Saturday 19 September 2020

Law of everything - யாதும் ஆகி

Law of everything - யாதும் ஆகி


எந்தவொரு பொருளும் இந்த வெளியில் அணுக்களின் ஒன்றிப்பாலே உருவாகி இருக்கு...இந்த அடிப்படை துகளாக அணுக்கள் தான் பலவாக உருவெடுத்து இருக்கு...ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமான அணுத்துகள்களை கொண்டு உருவாகி இருக்கு... Hydrogen, Oxygen, Carbon,Zinc, Sodium, Pottasium,Copper,Led,Nitrogen ன்னு அடுக்கிகிட்டே போகலாம்..இப்படி தனிமவரிசை அட்டவணையில் உள்ள அனைத்தும் இதுவரை மனிதர்களால் கண்டறியப்பட்ட elements..இவை பெயர் மற்றும் பண்புகளில் வித்தியாசமாக இருந்தாலும் அடிப்படையில் அணுக்கருவில் எல்லாமே ஒன்னு தான்..எலக்ட்ரான் வெளிகூட்டு பிணைப்பின் காரணமாகவும்,string theory ன் அடிப்படையிலும்,அணுக்கரு துகள்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் - ஒவ்வொரு அணு அல்லது மூலக்கூறு வெவ்வேறு தன்மை கொண்டதாக இருந்தாலும் அடிப்படையில் அவை அனைத்தும் ஒன்றே தான்... Fibonacci வரிசைப்படி சொல்லணும் ன்னா ஒன்றிலிருந்து தான் ஒன்று தோன்றும்..இது தான் அனைத்தின் தொடக்கம்...உதாரணத்துக்கு நமது உடல் முழுக்க முழுக்க நட்சத்திர கூட்டு பொருட்களால் ஆனது...நமது எலும்பில் உள்ள கால்சியம் சுண்ணாம்பிலும் இருக்கு...ரத்த சோகை வந்து இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுறோம் அதே சமயம் இரும்புஆணி குத்திடுச்சு ன்னா புண் ஆகிடும் ன்னு மருந்து போடுறோம்...இங்க எல்லாமே அடிப்படையில் ஒன்னாதான் இருக்கு..இங்க உள்ள சுற்றுசூழலும் தேவைகளும் தான் தனக்கு ஏற்றார் போல பிரிச்சு வெச்சிக்குது...இங்குள்ள நிறங்களும்,சுவைகளும்,இசையும்,மனமும் -மனிதனின் தேவைக்காகவே பிரிச்சு வைக்கப்பட்டிருக்கு சுற்றுசூழல்,ஏக்கம் எனும் மாயை உருவாக்கப்பட்டு அதுக்குள்ள அகப்பட்டு கிடக்குறோம்..இது தான் பிரபஞ்சத்திலிருந்து விரிவடைஞ்சுகிட்டு வரும் மெய்நிகர்..எல்லா இடத்துலயும் எல்லாமும் இருக்கு,எல்லாம் ஒரே விஷயத்தினால் ஆனது.. இது எப்டி ன்னா இந்த பதிவ படிக்கிற நீங்களும் பதிவ எழுதின நானும் ஒன்னு ங்குற அளவுக்கு சிக்கலான ஒரு விஷயம்..அது உண்மையும் கூட இங்க எழுதுபவர் ங்குற reality க்காக நானும்,வாசிப்பவர் ங்குற reality க்காக நீங்களும் இருக்கீங்க ஆனா அடிப்படையில் நாம ரெண்டு பேரும் ஒன்னே தான்...அது தான் அடிப்படை அணுத்துகள்களால் ஆன உருவமைப்பு...எந்திரன் படம் மாதிரி சொல்லணும் ன்னா ஒரே மாதிரியான பல ரோபோக்கள் ஆனால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தேவைகள்,ஏக்கங்கள்,சுற்றுசூழல்...இப்போ யோசிச்சு பாருங்க இதுவே எந்திரன் படத்துல இருந்த அதனை ரோபோக்களுக்கும் சனா மீது காதல் ஏற்பட்டுச்சு ன்னா என்ன ஆகும்??..எல்லாம் அத்துக்குள்ளேயே சண்டை போட்டு அழிஞ்சிரும்...அது தான் நமக்கு இந்த பிரபஞ்சம் கொடுத்திருக்க வரமும் சாபமும்.. அடிப்படையில் இங்குள்ள அனைத்தையும் ஒன்றாக வெச்சிட்டு அதற்கான இயக்கத்தை மட்டும் வேறு விதமா விதைச்சிருக்கு(உணர்வு/உணர்ச்சிகள்)..அந்த இயக்கத்தை(ஆற்றல்) தான் எல்லாரும் கோவில்களிலும்,மசூதிகளிலும்,தேவாலயங்களிலும் வேண்டி கேட்டுட்டு இருக்காங்க...இறைவன் அருள்,கிருபை,சக்தி ன்னு எல்லாமும் அந்த ஒரு ஆற்றலை நோக்கி தான் பயனிச்சிட்டு இருக்காங்க...மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே துகளால் ஆனது மதங்களும் அவ்வழியே எல்லாமும் இறைவன் இருப்பதை முன்வைத்தே கூறுகிறதே தவிர இறைவன் இல்ல ன்னு சொல்லல..நாத்தீகம் பேசுரவங்க இறைவன் இல்ல ன்னு சொல்றதுலயும் தப்பு இல்ல ஏன்னா அவங்க நம்மளோட எதிர் dulaity பயனிச்சிட்டு இருக்காங்க..இங்குள்ள உயிருள்ள,உயிரற்ற அத்தனையும் அடிப்படையில் ஒன்றாகவே உருவாகி யாதும் ஆகி தெரிகிறது...இந்த யாதும் ஆனா நிலையை மட்டும் மனிதன் எட்ட முடிந்தால் எதிர்காலம்,நிகழ்காலம்,கடந்தகாலம் ன்னு எங்கு வேணாலும் பயணிக்கலாம் அதே சமயம்,அந்த யாதுமாகின நிலையில் கோபம்,சிரிப்பு,துக்கம் ன்னு எல்லாமும் ஒரே மாதிரியே இருக்கும்...இதற்கு ஒரு உதாரணம் நம்ம ஊர்ல ஒருத்தன் அழுகுரத பாத்து ஒருத்தன் சிரிப்பான் நடுவுல இது எது உண்மை எது பொய் ண்ணே தெரியாம போயிரும்..இது இயக்கத்திற்கு மட்டுமில்ல உயிரற்ற பொருட்களுக்கு கூட பொருந்தும்...சும்மாவே உயிரற்ற சாதனங்களோட மனிதன் தொடர்புகொள்ள ஆரம்பிச்சிட்டான்... தனக்கு phone வரப்போவதை சில நொடிகளுக்கு முன்பாகவே சிலரால் கணிக்க முடியும்(இது எத்தனை பேருக்கு சாத்தியம் ன்னு தெரியல)..இதெல்லாம் வெரும் அடிப்படை தான் இதன் உட்சபட்ச நிலைய எட்டும் போது தான் மனிதன் எல்லையற்ற யாதுமாகியா ஆகுறான்...

Origin
இங்க எதுவும் உருவாக்க படல.. எதுவும் அழிக்கவும் படல...எல்லாமும் இங்கிருந்தே எடுக்கபட்டது...இறுதியில் இங்கேயே தான் விட்டும் செல்லணும்..இங்க புதுசு பழசு ன்னு ஒண்ணுமே கிடையாது மனிதனின் reality க்கு ஏற்ப அவனவன் அமைச்சுகிறது தான் எல்லாம்...பல மூலக்கூறுகளை ஒன்றிணைத்து புதுசா ஒன்றை தோற்றுவிக்கிறான் ஆனா அது புதுசு போல் காட்சிப்படும் பழசு தான்...டார்வினியம் போல உயிர்களும் அப்படியே பரிணாமித்தே உருவாகி இருக்கு...மனித இயல்புக்காக மட்டுமே physics, chemistry, biology ன்னு எல்லாவற்றையும் பிரிச்சு பாக்குறோம்..ஆனா அடிப்படையில் எல்லாம் ஒன்னு தான்...மனிதனின் புரிதலுக்காகவும் ஒற்றை இயல்பிற்காகவும் தான் பிரிக்க பட்டிருக்கு..எவ்வளவு மதங்கள்,எவ்வளவு பிரிவுகள்,இனம்,மொழி,நிறம் ன்னு இங்க பல வகையில் உடைஞ்சு இருக்கோம்..இந்த அத்தனைக்கும் அடிப்படை ஒன்னு தான் அதான் origin - இந்த origin அ தேடி தான் அத்தனை இறையியல் கோட்பாடும் நகருது... எல்லாவற்றிற்கும் மேல இந்த ஒற்றை துகள்களை இயக்கும் இயங்கு சக்தி(ஆற்றல்) தான் மனிதனால் எட்ட முடியாத பரிமாணம்...பிரபஞ்ச (கடவுள்) கோட்பாடும் அதான்...

No comments: