Monday 21 September 2020

Dark - இருள்

Dark - இருள்


இந்த பூமியின் duality ல ரெண்டு சமமான விஷயங்கள் இருக்கு..அதுல ஒன்னு தான் இருள் (இது பூமிக்கு மட்டுமே பொருந்தும்)...பிரபஞ்சம் முழுதும் இருள் தான் ன்னு சொன்னாலும் பூமியை பொறுத்தவரை அது ஒரு பகுதி மட்டுமே..இருள் பிரபஞ்சம் முழுதும் பரவி உள்ளதால் சில அற்புதங்களை தன்னுள் அடக்கி கொண்டுள்ளது...இருள் மனித உடல் மற்றும் மூளையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது...இருள் சூழ்ந்த நேரங்களில் மனிதனின் சிந்தனை அபரிவிதமாகவும்,உள்நோக்கு சிந்தனை உடையதாகவும் இருக்கும்...உதாரணத்துக்கு எதிர்காலம் குறித்த சிந்தனைகள் இரவில் தான் அதிகம் தோன்றும்...இரவில் பெரும்பாலும் கற்பனை கலந்த வகையிலே தான் சிந்தனைகள் பிறக்கும்..உதாரணத்துக்கு ஒருத்தன் இரவில் 'நான் அதை செய்வேன்' ,  'இன்னும் கொஞ்ச நாளில் அப்டி வாழ்வேன்', 'நாளை முதல் இப்படி மாறிடுவேன்' ன்னு என்னென்னமோ திட்டம் போடுவான் ஆனா பகலில் அதையெல்லாம் மறந்து வழக்கம் போல அவன் வேலையை தான் பாப்பான்..இதுக்கெல்லாம் அவனது உள்முக சிந்தனைகள் தான் காரணம்..இதே உள்முக சிந்தனை தான் ஒருவனை மனஉலைச்சலுக்கும் ஆளாக்குது..எல்லாரும் depression ன்னு பொலம்புறங்களே அதுக்கும் இதான் காரணம் இரவில் சிந்தனைகள் வெளி நோக்கி இருக்காது தனுக்குள்ளே யோசிச்சு தேவையற்றதை மனதில் ஆளப்பதிய செய்யும்...பெரும்பாலான வீடுகளில் இரவில் தான் அதிகம் சண்டை வரும்,இருட்டுல உக்காந்து தான் அழுதுட்டு இருப்பாங்க...அதே பகலில் பார்த்தால் எப்பவும் போல அவர்களின் வேலையை பார்க்க துவங்குவார்கள்...இன்றும் பலர் இரவில் தற்கொலை அளவுக்கு போய்விட்டு பகலில் சகஜமாக வாழ்ந்துட்டு இருப்பாங்க...சண்டைகள் என்றாலே 6 மணிக்கு மேல தான் போடணும் ன்னு இருப்பாங்க...இது தான் இருளின் சூட்சுமமே இருளில் நாம் எதை செய்யணும் ன்னு நெனைக்குரமோ அதை நம் மனதில் விதைத்தால் அது சரியான பாதையில் நம்மை அழைத்து செல்லும் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டால் அதன் போக்கில் ஈர்க்கும்... முழு இருளில் உறங்குவது தான் சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள் அதே சமயம் முழுவது இருள் இருந்தால் தான் pituitary சுரப்பியின் செயல்பாடும் சரியாக நடக்கும்... pituitary - ஞானத்தின் திறவுகோல் னும் சொல்றாங்க...அதுக்காக தான் கோவில் கருவறைகள் கூட இருள் கொண்டு இருக்கு...ஒளி ஆற்றல் போல இருளும் தனக்குள் ஆற்றலை கொண்டுள்ளது...ஒளியை விட வேகமானதும் கூட...

இருள் சூழ்ந்த நேரங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால் நமது உடல் ஆரோக்கியம் பெரும்..ஆனால் அதை சிதைக்கும் வகையில் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்கு...தேவையற்ற அதிர்வலைகளை நமக்கே தெரியாமல் நமது மூளைக்குள் செலுத்திவிடும்..

பழங்காலம் தொட்டே சில சடங்குகளும் வழிபாடுகளும் இரவிலேயே நடந்து வருகிறது..இதற்கும் காரணம் இருள் ஆற்றலின் பயன்பாடு தான்..உடல் சார்ந்த வளர்ச்சியும்,இதர உயிர்களின் வளர்ச்சியும் கூட இருளில் தான் நிகழ்கிறது..இன்னமும் சொல்லப்போனால் இருள் தனக்கென ஒரு உலகையே கொண்டுள்ளது...இருளில் தான் ஒருவன்(இருவர்) சுயமாக இயங்க முடிகிறது..இருள் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது...
மறையியல் சார்ந்த செயல்பாடுகளும் இரவிலே நடக்கிறது...சூரியன் உச்சம் கொண்டிருக்கும் வேளையில் இருள் தோற்கடிக்கப்படிகிறது..அப்பொழுது தான் அரக்கன் ஆட்சி(புலன்கள்) செய்கிறான்..
நீங்களே சோதித்து பாருங்கள் இருளில் உங்களது எண்ணம் மற்றும் சிந்தனை எப்படி இருக்கிறது என்று...அதே சமயம் பகலில் எப்டி உணருகிறீர்கள் என்றும் பாருங்கள்...
இருளை பயன்படுத்தி கொள்ளுங்கள்..

No comments: