Friday 20 March 2020

எண்ணக்குவியம்(குவியல்)- Focused Intentions

எண்ணக்குவியம்(குவியல்)
எண்ணங்களின்-கூட்டு-வெளிப்பாடு

மனிதர்களின் எண்ண அதிர்வுகள் அவரது மனநிலையை பொருத்து அமையும்,அதாவது சந்தோசமாக இருக்கும் போது நேர்மறையான அதிர்வுகளும், சோகமாக இருந்தால் மாறாக எதிர்மறையான அதிர்வும் ஏற்படும்..

எண்ணங்கள் மிக அற்புதமானது,அதிலும் பலரது ஒருமித்த எண்ணங்கள் அசாத்திய செயல்களை செய்ய கூடியது..உதாரணத்திற்கு ஒரு அறையில் 100 பேர் இருக்காங்க ன்னு வெச்சிப்போம்..அங்கு ஒரு சிவப்பு நிற ஆப்பிள் வைக்கப்படுகிறது..அறையில் உள்ள 99 நபர்கள் அதை பச்சை நிறம்(போலியான ஒரு எண்ண-அதிர்வை உருவாக்குதல்) என கூறுகிறார்கள்..தற்போது அந்த மீதம் இருக்கும் ஒருவர் குழப்ப படுகிறார்..அவருக்கு அவர் மீதே சந்தேகம் ஏற்படும்..ஒரு கட்டத்தில் அவரும் பச்சை என ஒப்புக்கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை..(இது ஒரு உதாரணத்துக்கு சொன்னேன் இதையே தூக்கிக்கிட்டு கமெண்ட் பக்கம் வர கூடாது)

இதை இன்னும் எளிமையா சொல்லலாம்..5 நண்பர்கள் கல்லூரியில் படிக்கிறாங்க.. அதில் ஒருவனுக்கு வீட்டில் பிரச்சனை சோகமா/கோவமா இருக்கான்..அப்டியே அவன் கல்லுரி வரான்..அங்க உள்ள 4 நண்பர்களும் சந்தோஷமா சிரிச்சு பேசிட்டு இருக்காங்க.. இப்போ அந்த நேர்மறையான அதிர்வுகள் நிறைந்த வட்டத்துக்குள்ள வந்ததும் அவனது மனநிலை மாறும்..அதாவது வலிமையான எண்ணங்களின் ஆற்றலும்/ஆதிக்கமும் அதிகம்..

குவியல்(or)குவியம் -இதன் பொருள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை ஒன்றாக குவிப்பது.ஒளி மூலத்திலிருந்து பல கதிராக கிடைக்கும் ஒளியை ஒன்றாக குவிப்பதன் மூலம் lesar போன்ற வலிமையான/அசாதாரண கதிர்வீச்சுகளை பெறலாம்..
இதேதான் எண்ணங்களுக்கும்,பொதுவாகவே எண்ணங்கள் வலிமையானது என்றும்,எண்ணங்களால் எதையும் சாதிக்க முடியும் என்றும் பல இடங்களில் பார்த்திருப்போம்..ஒருவரின் எண்ணமே இவ்வளவு விஷயங்களை செய்கிறது எனில் பலரின் எண்ணங்கள் இணைந்தால்???
அந்த எண்ணங்களின் குவியல் பேராற்றலாக வெளிப்படும் அது தான் எண்ணங்களின் கூட்டு வெளிப்பாடு..
இது உண்மையில் சாத்தியமா என்றால்,சாத்தியம் தான் ஏனென்றால் அதை பல்வேறு கோணத்தில் பயன்படுத்தி பல அசாத்திய நிகழ்த்தி கொண்டுதான் உள்ளனர்..

"உங்களை மாதிரி ஆளுங்க இருக்குறதால தான்,மழை பெய்யுது" - இது பொதுவா ஒருவரை புகழ்வதற்காக கூறும் சொல்லாடல்..இதன் அர்த்தம் என்னவென்றால் நல்ல எண்ணங்கள் படைத்தவர்களால் தான் மழை பெய்கிறது என்பது தான்....அதாவது நல்ல எண்ண-அதிர்வுகள் மழையை ஈர்க்கும்..மரங்கள் இயற்கையிலே நல்ல எண்ண-அதிர்வுகளை வெளியிடக்கூடியவை அதனால் தான் மரம் வளர்த்தால் மழை கிடைக்கும் ன்னு சொல்றாங்க...இதையே நம்ம ஊர் மாரியம்மன் திருவிழாவோடு ஒப்பிட்டு பாருங்க..ஊர் மக்கள் அனைவரும் ஒன்னா கூடி மழை வேண்டி பிரார்த்தனை செய்து ஒருமித்தாமாக எண்ண-அதிர்வுகளை வெளிபடுத்தும்போது இந்த எண்ணங்களால் மழை ஈர்க்கப்படும்..(தேர் திருவிழா போன்ற விழாக்களில் மக்கள் கூடும் வேலையில் மழைபொலிவு ஏற்படும் இது பல இடங்களில் இன்னும் நிகழ்கிறது)..
இதை அப்படியே கிருஸ்துவத்தில் பொருத்தி பாருங்கள்...இரவு ஜெபம்,கூட்டு பிரார்த்தனை, உபவாச கூட்டம்,ஆராதனை என பல பேர்களில் நடக்கும்..ஒருமித்த எண்ணங்களை உருவாக்கும் முயற்சி தான் இது...
அதே போல தொழுகை,கூட்டு தொழுகை பெருநாள் அன்று நடக்கும்.
புத்த பிக்குகளும் பலர் ஒன்றாக சேர்ந்து ஒரு கூம்பு வடிவ அமைப்பின் உள் அமர்ந்து ஒருமித்த எண்ண-அலைகளை அந்த கூரான முனையின்  மீது குவிய செய்வார்கள்...இந்த எண்ணக்குவியம் ஒரு கதிர்வீச்சாக மாறி அந்த எண்ணத்தை நிஜத்தில் நிகழ செய்யும்...

எண்ணங்கள் மட்டுமல்ல,சில நேரங்களில் எண்ணிக்கையும்(அதிகபடியான எண்ண-குவியல்) முடிவை தீர்மானிக்கும்

No comments: