Thursday 15 October 2020

Resonance of Convergence - அதிர்வுகளூடே ஒத்திசைதல்

Resonance of Convergence - அதிர்வுகளூடே ஒத்திசைதல்
ஒத்திசைவு - குறிப்பிட்ட ஒரு அலைவரிசையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடனோ தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதும்,அதன் வாயிலாக தேக மற்றும் ஆன்ம தேவைகளுக்காக செய்யும் பயிற்சி போன்றதே இந்த ஒத்திசைவு...இதை பல இடங்களில் இன்னமும் உலகின் பல மூத்த மதங்களும்,இனங்களும் பின்பற்றிக்கொண்டு தான் உள்ளார்கள்..இத தான் எளிமையா விரதம்/நோன்பு ன்னு தமக்கு ஏற்ற மாதிரி வித்தியாசமான பெயர்களில்சொல்லிட்டு வராங்க...பிரபஞ்சத்தின் எந்த ஒரு நிகழ்வுக்கும் காலம் மற்றும் இயக்கம் தான் மூலமே இந்த குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்காக குறிப்பிட்ட காலம் தனது உடல் மற்றும் ஆன்மாவை இயக்கத்திற்கு தூண்டும் செயலே இந்த ஒத்திசைவு...நோன்பு என்றாலே இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தான் ஞாபகத்துக்கு வரும் காரணம் எச்சிலை கூட விழுங்காமல் ஒரு மாதம் கடக்கும் கடும் நோன்பு..ஆனால்,இது மட்டும் அல்ல அந்த நோன்பு நோன்பு காலங்களில் நல்லதை பேசணும்,அன்பு செய்யணும்,இறைவனை நோக்கிய சிந்தனை இருக்கணும்,பிறருக்கு உதவனும் ன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு...இதன்படி பார்த்தால் நோன்பு காலங்களில் நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு அதிர்வும் நம்மை இறையின் வழியில் ஈர்க்கும்..நோன்புகள் வெறுமென உண்ணாநிலையை மட்டும் உணர்த்தாமல் நல்ல அதிர்வுகளை உருவாக்கும் ஒரு காலகட்டமாகவும் அமைகிறது...இதையே தான் கிருஸ்தவத்திலும் பின்பற்றபடுது உண்ணாமல் இருப்பதோடு இறை மீதான பற்றை வெளிப்படுத்தும் சிந்தனைகளை மட்டுமே தோற்றுவிக்கும் எண்ணங்கள் அது சார்ந்த அதிர்வுகளை உருவாக்கும் வல்லமை கொண்டது..அடுத்ததா இந்து மதத்திலும் சொல்லவே வேணாம் இப்படி விரதங்கள் வெறும் உண்ணாமல் இருப்பதை மட்டும் நோக்கமாக கொண்டமைவதில்லை மாறாக தங்களது வேண்டுகோளுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேற்கொள்ளும் பயிற்சியை போன்றது உடலளவிலும் சரி மனதளவிலும் சரி...சரி அது எப்படி நோன்பு நோற்றல் உடல் அளவிலும் மனதளவிலும் ஆற்றலை தரும்?? இதுக்கு ஒரு உதாரணமா கிராமங்களில்  தீமிதித்தல்,தீச்சட்டி ஏந்துதல் ன்னு இருக்கும் சில சடங்குகளை எடுத்துக்கொள்வோம்..சாதாரண நாட்களில் இந்த மாதிரியான நெருப்போடு விளையாடும் விளையாட்டை யாரும் செய்திட முடியாது...முறையாக குறிப்பிட்ட நாட்கள் நோன்பு நோற்று அந்த காலத்தில் தமக்கு தேவையான உடல் & மன வலிமையை மேம்படுத்தி தனது உடலையும் ஆன்மாவையும் மேம்பட்ட ஒரு ஆற்றலாக உருவெடுக்க செய்யும் வழிமுறை தான் நோன்பு(விரதம்)..இது குலதெய்வ வழிபாட்டிலும் முக்கிய பங்காற்றுகிறது குறிப்பிட்ட முன்னோரை வணங்கும் சந்ததியினர் அந்த திருவிழாவிற்கு பல நாட்கள் முன்பிருந்தே விரதம் மேற்கொள்வார்கள் இந்த நோன்பு காலங்களில் வெளியில் எங்கும் நீர் அருந்த மாட்டார்கள் காரணம் ஒவ்வொருவரின் மண அதிர்வலைகளின் வெளிப்பாடு கண்டிப்பாக அவர் பயன்படுத்தும் நீரில் கலந்திருக்கும் இப்படி ஒரு குறிப்பிட்ட முன்னோரை வழிபட இருக்கும் மக்கள் பிற வீட்டாரின் நீரை பகிர்ந்துகொண்டால் அது அவரது எண்ணங்களை பாதிக்கும்...மேலும் முறையாக நோன்பு நோற்று தனது முன்னோர்களை எண்ணி தனது மரபணுவில் கலந்துள்ள கூறுகளை வெளிக்கொணர சில நெறிமுறைகளையும் கொண்டுள்ளனர் ("7ம் அறிவு" படத்தில் சூர்யாவுக்கு அவரது முன்னோரின் மரபுகூறை வெளிக்கொணர சில நவீன நெறிமுறைகள் பின்பற்றப்படும்...இந்த படத்தில் கூட விரதம் இருப்பது போல் சில காலம் சில பயிற்சிகள் மேற்கொள்வார்கள்)..இப்படி மனிதனுக்கு சவாலான காரியங்களில் ஈடுபடும் முன் இவ்வாறு பல நெறிமுறைகள் பின்பற்றப்படுது அதை தான் விரதம்/நோன்பு ன்னு சொல்றோம்...உலகெங்கும் உள்ள பல மதத்தினரும் தீமிதித்தல் சடங்கை செய்யுறாங்க மஞ்சள் காமாலை க்கு சூடு போடுறதுக்கு பதிலா தான் இந்த சடங்கு ன்னும் சொல்லப்படுது இருப்பினும் மக்கள் இதற்கு பல வழிமுறைகளை பின்பற்றி முறையாக விரதம் இருந்தே ஒத்திசைவை உருவாக்குகின்றனர்.. மாந்திரீக சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு செடி,கொடி மூலிகைகளும் குறிப்பிட்ட நாட்கள் காப்பு கட்டி சித்தி செய்து முறையாக நோன்பு நோற்பது போல் தான் பிடுங்கி எடுத்துவரபடுகிறது..சில மருத்துவ மூலிகைகளும் அவ்வாறு செய்தால் தான் பலிக்குமாம்...இதை விட ஊர்திருவிழாக்கள்,ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடக்கும் முன்பும் இது போல தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் பிற அதிர்வலைகள் தங்களை நெருங்காமல் இருக்கவும் தங்களது அதிர்வுகளை உருவாகும் ஒரு பயிற்சி முறை தான் இந்த நோன்பு...சின்னதா ஒரு பண்டிகை ன்னா கூட வீட்டை சுத்தம் செய்வதும் இதில் அடங்கும் வீட்டில் உள்ள எதிர்மறை அதிர்வுகளை களைந்து புதிய அதிர்வை உருவாக்குதல்..ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஆண்கள் கூட போட்டிக்கு முன் சில காலம் தங்களுக்கான உடல்&ஆன்ம பயிற்சிகளை மேற்கொள்வதும் விரதம் ன்னு தான் சொல்றாங்க..குலதெய்வ வழிபாட்டில் தனது முன்னோரிடம் பேச தனது உடலையும் மனதையும் தயார்படுத்தும் வகையில் தான் இந்த நோன்பு அமைந்துள்ளது முழுக்க முழுக்க அவர்களை எண்ணி தனது மரபை நோக்கி தன்னிடமே பேசி முன்னோர்களோடு ஒத்திசைவை ஏற்படுத்துவது தான் இந்த விரதம்..

உண்ணாநிலை - இது மேற்கண்ட நோன்புகளில் தலையாயது.இந்த நிலையில் தான் சில அபரிவித ஆற்றல்களை நமது உடல் மற்றும் ஆன்மா ஈர்க்கிறது...குறிசொல்பவர்கள் கூட சாப்பிடுவதற்கு முன் தான் சொல்வார்கள் உண்ட பிறகு சொன்ன வாக்கு பலிக்காது..காட்டில் கடும் தவம் இருக்கும் யோகிகளுக்கும் ஏது உணவு...இதுபோல நமது உடல் மற்றும் ஆன்மாவை பிற ஆற்றலோடு ஒத்திசைக்கும் காரணி தான் இந்த விரதம்

No comments: