Friday 3 July 2020

Duality - இருமைத்தன்மை

Duality - இருமைத்தன்மை


இந்த பரந்த அண்ட வெளியில் பூமியை மட்டும் மையமாக கொண்டு பார்த்தோம் ன்னா (பூமியிலிருந்து) எல்லாமே இருமைத்தன்மையின் அடிப்படையில் தான் இருக்கும்... Ying Yang - ன்னு சொல்றதும் இது தான்..பலருக்கும் இதை பத்தி தெரிஞ்சிருக்கும்...எதிரெதிர் தன்மையை தான் இப்படி சொல்றாங்க..


அதெப்படி ன்னா 

 இரவு-பகல், நன்மை-தீமை,

இன்பம்-துன்பம்,இயற்கை-செயற்கை,

மேலே-கீழே,ஆண்-பெண்,

மனிதன்-மிருகம்,சாத்தான்-தேவதை,

கருப்பு-வெள்ளை ன்னு நீண்டுகிட்டே போகும்


இந்த விதி எல்லாவற்றிற்கும் பொருந்தும் இப்போ ஒரு செயலை செய்யுறோம் ன்னு வெச்சிக்குவோம் முடிவில் நமக்கு கிடைப்பது வெற்றி அல்லது தோல்வி இது நிகழ்தகவின் அடிப்படையில் நடக்கும் அதை பத்தி இன்னொரு நாள் பாப்போம்...இப்போ இங்க ரெண்டே விஷயம் தான் நடக்கணும் வெற்றி or தோல்வி..

வெற்றி or தோல்வி யை தவிர்த்து மூணாவதாக ஒன்னு இருக்குமே இரண்டுக்கும்  இடைப்பட்ட நிலை அதை விவரிக்க முடியாது,அப்படி ஒரு நிலையை ஏற்றுக்கொள்ளவும் முடியாது விளையாட்டில் கூட match draw ஆகிவிட்டால் திரும்ப ஆட்டம் தொடர்ந்து முடிவு தீர்மானிக்கப்படும்...


இப்படி தான் எல்லா விஷயமும் இந்த இருமை பண்பை சார்ந்து இருக்கு..இப்போ இந்த இரண்டு பக்கமும் இல்லாம ஒரு மனுஷன் இருக்கவே முடியாது..(கண்ணை மூடி யோசிச்சு பாருங்க நீங்க இப்போ இன்பமா இருக்கீங்களா இல்ல கஷ்டத்துல இருக்கீங்களா) கண்டிப்பா நீங்க ஏதோ ஒரு நிலையில் தான் இருக்கணும் அது தான் விதி..ஆனால் இந்த இரண்டும் இல்லாம இடைப்பட்ட நிலையில் ஒருத்தன் வாழ்ந்தா அவனை என்ன ன்னு சொல்றது???

அப்படியும் வாழ்ந்து இருக்காங்க பல சித்தர்களும்,ஞானிகளும் - இப்படி இரண்டுமற்ற நிலையில் வாழ்ந்ததால் தான் அவங்க இறை நிலையை அடைஞ்சாங்களா??..மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத நிலை இருந்தால் அதை வேற எப்படி சொல்வது..சரி கடவுள் ன்னு சொல்ல வேண்டாம் ஆனால் கண்டிப்பா அது ஒரு அசாத்தியமான நிலையாகவே இருக்கும் Super Humans மாதிரி...ஆனால் அந்த நிலையில் இருப்பவர்களால் இந்த பூமியில் அந்த நிலையில் கிடைக்கும் ஆற்றலை வைத்து ஒன்னும் பண்ண முடியாது..ஏன்னா இங்க வாழனும் ன்னா இந்த இரண்டில ஒன்ன தொட்டே ஆகணும்...

மனித மனதுளையும் இந்த duality இருக்கு ஒரு குழந்தை கையில கருப்பட்டியை குடுத்து சாப்பிட கூடாது ன்னு சொல்லிட்டு அவனை விட்டு சென்றால் அந்த குழந்தை மனசுல ஒரு பிரளயமே வெடிக்கும் சாப்பிடு ன்னு ஒரு பக்கம் குரல் கேக்கும் வேண்டாம் ன்னு ஒரு பக்கம் குரல் கேக்கும் ரெண்டுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு வேற வழியில்லாம எதன் ஆதிக்கம் அதிகமா இருக்கோ அந்த பக்கம் அவன் மனசு திரும்பும்..இது குழந்தைக்கு மட்டுமில்ல அனைத்து வயதினருக்கும் நடக்கும் ஏன்னா அது தான் duality (நம்மலே ஒரு விஷயத்தை துவங்கும் முன் செய்யலாமா வேண்டாமா ன்னு ஒரு யோசனை வருமே அது தான் இது)

இந்த இரண்டு நிலையும் ஒன்று தான் ஆனால் ஒன்றின் பக்கம் நின்று பார்த்தால் மற்றொன்று எதிராக இருக்கும் கண்ணாடி முன் நிற்பது போல் இரண்டும் ஒன்று தான் நிழலுக்கும் நிஜதுக்கும் இடையே மோதல் ஆனால் இரண்டும் ஒன்று தான்...

இந்த இரண்டை தாண்டி ஒன்று இருந்தால் மூணாவதாக அது இந்த duality மக்களுக்கு விசித்திரமாகவே தோன்றும் அதற்கான ஒரு சான்று தான் திருநங்கை - இவர்கள் ஆண் உடலும் பெண் உளமும் கொண்டவர்கள் அதாவது ஆண், பெண் தன்மையை தவிர்த்து மூன்றாவது பாலினம்,மூன்றாவது என்பதால் தான் மூன்றின் மடங்கான ஒன்பது என்ற கேலிப்பெயரால் அழைக்க படுகிறார்களோ என்னவோ...நான் முன்னர் சொன்னது போல் இவர்களையும் நாம் விசித்திரமாகவே பார்க்கிறோம் ஏனென்றால் அவர்கள் duality யை விட்டு வேறுபடுகின்றனர்...சரி அப்போ அவங்களுக்கும் இறை நிலையை போல சக்திகள் உள்ளனவா??? அதெல்லாம் தெரியல ஆனால், ஒன்னு மட்டும் உறுதி பிறக்கின்ற ஒவ்வொரு  குழந்தைக்கும் ஜாதகம் பார்க்கப்படும் இதற்கு தேவையான குறிப்பில் பாலினமும் உண்டு (சிலர் பாலினம் குறிப்பிடாமல் கூட எழுதுவார்கள் ஆனால் திருமணத்தின் போது அதை வைத்துத்தான் கணிக்க முடியும்) இப்போ திருநங்கையாக பிறந்த ஒருவருக்கு எப்படி ஜாதகம் எழுத முடியும்? மூன்றாம் நிலை என்பதால் இவர்களுக்கு கோள்களின் செயல்பாட்டில் பாதிப்புகள் இருக்காதா? இருக்காது ன்னு தான் நெனைக்குறேன் ..இப்படி கோள்களினால் பாதிப்பு இல்லாததனால் தான் வட இந்தியாவில் புதிய தொழில் துவங்குபவர்கள் இவர்களை அழைத்து தொடங்குகிறார்கள் போல...அது போக பண்டைய காலம் தொட்டே பல மன்னர்கள் தன் அரண்மனையில் இவர்களை போன்றோரை  வைத்துள்ளனர்..ஒருவேளை ஜாதகத்தில் இருந்து தப்பும் நோக்கமாக இருக்கலாம் (நமக்கு வந்த கெட்ட நேரம் செல்ல பிராணிகளை தாக்குவது போல)

அப்படியே நரசிம்ம அவதாரத்தையும் சேர்த்து பாருங்க நமக்கு விசித்திரமான உருவம் + நரன் கலந்த சிம்மம் + மேலும் கீழுமற்ற நிலை - இங்க இறை நிலை ன்னு கூட சொல்ல வேண்டாம்..ஏன்னா நரசிம்மரை ஏற்கனவே கடவுளாக தான பாக்குறாங்க..

என்னடா இந்து மத கருத்துகளை முன்னவெச்சே பேசுறான் ன்னு நினைக்காதீங்க ஏன்னா இதுக்கு உதாரணம் சொல்ல இதுல தான் பாக்க வேண்டி உள்ளது.மேலும் என் சூழலுக்கேற்ப இதை அடிப்படையாக வெச்சு தான் பலவற்றையும் தொடர்புபடுத்த வேண்டி இருக்கு.

No comments: