Thursday 24 September 2020

Genetic Induction - மரபணு தூண்டல்(DNA)

Genetic Induction - மரபணு தூண்டல்

ஏக்கங்கள் - இங்க எல்லாமே இதன் அடிப்படையில் தான் செயல்படுது இதை அடுத்த கட்ட பரிணாமத்துக்கு எடுத்துச்செல்ல காலம் அவசியமாகுது அதுதான் தலைமுறை இடைவெளி இந்த இடைவெளியில் நாம் நமது மரபுகூறினுள் புகுத்தும் அத்துணை விஷயங்களும் தேவையின் உச்சத்தை தொடும்போது முழுமையாக வெளிக்கொணரும்...

மரபு பொருள் - DNA வின் செயல்பாடு மிகவும் அபரிவிதமானது ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நிகழும் அத்தனை நிகழ்வுகளும்/அனுபவங்களும் உடல செல்களால் உணரப்பட்டு DNA வில் பதியப்படுகிறது...இதை தனக்கு தேவையான நேரத்தில் வெளிக்கொணருவது தான் ஒரு சவாலான விஷயம்...DNA வில் பதிந்துள்ள தரவுகளை வெளிக்கொணர பல காரணங்கள் இருக்கு...அதில் முக்கியமான ஒன்னு ஏக்கமும்/தேவையும் தான்...ஒரு உயிரின் ஏக்கம் தான் அதன் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது...அதே சமயம் அந்த உயிரினம் தன்னை தானே நொந்து கொண்டால் அதன் வளர்ச்சி குன்றவும் வாய்ப்பிருக்கு...இது டார்வினிய கொள்கையை சார்ந்து இருக்கும்...கிட்டத்தட்ட பரிணாமம் போலவே ஒரு பரம்பரையில் பல தலைமுறைக்கு  முன்னிருந்து ஒரு ஏக்கம்/தேவை இருந்தால் அது அடுத்தடுத்த தலைமுறைகளில் வளர துவங்கும்...சில தலைமுறைகள் கழித்து அந்த ஏக்கம் அபரிவிதாமாக பரிணாமிக்கும்... உதாரணத்துக்கு பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட(ஒடுக்கப்படுறோம் ன்னு நம்ப வைக்கப்பட்ட) ஒரு சமூகம் நான் முன்னேற வேணும் ன்னு ஏக்கத்தை உருவாக்கியதான் விளைவாக இன்றைய தலைமுறையில் அந்த குறிப்பிட்ட சமூகம் சமுதாயத்தில் சிறந்து விளங்குகிறது..இதற்கு நிகழ்கால உதாரணமாக தமிழர்களையே எடுத்துக்குவோம் சில ஆண்டுகளுக்கு முன்பு  பக்கத்து நாட்டில் ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டோம்..ஆனால் இப்பொழுது தமிழன் என்று சொன்னாலே உலகளவில் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு பற்றும் உணர்வும் வந்திருக்கு...இப்போது இருந்த சூழல் அப்போ இருந்திருந்தா???...அன்று வீழ்ந்ததன் ஏக்கம் தான் இன்னிக்கு நமக்கு அடையாளத்தை உருவாக்கியிருக்கு...சரி என்னடா DNA பத்தி சொல்லிட்டு திடீர் ன்னு ஒரு பெரிய இனத்தை வெச்சு பேசுறானே ன்னு தான பாக்குறீங்க...இங்க DNA வழித்தொடரா இருந்தாலும் சரி..ஒரு இனக்கூட்டமா இருந்தாலும் சரி..ஏக்கங்கள் என்பது எண்ணங்கள் தான்..மீண்டெழ வேண்டும் என்ற எண்ணமும் தேவையும் தான் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர்த்துது...இதை ஒரு தனிமனித பரம்பரை கட்டமைப்பில் பார்த்தால் எத்தனையாவது தலைமுறையில் எப்பொழுதோ ஒருவர் குறிப்பிட்ட ஒரு செயலை சாமர்த்தியமாக செய்து காட்டியிருப்பார்...அந்த நிகழ்வு அவர் மரபில் பதிந்திருக்கும்..இப்போ நிகழ்காலத்தில் அவரது வம்சாவளி ஒருவருக்கு இதே போல சிக்கல் ஏற்படுது ன்னு வெச்சிக்குவோம் இப்போது அவன் மூளை தீவிரமா சிந்திக்க துவங்கும் மூளையின் அனைத்து தரவுகளையும் புரட்டி பார்க்கும் அப்போது தான் பலதலைமுறைகள் முன்பு தனது முன்னோர் செய்த செயல் ஞாபகத்துக்கு வரும்..ஆனா,அது எப்படி ஞாபகத்துக்கு வந்தது ண்ணே தெரியாம போய்டும்...

இதனடிப்படையில் தான் இங்குள்ள பரம்பரை குலங்கள் இயங்குகிறது...குறிப்பா சொல்லணும் ன்னா மண் சிற்பங்கள் செய்யும் குடியில் பிறந்தவன் நான்...நான் சிறு வயதிலேயே நகரத்துக்கு வந்துவிட்டதால் எனக்கும் அந்த மண் சிற்ப வேலைகளுக்கும் தொடர்பே இல்லாமல் போயிடுச்சு..திடீரென  ஒருமுறை  ஒரு விநாயகர் சிலை வடிக்க தொடங்கினேன் அப்போது தான் எனக்கே தெரியாமல் ஏதோ பல காலம் பழகிய வேலை போல மடமட வென ஒரு சிலையை வடித்தேன் இதில் என்னவொரு அதிசயம் ன்னா அது என் முன்னோர் சிலை வடிக்கும் முறையிலே இருந்தது.. 

இது சாதரணமாக DNA வில் பதிந்துள்ளவை...இதை இன்னமும் ஆழமாக வெளிக்கொணரும் போது தான் நமது முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வயும் நமக்கு தேவையான பொழுது வெளிக்கொணரலாம்..இது சில நேரங்களில் அனிச்சையாக நடக்கும்..இருப்பினும் ஏக்கம்(எண்ணம்) இருந்தால் அதிக வீரியத்துடன் வெளிப்படும்...குலதெய்வ கோவிலுக்கு சென்று வேண்டும்பொழுது நமக்கு உடலவிலும் ஆற்றலும்/ஆறுதலும்/மன அமைதியும் கிடைப்பதை உணரலாம் இதுக்கு காரணம் நாம வேண்டுவது நம்மகிட்ட தான்..நமக்குள்ள அடங்கியிருக்கும் நமது முன்னோர்கிட்ட...

இதற்கு முக்கியமா தனக்கான ஏக்கங்களையும் தேவைகளையும் மனதளவில் உணரனும்...அந்த சிந்தனையை மனதில் ஆழமாக விதைக்கணும்..அப்படி செய்யும்போது நீங்க உங்க முன்னோர்களை உணருவீங்க...இப்பவும் உங்க உடலில் பல லட்சம் செல்கள் இருக்கு அதனுள் மரபுகூறும் (DNA) இருக்கு...எப்பொழுது  எந்த செல்லில் உள்ள நினைவு உங்களுக்கு உதவுது ன்னு தான் சொல்ல முடியாது...

இந்த பதிவுக்கு எடுத்துக்காட்டா சொல்லணும் ன்னா சில சாதிய ஒடுக்குமுறைகள்,பல தலைமுறையா வறுமையில் இருந்தவன் இப்போ செல்வந்தனா மாறியது,உடலவில் கூட குட்டையான வம்சாவளி ஏக்கத்தின் விளைவாக உயரமாக மாறுதல்...
இதிலுள்ள ஒரு பாதகமான விஷயம் என்ன ன்னா எண்ணங்களை விதைப்பதில் கவனம் வேணும் ஏக்கத்தினால் முன்னேற நினைப்பவன் வெற்றி பெறுவான்... அதே ஏக்கத்தினால் நொந்து போய் வருந்தி கொண்டால் அவனது மரபும்(DNA) வருந்தி முன்னேற நினைக்காமல் மேலும் மேலும் மோசமான நிலையை எட்டுவான்..

2 comments:

POTHI PERUMAL. C said...
This comment has been removed by the author.
POTHI PERUMAL. C said...

Osm bro, really DNA Extract human Strategy part.