Monday 21 January 2019

சர்வம் தாள மையம்


சர்வம் தாள மையம்

இசை - பழங்காலம் தொட்டு மனிதருக்கும் இசைக்கும் தொடர்பு இருந்து வருகிறது...
இசைக்கும் செவிபறைக்கும் மட்டுமே தொடர்பு இல்லை...இசைக்கும் பிரபஞ்ச உடலுக்கும் தொடர்பு உள்ளது. ஒவ்வொரு விதமான இசை இசைக்கும் போதும் ஒரு வித அதிர்வலைகள்(vibrational waves)உருவாக்கப்படுகிறது.இதுவே மனித உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக:- மணி ஒலிக்கும் போது தெய்வீக உணர்வு,இழவு வீட்டு பாடல் கேட்கும்போது ஒரு வித சோக உணர்வு,சிரிப்பை கேட்டால் சந்தோஷ உணர்வு...etc
நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு ஏற்றால் போல் அதிர்வலைகள் வெளிப்படும்...இந்த அதிர்வலைகள் தான் நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் கட்டுப்படுத்துகிறது.
உதாரணமாக பத்து பேர் உள்ள ஒரு குழுவில் ஒருவன் பய உணர்வை வெளிப்படுத்தினால் அது அனைவரையும் கொன்று விடும்...
இதே போல் தான் இசையை வைத்து நம் உடல் மற்றும் மனது மற்றும் சுற்றத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம்...
ஓம்-ஆமென்-அம்மா இது போன்ற சில ஒலிகள் நல்ல அதிர்வலைகள் உண்டாக்கும்...
இதன் மேம்பட்ட பரிணாமமே இசையை வைத்து உடல் மற்றும் மன கோளாறுகளை தீர்ப்பது...
இது குறித்து தான் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது...மேலும், பல நினைவலைகளையும் இசையின் மூலம் வயப்படுத்தி பாதிப்படந்தோர் நலம் பெற்று வருகின்றனர்...
இதன்படி,இசை வெளிப்படும் போது ஒரு வித அதிர்வலைகள் வெளிப்படும்...

No comments: