Friday 17 July 2020

Momentum - இயக்கம்

Momentum
இயக்கம் 
Action - Reaction

இயங்குதல் தான் ஒரு தொடரை(வாழ்க்கை னும் வெச்சிக்கலாம்) அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்..  அனைத்து இயக்கமும் ஏதோ ஒரு வகையில் முன் செய்த வினையின் தொடராகவே அமையும் அதாவது எந்தவொரு இயக்கமும் முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த இயக்கம் முடிந்தாலும் அது உருவாக்கும் பக்க கிளை இயக்கங்கள் நீடித்து கொண்டே செல்லும்...அதாவது chain reaction..
ஒரு செயல் பல செயல்கள் உருவாக அடிப்படையாக அமைவது...இந்த 
இது அடிப்படை புரிதலுக்காக தான்..உண்மையில் நம் வாழ்க்கையில் நாம் செய்யும் ஓவ்வொரு சிறிய விஷயங்களும் பெரிய மாற்றத்தை குடுக்கும் அது நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் அது நிகழ்தகவை பொருத்தது.. Chaos theory இல் ஒரு முக்கோண விளையாட்டு உண்டு ஒரு முக்கோணத்தின் உள்ளே ஏதோ ஒரு இடத்தில் புள்ளி வைக்கணும் பின்னர் அதிலிருந்து கோணத்தை நோக்கி ஒரு புள்ளியை குறிக்கணும் இதை தொடர்ந்து பல முறை செய்தால் முக்கோணத்தின் உள்ளே ஒரு முக்கோணம் போன்ற அமைப்பு உருவாகும்..இது ஒரு மூடிய பகுதியில் நிகழும் ஒழுங்கான மாற்றம்...இதன்படி ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது குறிப்பிட்ட நிகழ்வு வட்டத்தையோ குறி வைத்து சில மாற்றங்களை செய்தால் அதன் விளைவு ஆச்சர்யபடும் அளவிற்கு அமையும்..எளிமையா சொல்லணும் ன்னா(கற்பனை தான்) சுற்றுலா போய்ட்டு ஒரு குடும்பம் ஊர் திரும்பிட்டு இருக்காங்க அப்போ அங்க ஒரு குழந்தை சாக்லேட் கேட்டு அடம்பிடிக்குது அத வாங்கி தர மறுக்கும் பெற்றோர் இந்த ஜுஸை குடி ன்னு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கயில குடுக்குறாங்க அதை பிடிக்க தெரியாத குழந்தை ரோட் ல போட்றுச்சு இவங்களும் ஊர் வந்தாச்சு ஆனால் அந்த பாட்டில் விழுந்த இடத்தில் 5 மணி நேரம் கழிச்சு ஒரு விபத்து நடக்குது,காரணம் இந்த பாட்டில் தான் அதுல 2 பேர் இறந்து போறாங்க அவங்க இறந்ததால அவங்க குழந்தைங்க அனாதையா நிக்குறாங்க - இந்த நிகழ்வு ல ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மாற்றம் நடந்திருந்தா இதன் விளைவு வேற மாதிரி இருந்திருக்கும்..இந்த மாதிரி யாரோ எவரோ செய்யும் சின்ன செயல்கள் இந்த சமூகத்தில் பல சிக்கல்களை கொண்டு வந்திரும்...இதை தான் butterfly effect ன்னு உருட்டுறாங்க... ஆனா நான் இங்கே சொல்ல வந்தது இயக்கங்களை பத்தி...அதாவது இந்த பூவுலக இயக்கம், பூமி சுத்துறது கூட ஒரு இயக்கம் தான்..

உலகின் முதல் மனிதனில் ஆரம்பிச்சு இன்னிக்கு வர பல தலைமுறைகள் கடந்து இந்த இயக்கம் தொடர்ந்து கிட்டு இருக்கு இதன் விளைவு தான் பணம்,புகழ்,கல்வி,பொருள் எல்லாமே...சாதாரண ஒரு LED light இயங்குறதுக்கே மின்சாரம் ங்குற ஆற்றல் வேணும்...அப்டி இருக்கையில் இவ்ளோ பெரிய உலகம் இயங்குறதுக்கு தேவையான ஆற்றல் எங்கிருந்து கிடைக்குது..எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆற்றல் தேவை...ஒரு குழந்தை கருவறையில் உருவாவது பெற்றோரின் ஆற்றலில் தான் அதாவது வெற்றிடத்தில் ஆற்றல் உருவாக்கம் போல - மின்னூட்டங்களை பயன்படுத்தி...இவ்வளவு பெரிய உலகம் இயங்க தேவையான ஆற்றல் எங்கிருந்து கிடைக்குது...அப்படியே ஆற்றல் கிடைத்தாலும் அதை இயக்குவது யார்...பூமிக்கே இப்படி ன்னா பிற கோள்களின் இயக்கம்?...அதற்கு தேவையான ஆற்றல்?...

இதன் தொடக்கத்தை போலவே முடிவும் மர்மமானது எப்பொழுது இந்த இயக்கம் துவங்கியது என கண்டறிந்தால் தான் இதன் முடிவை கணக்கிட முடியும்...இவ்வளவு நாள் இப்பிரம்மாண்ட அமைப்பிற்கு தேவையான ஆற்றல் மூலம் தான் இதற்கு விடை...

இங்க நகர்வின் ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது..ஆனால் அதை சூட்சுமமாக கையாளனும் சில நேரங்களில் நன்மையில் முடியும் சில நேரங்களில் தீமையில் முடியும் அதுவும் மூடிய ஒரு வட்டத்தின் உள் மட்டுமே.

அண்ட வெளியில் இடக்கங்கள் அனைத்தும் ஆற்றலை அடிப்படையாக கொண்டு தான் இயங்குது.அதாவது ஆற்றல்கள் எங்கும் கொட்டி கிடக்குது..இது தான் வெற்றிடத்தில் ஆற்றல் உருவாக்கம்.. உதாரணத்துக்கு புவியில் வளிமண்டலம் - சைக்கிள் காத்து அடிக்கும் பாம்பு காலியான இடத்தில் உள்ள வளியை பயன்படுத்தி காற்று ஆற்றலாக மற்றும் யுக்தி..
இதை தான் zero point energy ன்னு சொல்றாங்க...ஒன்றுமில்லா ஆற்றல் ன்னு சொல்லலாம்..இது எங்கும் இருக்கும் என்ன தான் ஆற்றல்கள் பலவாக பிரிந்து கிடந்தாலும் அடிப்படையில் ஆதி மூல ஆற்றல் ஒன்று தான் அது பரிணாமித்தே பலவாக உருவெடுத்துள்ளது...இது மட்டும் சாத்தியம் ன்னா பெட்ரோல் போடாம bike ஓட்டலாம்,current இல்லாம bulb எறிய விடலாம்...

உதாரணமா மனிதருக்கு பல வழிகளில் ஆற்றல் கிடைக்கிறது உணவு,சூரிய ஆற்றல்,காந்த சக்தி,பிராண வாயு, cosmic energy...இது பலவகையாக இருந்தாலும் எல்லாமே ஆற்றல் தான் ஒன்றின் chain reaction தான் இன்னொன்னு...அது போக எல்லாம் interconnect also...

No comments: