Tuesday 5 October 2021

நீர்மங்களும் ஆற்றல்அதிர்வலைகளும் - Water and Vibrationalwaves

நீர்மங்களும் ஆற்றல்அதிர்வலைகளும்


எண்ணஅலைகள் நீர்மத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளும் விளக்குகிறது.இவை அனைத்தும் அதிர்வு எனும் அடிப்படை நுட்பத்தை கொண்டு இயங்குகிறது.இந்த அதிர்வுகளின் செயல்பாடு இறந்த ஆன்மாக்களில் தொடங்கி,வனதேவதைகள்,பூதங்கள்,கணங்கள் என அனைத்தையும் அடக்கியது.சில இஸ்லாமிய கருத்துப்படி பாதாள உலகத்தின் பூதமாக சொல்லப்படும் ifrit - நீர்நிலைகளில் தங்குவதாக நம்பப்பட்டது.அதேபோல ஆப்பிரிக்க நாட்டுப்புற தெய்வமான மாமி வாட்டா எனும் பெண் தெய்வம் வளர்ச்சியின் அடையாளமாக வணங்கப்படுகிறது.இது கிட்டத்தட்ட நம்ம ஊர் மாரியம்மன் மாதிரி தான்.இதுவும் நீர்நிலைகளில் தங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.இன்னும் மேற்கத்திய நாட்டுப்புற இறையியளில் water spirits எனப்படும் அதிர்வலைகள் ஆறு,குளம் போன்ற நீர்நிலைகளில் குடிக்கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.எல்லாவற்றிற்கும் மேல நான் ஏற்கனவே சங்கிலிபூதத்தார் மரங்களில் தங்கியிருந்ததாக சொன்னது போல நீரிலும் ஆழமான கசத்தை உருவாக்கி தங்கினார் என கதைகள் உண்டு.சரி நீருக்கும் ஆன்மா,அதிர்வலைகளுக்கும் என்ன தொடர்பு?.இந்த தொடர்பு யாக வேள்விகளில் வைக்கப்படும் கும்பகலசத்தில் தொடங்கி இறந்த சடங்குகளில் பானையில் வைக்கப்படும் நீர் வரை நீளும்.ஆற்றல் அதிர்வுகளை ஒரு isolate செய்யப்பட்ட கலனில் உள்ள நீருக்குள் நிலைநிறுத்தி தங்களுக்கு தேவையான வேலைகள் செய்யப்படுகிறது.ஆனந்தப்புறத்து வீடு எனும் திரைப்படத்தில் பேயோட்டி ஒருவர் பானைக்குள் நீரை நிரப்பி அங்குள்ள பேயை விரட்ட முயல்வார்.அதோடு, ஈரம் எனும் திரைப்படத்தில் இறந்த பெண்ணின் ஆன்மா பழிவாங்கும் நோக்கில் நீரை கட்டுப்படுத்தி நீரின் மூலம் கொலைகளை செய்யும்.இந்த கற்பனைக்காட்சி எடுத்துக்காட்டுகள் தான் இதன் உச்ச செயல்பாடு.உயிரோடு இருப்பவரின் எண்ணங்களுக்கு ஏற்ப அசையும் நீரின் தன்மை, இறந்த ஆன்மாக்களோடும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.எங்கெல்லாம் நீர் வைத்து வழிபாடு செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த நுட்பம் பயன்படுத்தபடுகிறது.இது ஆன்மாக்களுக்கு மட்டுமல்லாது,சில செயற்கையாக உருவகம் செய்யப்பட்ட நுண்ணிகளின் கட்டுப்பாட்டிற்கும் உதவும்.நெய்தல் நிலத்தவர்கள் கடலின் நிலையை கட்டுப்படுத்தும் அளவிற்கு வல்லமை கொண்டவர்களாக இருந்துள்ளார்கள் இது போன்ற நீருடனான நுட்பத்தை கொண்ட கடலையே தமக்கு ஏற்றார்போல் கட்டுப்படுத்தி கொண்டதாக செவிவழி கதைகள் சொல்லப்படுகிறது.இன்னமும் கிராமப்புறங்களில் சில கிணறுகளையும் குளங்களையும் பார்த்து மக்கள் பயப்பட, ஒருபுறம் அதே கிணறு குளங்களின் மேட்டில் கிராம தேவதைகளுக்கும்,காவல் கருப்புகளுக்கும் கோவில் அமைத்து வழிபாடும் செய்யப்படுகிறது.பஞ்சபூதத்தில் ஒன்றான நீரானது பூத உடலுக்கும் நிழலில்லா அதிர்வுகளுக்குமானது.


No comments:

Post a Comment