Saturday 14 March 2020

illustic-Simulation (மாயா)

illustic-Simulation

இங்க எல்லாமே ஒன்னு தான்,இந்த தொடர்ச்சிக்கு முடிவும் இல்ல தொடக்கமும் இல்ல...(அனைத்தும் ஒன்றே)

0,1,1,2,3,5,8,13,21......
ஒண்ணுமே இல்லாத ஒன்னு,இன்னொரு ஒண்ணுமே இல்லாதததோடு சேர்ந்து,ஒண்ணுமே இல்லாத புதிய ஒன்னா உருவாகும்..
0+0=1 (அதாவது ஒண்ணுமே இல்லாத 1)
இப்போ இந்த ஒண்ணுமே இல்லாத ஒன்னும் இன்னொரு ஒன்னும் சேர்ந்து புதிய ஒன்ன உருவாக்கும்..
1+1=2
இந்த ஒன்னுமற்ற நிலை ஒன்னுமற்றதால் இணைந்து விரிவடைந்து கொண்டே போகும் முடிவு கிட்டாது..
அதே சமயம் இந்த ஒன்னுமற்ற அமைப்பை எவ்வளவு சுருக்கினாலும் சுருங்கவே செய்யும் தவிர முடிவு கிட்டது..
அது தான் பிரபஞ்சம் இங்கு எல்லாமே ஒன்னு தான் அதாவது ஒன்னுமற்ற ஒன்னு..

அடிப்படைல,அதை இன்றைய பௌதீகவாதிகள் அணு ன்னு வரையறை செய்யுறாங்க.. ஆனால்,அதுவும் ஒன்றுமற்ற ஒன்று தான்..

உயரம்,நீளம்,அகலம்,வடிவம்,நிறம்,எண்ணம்,நிலை,சாதி,மதம்,நாடு, இனம்,மொழி,இருண்மை தன்மை,பொருள்,உயிருள்ள,உயிரற்ற,etc என அனைத்து பிரிவினைகளையும் ஒதுக்கி விட்டு பார்த்தால் இங்க ஒன்னு தான் மிஞ்சும் அதுவே அந்த ஒன்றுமற்ற நிலை (அதற்கு அடிப்படை தான் அணு)..

ஆனால் அந்த ஒன்றுமற்ற நிலையை ஒருபோதும் நம்மால் உணர முடியாது(இனம்,மொழி,நாடு, சாதி,ஆண், பெண், ங்குற பேத உணர்ச்சி இருக்கும் வரை)..அதை கடக்கணும்-கடந்து ஒன்றுமற்ற நிலையை அடையனும் அதாவது சித்தர்கள் மாதிரி..அது ஒரு துகள் நிலை ன்னு கூட சொல்லலாம்..

அவ்வளவு எளிதில் நம்மால் உணர முடியாது..ஏனென்றால் நம்ம மூளை ஒரு சாத்திய கூறை மட்டுமே ஒரு நேரத்தில் நம்பும்..நம்மால் ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பயணிக்க முடிந்தாலும்(super position) நம் மூளை ஒரு இடத்தை மட்டுமே உண்மை என நம்பும்..

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஒன்றுமற்ற அணுக்களும் ஒரு புள்ளியில் இங்குள்ள எல்லாம் ஒன்றே என உணர்ந்தால்??? அதாவது நீ,நான் என அனைத்தும் ஒன்றே என்ற நிலை வந்தால்???அனைத்து அணுக்களும் ஒன்றே என்ற நிலைப்பாட்டை உணர்ந்தால்???


No comments: