Saturday 12 September 2020

Coordinated Loops

 Co-ordinated Loops
ஒன்றிணைக்கப்பட்ட தடப்பாதை
இந்த பரந்த வெளியில எல்லாமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தான்...உதாரணத்துக்கு ஒரு பேனா,பென்சில் ன்னு ஆரம்பிச்சு எந்த ஒரு பொருளை எடுத்தாலும் அது இந்த ஒட்டுமொத்த உலகத்தோடும் தொடர்புடையதா இருக்கும்..இப்போ உங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தர் பெயரை சொல்லணும் இப்போ அவர்கிட்ட போய் இன்னொருத்தர் பெயரை கேக்கணும் இப்படி தொடர்ந்து கேட்டுகிட்டே போனோம் ன்னா முடிவில் ஆரம்பிச்ச இடத்துக்கே வரும் இருந்தாலும் விடாம அந்த சங்கிலித்தொடரை நீட்டிக்கிட்டே போனா அது இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் இந்த சங்கிலியில் இணைக்கலாம்(ஆனால் அதை நீங்க செஞ்சு முடிக்க சில வருடங்கள் ஆகலாம்)..
இது இந்த உலக மக்களுக்கு மட்டுமல்ல எந்த ஒரு பொருள்,உயிர்,செயல் எல்லாத்துக்குமே பொருந்தும் அதாவது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய விடயங்கள்...இதை ஏன் இங்க சொல்றேன் ன்னா இந்த பரந்து விரிந்த தொடரினைப்பில் யாரோ ஒருவர் எங்கோ ஏற்படுத்தும் சிறிய மாற்றம் வேறெங்கோ இருக்கும் ஒருவரை பெரிய அளவில் பாதிக்கும்(நன்மையும் நடக்கலாம்)..இதை எளிமையா விளங்கிக்கொள்ள ஒரு கயிறை எடுத்து ஒரு முனையை சுண்டினால் அந்த விசையியக்கம் மறுமுனை வரை பரவும்..அதே இப்போ ஒரு கயிற்றின் முடிவில் 5 கயிறு கட்டினால் இந்த விசையியக்கம் ஐந்து கயிரிலும் பரவும் இப்போ அந்த ஐந்து கயிறும் வெவ்வேறான நீளம் கொண்டதா இருக்கணும் இப்போ அந்த விசை இயக்கத்தின் நேரம் மாறுபடும்.. அதாவது சிறிய கயிற்றில் சீக்கிரம் விசை சென்றடயும் பெரிய கயிற்றில் மெதுவாக செல்லும்...இப்போ இந்த ஒற்றை கயிற்றை போல பல லட்சம் கயிறுகள் இருக்கு ன்னு வெச்சிக்குவோம் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று குறுக்க மறுக்க இணைக்கப்பட்டிருக்கு இப்போ ஒரு முனையில் ஒருவன் செலுத்தும் விசை மற்ற இடங்களுக்கு பரவலாம்/பரவாமல் தடுக்க படலாம்/திரும்பலாம்/வெகு காலம் கழித்து பரவலாம்/சீக்கிரம் பரவலாம் என நிகழ்தகவின் அடிப்படயில் எப்படி வேண்டுமானாலும் பரவும்...இதை அப்படியே மனிதனோடு ஒப்பிட்டு பாருங்க ஒவ்வொரு கயிறும் ஒவ்வொரு மனிதன் உருவாக்கும் இயக்கங்கள்(moments)..இது எங்க போகுது எப்படி போகுது ன்னு தெரியாது ஆனா கண்டிப்பா இந்த ஒட்டுமொத்த உலக இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்...

"ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒருவகை ஆற்றலை மற்றொருவகையாக மாற்றலாம்"  
ன்னு இயற்பியல் விதி சொல்லுது
அதேபோல அந்த ஆற்றல் கொண்ட இயக்கங்களையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது மாறாக அவை ஒருவகை இயக்கத்திலிருந்து மற்றொரு வகை இயக்கத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும்(ஓய்வும் ஒருவகை இயக்கமே)..

இதன் அடிப்படையில் தான் ஒட்டுமொத்த பிரபஞ்ச இயக்கமும் இருக்கு...அதாவது இன்னிக்கு நடந்துகிட்டு இருக்குற ஒவ்வொரு விஷயமும் ஏற்கனவே நடந்த ஒரு விஷயத்தின் தொடர்பு தான்..இது எப்போ ஆரம்பிச்சது ன்னு தேடினால் அது இந்த பிரபஞ்சம் ஆரம்பத்துக்கு தான் போகும்...உடனே எல்லாரும் பூமியோடு ஆரம்பம் பெருவெடிப்பு கொள்கை ன்னு சொல்லிடலாம் ஆனால் அதுக்கும் முன்னாடி என்ன நடந்தது,சரி எப்படியோ ஒரு இயக்கத்தின் விளைவா நாம இங்க வந்துட்டோம் இனிமேல் இது என்ன ஆகும் - யாருக்கும் தெரியாது.. இப்போ நான் முன்னாடி சொன்ன கயிறு உதாரணத்தை ஞாபகப்படுத்துங்க இப்படி பல சிக்கலாக பிணைக்கப்பட்ட கயிற்று தொடரில் எது முதல் எது முடிவுன்னே தெரியாது எல்லாமே சுத்தி சுத்தி வரும் ரொம்ப தூரம் போன மாதிரி இருந்தாலும் நாம சுத்திக்கிட்டு தான் இருப்போம்...அதே போல தான் இந்த பிரபஞ்சமும் எல்லாம் மீன்பிடி வலையில் இருக்கும் நூல் அமைப்பு போல தான்...இப்போ நீங்க இந்த பதிவை படிக்குறதுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப அதிபர் ஆகுறதுக்கும் கூட தொடர்பு இருக்கு ன்னா நம்பவா முடியுது,அதே சமயம் இந்த பதிவை படிச்சதால்  உங்களுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கு ன்னு சொன்னாலும் நம்பவா முடியுது..நம்பலனாலும் இது நடக்கலாம் நடக்காமலும் போகலாம் இல்லையா..இது தான் இந்த சங்கிலி தொடரின் சூட்சுமம்..இந்த சிக்கலான அமைப்புல உண்மை/பொய் ன்னு எல்லாமே ஒரே போல தான் தெரியும் உதாரணத்துக்கு ரெண்டு கயிறை எடுத்து எதிரெதிரே நிற்கும் இருவரின் கையில் ஒவ்வொரு முனையையும் பிடிக்க சொல்வோம்..
இப்போ வலது கையில் உள்ள கயிறு உண்மை இடது கையில் உள்ள கயிறு பொய் ன்னு வெச்சிக்குவோம் இப்போ ஒருத்தன் உண்மையை தேர்வு செஞ்சா அது இன்னொருத்தனுக்கு பொய்யா தெரியும்..இப்படி உண்மையும் பொய்யும் ஒரே மாதிரியே காட்சியளிக்கும் அவர் அவர் தேவைக்கு ஏற்ப நாமலே தீர்மானிக்கனும்..அது போக இந்த சுற்றுசூழல் நிலைமை தான் இங்க எல்லாத்தையும் தீர்மானிக்கும்..எல்லாமே Uncertainty தான்...ஒன்றோடொன்று கலந்த ஒன்றுமல்லாத ஒன்றின் இயக்கம் தான் இது

இப்போ உங்களுக்கு சில விஷயங்கள் தெரிய வரலாம் facebook, Twitterன்னு சமூக வலைதளங்கள் ஏன் பல மக்களை இணைக்குது...இந்த மாதிரி சங்கிலி தொடரை உருவாக்கினாலோ/மாற்றம் ஏற்படுத்தினாலோ ஒட்டுமொத்த உலக இயக்கத்திலும் மாற்றம் ஏற்படும் இயக்கங்கள் அதிகரிக்க நேரம் குறையும் நேரம் குறைந்தால் நன்மை($) தான்..

Reaction=Time=Money - காலமே காசு(கடவுள்)
இப்போ facebook ல நெறய பேர் சம்பாதிக்க ஆரம்பிச்சதயும் தொடர்புபடுத்தி பாருங்க...நம்மள விட வலிமையா இருக்குறவன் எப்படி லாம் வேலை செஞ்சு நம்மலை வெச்சே சம்பாதிக்குறான்...(நாம online ல வெட்டி சண்டை போட்டாலும் அவனுக்கு காசு தான்)

No comments: