளைவாக இன்று விவசாய தொழிலாளர்கள் குறைந்தனர்..விளைநிலங்களை விற்று அப்பார்ட்மென்டில் குடியேறினான்.. அவனுக்கு கொடுக்கப்படும் task ஐ மட்டும் complete செய்கிறான்..பணம் எனும் மற்றொரு கட்டமைப்பிற்குள் தொடர்பு கொண்டு வெளிவர இயலாமல் தொடர்கிறான் வாழ்வை..

 இதை இன்னமும் விரிவா சொல்லலாம்..ஆனா எனக்கு சொல்ல வரல...நீங்களே இதை எல்லா விஷயதோடும் தொடர்பு படுத்தி பார்த்தால் நிறையா புரியும்...நாம இப்போ வாழும் வாழ்க்கை கூட அடுத்தவனின் programme ஆக கூட இருக்க வாய்ப்பு இருக்கு.

No comments: