Monday 27 September 2021

மரங்களும் ஆற்றல்அதிர்வலைகளும் - Trees and Vibrationalwaves

மரங்களும் ஆற்றல்அதிர்வலைகளும்
Trees and Vibrationalwaves
பொதுவாக மரங்களும் மனிதர்களை போல எண்ணங்களை வெளிப்படுத்தும் என  பல ஆய்வுகள் கூறுகின்றன.இப்பேர்ப்பட்ட அதிர்வுகளை வெளியிடும் மரங்கள் தங்களுக்குள் வேறு சில அதிர்வலைகளையும் தக்கவைத்து கொள்கின்றன அல்லது வேறு சில அதிர்வலைகள் மரத்தை தன் அதிர்வின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன.Organic Pod Burial - முறையில் புதைக்கப்படும் மனிதர்களின் ஆன்மா.அவர்மீது வளரும் மரத்தில் தங்கும்.சீன மருத்துவ முறைகளில் மனித ஆன்மாக்கள் பஞ்சபூதங்களை போல ஐந்தாக பிரிக்கப்படுகிறது.இதில் நிலத்தோடு சேர்ந்து மரமாக்கும் முயற்சி தான் இது.இதிலிருந்து மேம்பட்ட நிகழ்வுகள் தான் வனதேவதைகள்,பூதகணங்கள் மற்றும் நினைவலைகள் போன்றவை மரங்களை ஆக்கிரமித்து அதோடு ஒத்திசைதல்.இறந்தவர்களின் ஆன்மாக்கள்,தாந்த்ரீக முறையில் ஆக்கம் செய்யப்பட்ட தேவதைகளும்,கணங்களும் இது போன்ற மரத்துள்ளே தங்கிக்கொள்ளும்.இவற்றிற்கு இடையூறு ஏற்படும் வண்ணம் நடந்தால் இவை தனது வேலையை காட்டிவிடும்.இதையே கிராமப்புறங்களில் குறிப்பிட்ட சில மரத்தில் பேய் இருக்கு ன்னு சொல்லுவாங்க.இன்னமும் சில புளிய மரங்களின் அருகில் செல்லவே பயப்படும் மக்கள் உள்ள ஊரும் இருக்கத்தான் செய்கிறது.இதற்கு உதாரணமாக பனைமரத்தடியில் முனியாண்டி வழிபாடும் ஆல,அரச மரத்தடியில் இருக்கும் பெண்தெய்வங்களின் வழிபாடும் எடுத்துக்கொள்ளலாம். சங்கிலி பூதத்தார் குறிப்பிட்ட மரத்தில் குடியிருந்ததாகவும் அந்த மரத்தை வெட்டி கொண்டுவந்து வேறு சில வேலைகளுக்கு பயன்படுத்தியதால் கோபமுற்ற பூதத்தார் வெட்டியவர்களை பலி வாங்கியதாக கதைகள் கூறுகிறது.இதை உறுதிசெய்யும் பொருட்டு இன்றும் புதுவீடு கட்டி குடியேறும் முன் தச்சுகழித்தல் செய்யப்படுகிறது.எங்கெங்கோ இருந்து கொண்டுவரப்படும் மரங்களில் என்னென்ன பூதங்களோ,தேவதைகளோ இருக்கக்கூடும் அவற்றை வெளியேற்றும் பொருட்டே பலியிடப்படுகிறது.மேலைநாடுகளில் சூனியக்காரர்களும் மரங்களை வழிபட்டதாக சொல்லப்படுகிறது.இதுவும் இதே நுட்பம் தான்.நடுகல்லும், சுமைதாங்கிகல்லும் இறந்த ஆன்மாக்களின் புகலிடமாக கூறப்படுகிறதோ அதுபோலவே தான் மரங்களும்.கேரளாவிலுள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பேய் பிடித்தவர்களை கட்டுப்படுத்தி அந்த ஆன்மாவை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டிவைத்துவிடுவார்கள்.உளவியளின் அடிப்படையில் பார்த்தாலும் இயற்கையாகவே மரங்கள் மனிதர்களோடு நேர்மறையான ஒரு பிணைப்பை கொண்டுள்ளது.ஒரு மரத்தை கட்டிபிடிக்கும் போது மனித உடலில் serotonin and dopamine சுரப்பு தூண்டப்படுகிறது இது மனிதமூளையை அமைதிக்கும், உற்சாகத்திற்கும் இட்டுச்செல்கிறது.இது மேலைநாட்டு ஆய்வுகளில் நிரூபணத்திற்கு உள்ளாக்கப்பட்டதால் இதை மட்டும் ஏற்றுக்கொண்டே ஆகணும்.மேலும் மரங்கள் இயல்பாகவே கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை கொண்டது வேற்றுமண்டல அதிர்வுகளிடம் இருந்து இவை தற்காத்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.அதுபோல மரங்கள் மின்காந்த அலைகளோடு தொடர்புடையது.இவை அலைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் வெளிப்புற அலைகளோடு தொடர்பும் ஏற்படுத்துகிறது.இந்த அலைகள் பெருக்கத்தின் பேரில் அதிர்வுகளாக இறுதியில் அலைவரிசையாக மாறுகிறது.இதனடிப்படையில் ஒரே மரத்தில் பல்வேறு அதிர்வலைகள் ஒன்றோடுஒன்று பிணைப்புக்குள்ளாகின்றன.

No comments:

Post a Comment