Saturday 10 October 2020

Expansion of Everything - அனைத்திற்க்கான விரிவாக்கம்

Expansion of Everything - அனைத்திற்க்கான விரிவாக்கம்

உயிர்களின் இயக்கவியல் அடிப்படை நகர்தல் முக்கியமான ஒன்று அதாவது அடுத்தகட்டத்தை நோக்கிய நகர்வு...மனிதன் உட்பட அனைத்து பூவுலக ஜீவராசிகளும் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயத்திற்க்காகவும் இந்த பிரபஞ்சத்தில் இயங்கிக்கொண்டுள்ளன...இந்த உலகம் தோன்றியதில் இருந்து இங்கு அனைத்தும் பெருக்கம் அடைந்து கொண்டே தான் இருக்கு...இது ஒரு சமாமன பிரபஞ்ச நியதி ன்னு கூட சொல்லலாம்..மனித பரிணாம வளர்ச்சியை கூட இதுக்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம்...ஒரு செல் உயிரில் ஆரம்பித்து பூச்சி,ஊர்வன,முதுகெலும்பி,பரப்பன ன்னு இப்போ உச்சகட்டமா மனிதன் ல வந்து நிக்கிறோம் இதுவும் இதோட நிக்க போறது இல்ல இன்னமும் சில காலங்கள் கழிச்சு இதுவும் மாறிட்டே தான் போகும்...இவை எல்லாம் ஒரே ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் தான் நிகழுது...தன்னை விரிவுபடுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் தான் அந்த ஏக்கம்...இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் தலையாய நோக்கமே இது தான் expansion - தன்னை தானே விரிவுபடுத்தி கொள்ளல்...கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் ல ஆரம்பிச்சு உருவத்தில் பெரிய யானை வரை எல்லாமே தனது சந்ததியை பெருக்குவது தான் நோக்கமாக வெச்சிருக்கு...இது பிரபஞ்சத்தின் தன்னிச்சையான ஒரு இயக்கம்...இந்த உலகம் தோன்றியதாக சொல்லப்படும் சில கருத்துகளில் கூட ஆரம்பத்தில் வெரும் நெருப்பாக இருந்ததாகவும் பின்னர் மழை பெய்ந்து பின் உயிரிகள் வளர தொடங்கியது எனவும் அதன் பின் செடி,கொடி வளர்ச்சி ன்னு ஒரு கட்டமைப்பு உருவாக தொடங்கியதா அந்த கருத்துகள் சொல்லுது...அதன் அடிப்படையில் பார்த்தால் கூட இந்த பிரபஞ்சம் கூட தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும்,விரிவாக்கம் செய்யவும் தான் முனைகிறது...இப்போ நாம உச்சகட்ட பரிணாமமாக நினைக்கும் மனிதன் கூட நாளைக்கு அவனை விட ஆற்றல் வாய்ந்த ஒரு வளர்ச்சியை நாடி தான் பயணிப்பான்.. Transhumanism - இதன் அடிப்படையில் தான் வரும்..
இந்த பிரம்மாண்ட பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு தேவையான ஆற்றல் உருவாக்கம் இந்த மெய்மையின்(reality) இருமைத்தன்மையின் உதவியால் தான் நிகழுது... உதாரணத்துக்கு ஒரு காந்தத்தை எடுத்துகிட்டா இரு வெவ்வேறு துருவங்கள் இருப்பதால் தான் அதை சுற்றி காந்தபுலம் உருவாகுது,அதே போல தான் மின்னோட்டத்திலும் electron,proton இயக்கம்...அனைத்திலும் இவ்விரண்டு தன்மை  தான் அடுத்தகட்ட விரிவை ஊக்குவிக்கிறது..ஆண் பெண் ங்குற இருமையால தான் இங்க சந்ததிகள் உருவாக்கமும் நடக்குது...
எல்லாத்துக்கும் மேல இங்குள்ள மருத்துவம்,அறிவியல்,வானியல்,கட்டுமானம்,தத்துவம் அனைத்துமே இந்த பிரபஞ்சத்தை விரிவுபடுத்தும் நோக்கிலே தான் நடக்குது...இங்க இந்த விரிவாக்கம் தான் இயல்பு..அதை விட்டுட்டு பிரம்மச்சரியம்,துறவறம் போன்றவையெல்லாம் தேவையற்றது தான்...என்ன தான் இங்க பல தத்துவ கோட்பாடுகள் துறவு செல்வதை ஆதரித்தாலும் அவை ஒரு போதும் இந்த விரிவாக்கத்திற்கு உதவாது...என்ன தான் பலர் அதை பின்பற்றினாலும் இந்த பிரபஞ்ச அனிச்சை இயக்கத்தை யாராலும் தடுக்க முடியாது...பல இழப்புகள் ஏற்பட்டாலும் சரி மேலும் மேலும் வளர்ச்சி ஒன்றை தான் நோக்கமாக கொண்டு இயங்கும் இயல்புடையது இந்த இயற்கை...ஒரு சராசரி மனிதனின் எண்ணங்களும்,ஏக்கங்களும் கூட அவனுக்குமான அவன் சந்ததிக்குமான அடுத்தகட்ட நகர்வாக தான் இருக்கும்...இவ்வாறு இருக்கும் அத்தனை உயிரினங்களின் எண்ணங்கள் தான் இன்றும் இந்த விரிவாக்கம் அதிக வீரியத்துடன் நடந்துட்டு இருக்கு...
"அவனன்றி அணுவும் அசையாது" - அந்த  அசைவு அவனுக்கானதா இருக்கணும்

No comments: