Friday 3 July 2020

369 - Tesla(The Universal Code Numbers)

369 - Tesla(The Universal Code Numbers)

எண்ணியல் கோட்பாட்டில் முதல் இரண்டு எங்கள் இருமை தன்மையை விவரிக்கின்றன இவை தான் அடுத்தடுத்து வரும் எண்களின் ஒற்றைப்படை,இரட்டைப்படை தன்மையை துவக்குகிறது. இவ்விரு எண்களுக்கு அடுத்ததாக மூன்றாம் எண் அதாவது '3' - இது முதலில் உள்ள இரண்டையும் சாராது உள்ளது போல் மூன்றாம் தன்மையை உணர்த்துவது போல் அமைகிறது.10th Man Rule போல.எனவே தான்,இந்த மூன்றாம் எண்ணும் அதன் மடங்குகளும் பிரபஞ்ச ரகசியங்களை கொண்டிருக்கும் திறவுகோலாக கருதப்படுகிறது.இதை தான் அறிவியலாளர் டெஸ்லா-வும் முன் வைக்கிறார். சாதாரணமா எந்த ஒரு எண்ணயும் மூன்றுமுறை கூட்டி கிடைக்கும் எண்களின் கூட்டுத்தொகை மூன்றின் மடங்காகவே அமையும்.அதேபோல 3,6,9-ம் வாய்ப்படுகளில் ஒவ்வொரு சமன்பாட்டின் கூட்டுத்தொகையும் 3,6,9 என்ற வகையிலே அமையும்.இது கொஞ்சம் மாயாஜாலம் போல இருக்கலாம்.இதை இன்னமும் நமது அன்றாட வாழ்விலும், பண்டைய நாகரீக மதங்களின் அடிப்படையிலும்,அறிவியலிலும் ஆழமாக தேடிப்பார்த்தால் நிறைய ஆச்சரியமூட்டும் எதர்த்தங்களை பார்க்கலாம்.மேலும்,இவை பிரபஞ்ச ரகசியத்தின் தொடர்புகள்.சாதரணமாக ஒரு வட்டம் 360கோணம் இருக்கும் இதன் கூட்டுத்தொகை 9 அதே போல அரைவட்டம் 180கோணம் இதன் கூட்டும் 9.அடுத்து கால்வட்டம் இதன்கூட்டு கோணமும் 9.இதை அப்படியே நகர்த்தி புவியுடன் ஒப்பிட்டால்.புவியின் ஒரு வருட சுற்றுக்காலம் என்பது 365.25 நாட்கள் இதனை கூட்டி கிடைக்கும் கூட்டுத்தொகையும் இறுதியில் 3 தான்.1 முதல் 9 வரை உள்ள எண்களை கூட்டி கிடைக்கும் கூட்டுத்தொகையும் 9 தான்.இது ஏதோ விசித்திர எண்கணித விளையாட்டை போல இருக்கலாம் ஆனால் இந்த 369Hz அதிர்வுகளை பயன்படுத்தி அசாத்திய சில அற்புதங்களை காணலாம்.இது மூளையோடு தொடர்புகொண்டு மனிதனில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.இந்த எண்களை காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தோமேயானால் ஒரு நிமிடத்தில் 60நொடிகள்.இதன் கூட்டு 6.அடுத்து ஒரு மணியில் 3600நொடிகள் இதன் கூட்டு 9.அதே போல ஒரு நாளையில் கிடைக்கும் நொடிகளின் கூட்டு 9.இதை மேலும் மதங்களில் புகுத்தி பார்த்தால் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் 786குறியீடு இதன் கூட்டுத்தொகையும் 3. மேலும் மூன்றாம்பிறை நிலாவும் சூரியனில் இருந்து மூன்றாவதாக அமைந்திருக்கும் வெள்ளி கோளும். வெள்ளி கோளானது பிறைநிலாவின் மேல் நட்சத்திரம் போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இயல்பாகவே மூன்றாம் பிறை பார்ப்பது மனதிற்குள் ஒரு அமைதியை உண்டாக்கும் என்பது கூடுதல் சிறப்பு.மேலும் நவகிரகங்கள்,நவராத்திரி,உடலில் நவதுவாரம்,நவமி,அருப்படைவீடு,அறுசுவை உணவு,அறுங்கோணம்(பென்சீன் வளையம், தேன்கூடு),முக்கண் தேங்காய்,திரிசூலம்,மும்மூர்த்திகள்,முப்பெரும்தேவிகள்,அம்+உம்+நம்,முக்கனி,(படைத்தல்,காத்தல், அழித்தல்),மூவேந்தர்கள் என பல இடங்களில் 369 குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.ஆல்பா,பீட்டா,காமா கதிர்வீச்சுகள் மற்றும் ஒமேகா3,6,9 கொழுப்பு அமிலங்கள் என பல அறிவியல் கூறுகளும் இத்துடன் அடங்கியுள்ளது.சமஸ்கிருத ஓம்-இல் கூட 3 என்ற எண்ணை கொண்டே இருக்கும்.அதுபோல ஓம் என்ற தமிழ் சொல்லிலும் மூன்று ஆறுகள் இடம்பெற்றுள்ளன.மேலும் அ+உ+ம் ஆகிய மூன்றின் கூட்டு தான் ஓம்.இவற்றை எளிதில் புரிந்துகொள்ள இதனுடன் இணைக்கப்பட்ட படங்களை உற்றுநோக்கவும்.மேலும் இதன் ஆழத்தை அறிய நீங்கள் காணும் இடங்களில் உள்ள 369 எனும் எண்களின் ரகசியத்தை கண்டறிய துவங்குங்கள்.

Earth Rotation  Vs 369

Time Vs 369
Slope Degree Vs 369

Multiplication Matrix of 369
Number Addition 369

Islamic Mythology Vs 369
Hinduism Vs 369
Essential Good Fats Vs 369

No comments: