Saturday 25 September 2021

Trio - மும்மை

Trio - மும்மை 
எண்ணியலில் மூன்றின் மடங்குகள் மிகவும் அபூர்வமானவை ன்னு ஏற்கனவே பல இடங்களில் சொல்லிருக்கேன்.இப்போ நான் சொல்றது எண்ணியலை கடந்த ஒரு விஷயம்.அதாவது மும்மை,மூன்றாம் தன்மை - இதை இரண்டுக்குமானது அல்லது இவ்விரண்டால் ஆனது ன்னு சொல்லலாம்.எப்படி என்றால் 1 - இது ஒரு ஒற்றைப்படை. 2 - இது இரட்டைப்படை.இவ்விரண்டையும் கூட்டி கிடைக்க - 3 இதான் மும்மை.இது மேற்கண்ட இரண்டையும் கொண்டுள்ளது,இவ்விரண்டாலும் ஆகி உள்ளது.1 என்பதை ஒரு பரிமாணமாக வைத்துக்கொள்ளலாம் இந்த 1- க்கான எதிர் பரிமாணம் தான் 2.இந்த இரு பரிமாணங்களும் எதிரெதிர்.ஆனால், மூன்றாவதான மும்மை இவ்விரண்டோடும் ஒத்தும், விலகியும் காணப்படும்.

1 ----- 2 ----- 3 

1,2,3 - இந்த தொடங்கு வரிசையில் இரு ஒற்றைப்படை எண்களும்,ஒரு இரட்டைப்படை எண்ணும் உள்ளது. அதாவது அடுத்தடுத்த எதிர் பரிமாண உருவாக்கங்களை குறிக்கிறது.இதை காலத்தோடு ஒப்பிட்டால் இன்னும் தீர்க்கமான புரிதலை பெறலாம்.

ஒருவன் நிகழ்காலத்தில் இருக்கிறான்.அதான் மையம் ன்னு வெச்சிக்குவோம்.முன்னோக்கி பார்த்தால் எதிர்காலம்,பின்னோக்கி பார்த்தால் கடந்தகாலம் - எப்படி பார்த்தாலும் நிகழ்காலத்தின் எதிர்பரிமாணங்கள் முன்னும் பின்னும் செயல்படும்.இப்போ அந்த நிகழ்காலத்தை 2ம் எண்ணாக வைத்துக்கொள்வோம்.முன்னிருக்கும் 3ம் எண்ணும் பின்னிருக்கும் 1ம் எண்ணும் 2ம் நிலைக்கு எதிரெதிர் பரிமாணங்களே.
இதை நீங்கள் எண்ணியல் வரிசைகளில் எங்கு வேண்டுமானாலும் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.

 உதாரணமாக, 2 ----- 3 ----- 4 என்ற வரிசையை எடுத்துக்கொள்வோம் இதில் இரு இரட்டைப்படை எண்களும் ஒரு ஒற்றைப்படை எண்களும் உள்ளன.

சரி இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன் ன்னா.மனித இயக்கத்தில் தொடங்கி இங்குள்ள அனைத்து இயக்கவியலும் இந்த எண்ணியலின் மும்மை அடிப்படையில் தான் இயங்குது.நாம எங்க போய் நின்னாலும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும் அந்த இரண்டுமே நம்முடைய தற்போதைய நிலைக்கு எதிராகவே அமையும்.அதேசமயம் அந்த இரு வாய்ப்புகளும் ஒன்றிற்கு ஒன்று எதிராகத்தான் இருக்கும்.இந்த ஓர்மை,இருமை க்கு இடையேயான மோதலில் சிக்கித்தவிப்பது மும்மையில் இருக்கும் இந்த துகள்கள் தான்.

பூதஉடலில் மூளை தரும் கட்டளைகளைக்கும்,உள்மனதின் ஏக்கத்திற்கும் இடையே சிக்கிதவிக்கும் நிலை.( பிடிக்காத வேலையை கட்டாயத்தின் பேரில் செய்பவனின் மனநிலையை போல)
இந்த மும்மை நிலை சில நேரங்களில் neutral - எனப்படுகிறது.ஏதுமற்றதாகி நிற்கும் நிலை.

3 - 3
1.5 - 6
0.75 - 3
0.375 - 6
0.1875 - 3      

6 - 6 
3 - 3
1.5 - 6
0.75 - 3
0.375 - 6

9 - 9
4.5 - 9
2.25 - 9
1.125 - 9
0.5625 - 9


No comments:

Post a Comment