Wednesday 16 September 2020

Karma - ஊழ்வினை

Karma-ஊழ்வினை
கர்மா இத பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க முடியாது..அறிவியல் ரீதியிலும் விவரிக்கப்பட்ட ஒரு கருத்து தான் கர்மா...நியூட்டனின் மூன்றாம் விதி தான் இதற்கான விளக்கம்...நான் செய்யும் எந்த ஒரு இயக்கத்திற்கும் எதிர்வினை உண்டு என்பது தான் இதன் தத்துவம்...உதாரணத்துக்கு சுவற்றின் மீது எறியப்படும் பந்து...இதை விட அருமையா கர்மாவை பற்றி பலரும் சொல்லிருக்காங்க.. நாம என்ன தான் ஒரு விஷயத்தை சரியாவோ தப்பாவோ பண்ணிருந்தா அதுக்கான வினைப்பயன் கண்டிப்பா நம்மளை வந்து சேரும் அப்படி அது நமக்கு கிடைக்காவிட்டாலும் நம்ம சந்ததிகளுக்கு கண்டிப்பா கிடைக்கும்..உதாரணத்துக்கு சமீபத்தில் இறப்பு நடந்த வீட்டில் கொஞ்ச நாட்களில் பல மாற்றங்கள் நடக்கும் அது அந்த இறந்தவறது முன்வினைபயன்..அவர் விட்டுட்டுப்போன கணக்குக்கு விடை கிடைக்கும்..இது நன்மையாகவோ தீமையாகவோ இருக்கும்...அது அவரவர் வினைப்பயன்..குழந்தை பிறப்பும் அதுபோல தான்..சரி இப்போ இந்த கர்மாவுக்கும் நம்ம வாழ்வியலுக்கும் இடையேயான தொடர்பை பாப்போம்.
பொதுவா பூமியில் பிறந்த அனைவரும் இந்த கர்மாவால் பாதிப்பட்டு தான் ஆகணும் அதான் இதன் விதி...இது சாமானிய மனிதனுக்கு நடந்தே தீரும்..இந்த கர்மாவை சிறப்பாக கையாலுவது பெரிய பெரிய மகான்களுக்கும் ஞானிகளுக்கும் தான்  கைவந்த கலை...முதலில்  கர்மா ஒரு இயக்கத்தை கொண்டு தான் துவங்கும் அந்த இயக்கமானது கண்டிப்பாக தனக்காகவோ அல்லது தன்னை சர்ந்தோருக்காகவோ(சந்ததி) தான் இருக்கும்...இப்போ இந்த தொடர்பை துண்டிக்க தான் பிரம்மசார்யத்தை கடைபிடிச்சாங்க...ரெண்டாவது எதிர்வினை அதாவது நாம ஏதாவது செஞ்சா தான அதுக்கு எதிர்வினை வரும் எதுவுமே செய்யாம இருந்தா??? அதுக்காக தான் சில மகான்கள் சிவனே ன்னு சும்மா இருந்தாங்க... Neutral position ல இருந்தாங்க...ஓய்வும் ஒருவகை இயக்கம் தான்...அதனால முடிஞ்ச அளவுக்கு இந்த பூமியை விட்டு போக முயற்சி செஞ்சாங்க..சரி கெட்டது செஞ்சாதனே கர்மாவால் துன்பம் அவச்சொல் வரும் நல்லது செய்யலாமே-அங்க தான் இருக்குது uncertainty principle (நல்லதை மட்டுமே செய்ய கடவுளால கூட முடியாது)..இங்க நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் duality இருக்கு அதாவது நன்மைக்குள் தீமை,தீமைக்குள் நன்மை..நாம ஒரு வேலையை செய்யுறோம் ன்னா அது நமக்கு நன்மையாகவே இருந்தாலும் 0.00001% அதில் தீங்கு அல்லது எதிரான விளைவு இருக்கும்..அதனால தான் ஞானிகள் எதுவும் பேசாம எதுவும் செய்யாம யோக நிலையை பின்பற்றினாங்க அது போக அந்த வினைப்பயன்...உண்ணா நோன்பு கூட பின்பற்ற காரணம் நீரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்பு தான் ஹைட்ரஜன் பிணைப்பு சேர்மம் எல்லா மூலகூரையும் இணைக்கும் சேர்மம் உதாரணத்துக்கு நம்ம உடலில் மட்டும் ஹைட்ரஜன் இல்லை ன்னா...ஒவ்வொரு பாகமும் பிஞ்சு விழுந்திடும்...வீடு கட்டும் போது கூட சுவற்றுக்கு தினமும் தண்ணீர்(ஹைட்ரஜன்) விட்டு அதன் பிணைப்பை உறுதி செய்யுவாங்க... இதே தான் மனித உறவுகளுக்கும், இவருக்கிடையே சண்டை ஏற்பட்டால் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் நீரை பகிர்ந்து கொள்ள மாட்டாங்க (இதுக்கு தனி பதிவே போட்ருக்கேன்)..அதே போல தான் மகான்கள் எதையும் உண்ணாமல் எவரோடும் ஒட்டாமல் வாழ்ந்து வராங்க...இதை சுருக்கமா புரிய வைக்க தான் ஞானிகள் தாமரையை எப்போதும் குறியீடா பயன்படுத்துறாங்க..தாமரை - பீனியல் சுரப்பி (தவ நிலை) நீர் - வெளி உலகை தன்னோடு இணைக்கும் காரணி...தாமரை இதழ்கள் மீது தண்ணீர் எப்போதும் ஒட்டாது...இதை உணர்த்தும் வகையில் தான் இப்படி தாமரையை முதன்மை படுத்துறாங்க...அது போக நீர்(ஹைட்ரஜன்) தான் இங்குள்ள அனைத்தையும் இணைக்கும் காரணியாவும் திகழுது..உதாரணத்துக்கு ஒரு சின்ன குழந்தை முன்னாடி ஒரு பெரிய குளத்தை கட்டினால் அதன் மனம் ஆர்பரிச்சு உற்சாகமடையும் இது தான் சராசரி மனிதனையும் ஞானியையும் பிரிக்கும் கோடு...

No comments: