Friday 26 June 2020

Human Cell - Basal Mechanism

மனித செல் - அடிப்படை இயக்கவியல்
மனித செல் பத்தியும் அதிலுள்ள உட்கூறுகள் பத்தியும் நெறய படிச்சிருப்பீங்க...நம் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அது தான் மூலமே...இந்த செல்களின் உச்சபட்ச பயன்பாடுகளை முறையாக கையாண்டோம் ன்னா சில அசாத்தியமான விஷயங்களை கூட எளிதில் செய்து முடிக்கலாம்...அதுக்கு மனித மூளை செல்களான நியூரான்களின் உதவி தேவை...இந்த நியூரான்களும் உடல செல்களும் ஒரு சேர இயங்குவதன் மூலம் ஒருவன் திடீரென அசாதாரண ஆற்றலை பெறுகிறான்....சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஒரு வித்தை இருக்கும் அந்தரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட கத்தி அதன் கீழே ஒரு மனிதன் படுத்தவாறு இருப்பார்...மேலே கட்டப்பட்ட கத்தி அறுந்து கீழே உள்ள மனிதர் மீது விழப்போகும்..அந்த தருவாயில் பயிற்சி பெற்ற ஒருவர் அந்த கத்தியை தட்டி விடுவார்...இந்த நிகழ்வில் கண்,மூளை,கை பகுதியிலுள்ள செல்களும் நரம்பமைப்பும் ஒருங்கே செயல்படுகிறது...இதை ஓரிரு முறை செய்து பார்த்தாலே மூளையில் பதிந்து கொள்ளும்...அது தான் உடல செல்களின் சிறந்த பண்பு...இப்போ பலாப்பழத்தை நினைவில் கொள்ளுங்கள் அதன் மீதுள்ள முட்களை தொடுவது போன்ற உணர்வது நம்மால் செயற்கையாக பெற முடியும் (அதை நினைவு கூறுவதன் மூலம்)..அதே போல் குறிப்பிட்ட ஒரு உணவை நினைக்கும் போது அதன் சுவை நம் நாவில் ஊறும்... இதெல்லாம் செல்களின் வேலை தான்...பலாப்பழத்தை தொடும்போது கை செல்களும்,ருசியான உணவை உண்ணும்போது நாவில் உள்ள செல்களும் நினைவுகளை உருவாக்குகின்றன அப்படி உருவாக்க படும் நினைவுகள் மூளையில் பதியப்பட்டு...தூண்டப்படும் வேளைகளில் அவை நம் உடல செல்களில் நினைவுக்கு வந்து அந்த உணர்ச்சியை உணர செய்யும்..இவ்வாறு செல்கள் அனைத்தும் எப்பொழுதும் அதன் வேலைகளை மூளையில் சேமித்து கொள்கின்றது..உதாரணத்திற்கு - வெண்ணிலா ன்னு சொன்னவுடன் நாக்கில் வெண்ணிலா சுவையையும் மூக்கில் வெண்ணிலா மணமும்...
இவ்வாறு உணர்ச்சிகளை தூண்டுவதற்கு ஒரு காரணம் தேவை வெண்ணிலா என்ற சொல் தான் இங்கு key. அதுவே அந்த மணத்தையும் சுவையையும் தூண்டசெய்கிறது..இதுபோல உங்கள் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான, அற்புதமான,அழகான நிகழ்வுகளை மீள் நினைவுக்கு கொண்டுவருவதன் மூலம் அந்த நிகழ்வுக்கு திரும்ப செல்லலாம்...தெளிவா சொல்றேன் ஒருத்தன் காலைல நேரமா எந்திரிச்சு 10வது பரீட்சைக்கு படிக்கிறான் ன்னு வெச்சிக்குவோம்..இது ஒரு வருடம் நிகழும் நிகழ்வு இந்நேரத்தில் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் நினைவாக சேமிக்கப்படும்(படிக்கும் காலத்தில் உண்ட உணவு,கேட்ட இசை - காலை நேரங்களில் கோவிலில் ஒலிக்கும் இசை அவனை பெரிதும் பாதித்து இருக்கலாம்)..பரபரப்பா ஒரு விழாவுக்கு தயாராகும் போது,எல்லாருக்கும் சென்ற முறை விழா நடைபெற்ற  உணர்வுகளும் அங்கு அவர்கள் அனுபவித்த விடயங்களும் உணரலாம்...எனக்கு ஒரு பழக்கம் இருக்கு குறிப்பிட்ட பாடல்களை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் திரும்ப திரும்ப கேட்பது ...ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை பாடல்கள் மாறி மாறி update ஆகும்...இந்த பழக்கம் என் வாழ்வில் நடந்த அற்புதமான நிகழ்வுகளை மீட்டு மீண்டும் அதை அனுபவிக்க உதவுகிறது...உதாரணத்திற்கு கடந்த ஆண்டு நாங்க கல்லூரி சுற்றுலா சென்ற நிகழ்வு அற்புதமானது அந்த மூணு நாட்களும் நான் கேட்டது குறிப்பிட்ட 5,6 பாடல்கள் மட்டுமே..இப்போ இரவு நேரங்களில் கண்களை மூடி அந்த பாடல்களை திரும்ப கேட்கும்போது பாடல்வரிகளோட நான் சுற்றுலாவில் பார்த்த விஷயங்கள்,bus ல பண்ண கலாட்டா,dance ஆடுனது -ன்னு திரும்பவும் என்னை சுற்றுலாவுக்கே கூட்டிட்டு போய்டும் அந்த பாட்டு...இப்படி ஒவ்வொரு நினைவுகளை  தூண்டும் சாவியை கண்டுபிடித்து அதை முறையாக உணர முடிந்தால் ரொம்ப அதிர்ஷ்டசாலி தான்..இன்னும் சிலர் தான் காதலித்த/நண்பர்களோடு பழகிய காலகட்டத்தில் அவர்கள் கேட்ட பாடல்களை அவர்களின் பிரிவுக்கு பிறகு கேட்கும்போது அவர்கள் சந்தோசமாக வாழ்ந்த காலங்களை உடலளவிலும் உணரலாம்..நான் இசை ன்னு சொன்னது ஒரு வகையில் எனக்கான frequency தான்..இதுபோல ஒருவனின் கனவில்  அவனுக்கு அனுபவமில்லாத செயலை செய்ய வைத்தால் அது அவனது மூளையில் பதியப்படுவதோடு அந்த நினைவுகள் ஒவ்வொரு செல்களுக்கும் கடத்தப்படும்...இவ்வாறு அனுபவம் பெற்ற செல்கள் அதை செய்வது மிகவும் எளிது....கனவு காணும்போது வலி,சுவை போன்ற உணர்வுகளை உணர முடியாது ஆனால் அந்த வலியால் நாம் உண்டாக்கும் அழுகையை உணரலாம்(சிலர் தூக்கத்தில் அழுவது போல)..இதிலிருந்து கனவுகளில் நிகழும் நிகழ்வுகள் நம் உடல செல்களில் பதிகிறது...எல்லாரும் அவரவருக்கான கனவுகளை கட்டமைத்து அந்த செயலை செய்தால் எப்படி இருக்கும் ன்னு முன்கூட்டியே ஒரு சோதனை செஞ்சு பாருங்க

No comments: