Thursday 3 September 2020

Probable Relativity - நிகழ்தகவுசார்பியல்

Probable Relativity
நிகழ்தகவுச் சார்பு 
இது தன்னிச்சையான இயக்கத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையேயான ஒரு சிக்கலை குறிக்குது... உலகில் இரு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வு மற்றும் அதன் விளைவை கணிக்கும் யுக்தியை குறித்து தான் இதுல பாக்க போறோம்...

 உலகின் எந்த ஒரு நிகழ்வுக்கும் 50%/50% சாத்திய கூறுகள் உண்டு..அதாவது குறிப்பிட்ட ஒரு நிகழ்வு எதிர்காலத்தில் நடக்கலாம் நடக்காமலும் போகலாம்..இதை உறுதிப்படுத்துவது reality தான்..இந்த சமவாய்ப்பில் ஏதேனும் ஒன்று கண்டிப்பா நடக்கும்..இது தான் uncertain duality..இதில் உள்ள சிக்கலே இந்த சமவாய்ப்பில் ஏதாவது ஒன்றை கணிப்பது அதாவது எதிர்காலத்தை கணிப்பது...இது காலத்தோடு தொடர்புடையதா இருந்தாலும் எந்த ஒரு நிகழ்வயும் அனுபவிக்காமல் அதன் தீர்வ சொல்லிட முடியாது...மாறாக,அந்த நிகழ்வு நடப்பதற்கு முன்பே நமக்கு ஏற்றார் போல் மாத்திக்கிட்டா அந்த தீர்வில் மாற்றத்தை கொண்டு வரலாம் ஆனால் இதுவும் ஒழுங்கின்மையின்(uncertainty) அடிப்படையில் நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம்..சரி இப்போ எப்டி எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை கடந்த காலத்திலே மாற்றம் செய்வது ன்னு பாப்போம்.. "ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி எப்டி ஓடும்" - ஓடும் ஆனால் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது...ஏன்னா குவாண்டம் இயக்கத்தில் ஒரு விஷயத்தை நாம் பரிசோதிக்க முயன்றால் அது நமக்கு குழப்பம் கொண்ட முடிவயே தரும், யாரோ நம்மை கவனிக்கிறார்கள் ன்னு atomic particle க்கு தெரிஞ்சிடும் அதனால தன்னோட அற்புதமான இயக்கங்களை செய்யாம அதிலிருந்து மாறுபட்டு செயல்படும் (இதற்கு உதாரணமாக double slit experiment எடுத்துக்கலாம்)...சரி அது எப்டி ஆட்டோ கண்ணாடியை திருப்புனா வண்டி ஓடும் இது முட்டாள்தனமான கேள்வியா இருக்கலாம் இதையே விளையாட்டில் coin வெச்சு toss போட்டு batting தேர்வு செய்யுறதையும் பொருத்தி பாருங்க இது மட்டும் சாத்தியமா என்ன...எல்லாமே சாத்தியம் தான் உதாரணத்துக்கு சில விஷயங்களை துவங்குவதற்கு முன் கோவிலில் பூக்கட்டி போட்டு தனக்கான பதிலை தெரிஞ்சிக்குவாங்க..இங்க தான் ஒரு விஷயத்தை கவனிக்கணும் நிகல்காலத்தில் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் தான் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் மாற்றத்தை சாதகமாகவோ பாதகமாகவோ உண்டாக்கும்.. இது காலத்தோடு தொடர்புடையது அதே சமயம் கிரக இயக்கமும் ஜாதகமும் தான்...பரிகாரங்கள் இதனூடே தொடர்பு கொண்டது தான் எதிர்காலத்தில் நமக்கு வரப்போகும் சிக்கல்களை குறிப்பால் உணர்ந்தவர்கள் அதை மாற்றிக்கொள்ள நிகல்காலத்தில் ஏற்படுத்தும் சிறு சிறு மாற்றம் தான் பரிகாரம்..இதுவும் நிகழ்தகவின் நிலையின்மையின் அடிப்படையில் சரியாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்...இன்னிக்கு நீங்களும் நானும் உயிரோடு இருப்பது கூட இது போல ஏதாவது ஒரு செயல் செய்ததன் விளைவாக தான்... உதாரணத்துக்கு ஒரு நாள் நான் கல்லூரியில் இருந்து வழக்கமாக கிளம்பும் நேரத்தை விட 30நிமிடம் தாமதமாக கிளம்பினேன் வீட்டுக்கு போகும் வழியில அடிபட்டு கிடந்தேன் இதுவே ஒரு 2நிமிடம் முன்னதாகவோ அல்லது தமதமாகவோ கிளம்பியிருந்தால்? இல்லையெனில் சரியாக எப்போதும் போல போயிருந்தால்? அன்னைக்கு 30நிமிடம் விளையாடமால் இருந்திருந்தால்? - இது தான் சாத்திய கூறுகள்..இது போல பல நிகழ்தகவு அடிப்படையில் தான் நம்ம இயங்கிக்கிட்டு இருக்கோம்....யாரோ செய்த வினையால் யாரோ அவதிபடுவதும் இதில் அடங்கும்...இந்த ஒட்டுமொத்த உலக இயக்கமும் ஒன்றோடு ஒன்று ஏதோ ஒரு வகையில் நேரடி தொடர்புகொண்டோ மறைமுக தொடர்புகொண்டோ இயங்கிக்கிட்டு இருக்கு..
இதை வேற எந்த வகையில் விளக்கணும் ன்னு தெரியல

இதுக்கு ஒரு உதாரணம் தான்
Paul the Octopus
இது 2010ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது ஒவ்வொரு போட்டிகளின் முடிவையும் முன்னரே கணித்ததாக சொல்லப்படும் ஒரு கடல்வாழ் உயிரி ஆக்டோபஸ் (எண்காலி)..ஒரு போட்டிக்கு முன் இந்த octopus க்கு உணவளிக்கும் போது இரண்டு பெட்டகம் கொடுக்கப்படும் அந்த இரண்டிலும் போட்டியிடும் இரு அணிகளின் கொடி பொறிக்கப்பட்டிருக்கும்,எந்த அணியின் கொடி பொறிக்கப்பட்டுள்ள பெட்டகத்தை உயர்த்துகிறதோ அந்த அணி வெற்றி பெறும் அதே சமயம் கீழ்நோக்கி வைத்துள்ள பெட்டகம் கொண்ட அணி தோல்வியடையும்
                   - இது தான் இந்த எண்காலியின் சிறப்பு,சரி இதுக்கும் நிகழ்தகவு சார்பியலுக்கும் என்ன தொடர்பு? 
மேற்கண்ட விடயத்தில் இருந்து ஒரு கூற்று விளங்கும்

"போட்டியின் முடிவை octopus முன்னரே கணித்தது"

Uncertainty அடிப்படையில் இதை வேறு விதமாக பிரிச்சு பாப்போம் 

 "octopus பெட்டகத்தை உயர்த்தியதால் அந்த அணி வெற்றி பெற்றது"

எதிர்காலத்தை கணிப்பது கடினம் அதனால் முதல் கூற்றை நீக்கிடலாம்..இரண்டாம் கூற்றின் அடிப்படையில் பார்த்தால் நிகழ்காலத்தில் நமது செயல்கள் எதிர்காலத்தில் விளைவுகளை உருவாக்கும் என்பது உறுதி அது சாதகமோ பாதகமோ அதுவும் duality ன் அடிப்படையில் தான்...அது எப்படி ஒரு பெட்டகத்தை எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு ஆக்டோபஸ் உயர்த்துவதால்,மற்றொரு இடத்தில் எந்த வித தொடர்பும் இல்லாத கால்பந்து போட்டியோடு எப்படி தொடர்பு கொண்டிருக்கும்...இது தான் இந்த reality ஓட சூட்சுமமே இங்க நடக்குற எல்லா விஷயமும் ஏதோ ஒரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கும்..இருமையின் அடிப்படையில் அது உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம்....என்னதான் duality அடிப்படையில் செயல்பட்டாலும் நாம் வாழும் reality க்கு ஏற்ப நமது மூளை ஒரே ஒரு reality ஐ மட்டுமே நம்பும்..அதாவது,ஒரு காசை சுண்டி விட்டு பூவா,தலையா ன்னு பார்த்தோமென்றால் பூ அல்லது தலை என ஏதாவது ஒன்றை நாம் தீர்மானித்தே ஆகணும்...அதே போல அந்த காசும் பூ அல்லது தலை என ஏதாவது ஒன்றை மட்டுமே காட்டும்...
இது தான் நம்மளோட reality ன் மாயை...இங்க நமக்கு உண்மை,பொய் ன்னு எல்லாமே ஒன்னு தான் ஒன்றின் எதிர்த்துருவம் தான் மற்றொன்று..எதுவும் கெட்டதும் இல்ல எதுவும் நல்லதும் இல்ல எல்லாமே ஏதோ ஒரு நிலைப்பாட்டில் இருக்கணும் என்பதற்காக நாமாக உருவாக்கிக்கொள்ளும் ஒரு மெய்நிகரே

No comments: