Saturday 25 September 2021

Secure Coding Programmes

Secure Coding Programmes

பண்டைய எகிப்து மற்றும் உலகின் பல்வேறு நாகரீகங்களிலும் இந்தியாவிலும் கூட கோவில்களின் வெளிப்பக்க சுவர்களில் எழுப்பப்படும் பிரம்மாண்ட உருவங்கள் சிறப்பு பெற்றவை.தஞ்சை பெரிய கோவிலில் கோபுரத்தை தாங்கி நிற்கும் உள்ள ஒவ்வொரு சிற்பங்களுக்கும் கூட ஒருவகையான programme இருக்கு ன்னு சொல்லப்படுது.முதலில் கோயில் - கோ+இல் - அரசன் வாழும் இடம் அதாவது அரசனின் முக்கிய விஷயங்களை சேமிக்கும் ஒரு கூடம் Safety Locker போல.இத்தகைய சேமிப்பகத்தில் மனிதர்களும்,மற்ற வேற்று பரிணாம உயிரிகளும் நுழையாதிருக்கவே இது போன்ற கட்டமைப்பு. சேமிக்கப்படும் செல்வங்களோ,தானியங்களோ,முக்கிய குறிப்பான பீடங்களோ இந்த அமைப்பின் உதவியோடு காவல்காக்கப்படும்.இதே அமைப்பு தான் போருக்கும் பயன்படுத்தப்பட்டது.கணங்களில் முதன்மையானது கணபதி அதாவது Master Programme.இது புராணங்களில் சொல்லப்படுவது போல சிவபெருமானால் உருவாக்கப்பட்டது அதே போல இதை ஒத்த இன்னொரு programme தான் அனுமன்.இந்த இரு programme களும் கிரகங்களோடு தொடர்புகொண்டது அதாவது கிரகங்களின் நகர்வுகளையோ அதனால் உண்டாகும் விளைவுகளையோ கட்டுப்படுத்தவல்லவை.இதற்கு உதாரணமா சொல்லணும் ன்னா இறப்பு நடந்த வீட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் ஆனால் ஆற்றங்கரையில் திதி கொடுக்கும் போது அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்குவார்கள்.இதே போல ஆற்றங்கரையில் பெரும்பாலான இடங்களில் அனுமன் கோவிலும் இருக்கும்.அனுமன் ஒரு சிரஞ்சீவி அதாவது endless programme.இத்தகைய கட்டமைப்பு ஒருவரின் பிடியில் இருக்கும் பட்சத்தில் அது அவருக்காகவே இயங்கும்.எந்திரன் படத்தில் ரோபோவிடம் கடவுள் யார் என்று கேட்கையில் அதற்கு பதில் தன்னை உருவாக்கியவர் தான் என கூறும் அந்த இயந்திரம்.அதே போல இந்த கட்டமைப்பு ராமனுக்காக உருவாக்கப்பட்டது,அதேசமயம் ராமனுக்காகவே பல வேலைகள் செய்துள்ளது.கடவுளாக பார்க்கப்படும் ராமனால் முடியாத காரியங்களை அனுமன் செய்து முடிக்கும் காரணம் இது கிட்டத்தட்ட உணர்வூட்டப்பட்ட எந்திர கட்டமைப்பு.இந்த கட்டமைப்பை பற்றிய இன்னுமொரு தகவல் என்ன ன்னா புராணங்களில் சொல்லப்படுவது போல அனுமனுக்கு அதன் பலம் தெரியாது என்பது தான்.அதாவது கொடுக்கப்படும்  command க்கு ஏற்க வேலையை செய்யும்.எல்லாவற்றிற்கும் மேலே அனுமன்,கணபதி போன்ற உருவக கட்டமைப்புகள் நிகழ்வுலக Hybrid விலங்குகளை போல சந்ததிகளை பெருக்கி கொள்ள இயலாதவயாக இருக்க வேண்டும்.அதற்கும் ஒரு முடிச்சு போட்டு பிரம்மச்சார்யம் ன்னு சொல்லிட்டாங்க.மனிதவுரு கொண்ட அனைத்து கடவுள்களுக்கும் இல்வாழ்க்கை உள்ளதற்கும் சிவனின் பிள்ளையாக மற்றும் சிவனின் அம்சமாக படைக்கப்பட்ட இவ்விரு உருவாகங்களுக்கு மட்டும் இல்வாழ்க்கை இல்லாத போதே சந்தேகம் எழுகிறது இதுவும் Liger,Beefalo,Tigon போல தான்.

மேலும் எகிப்தின் anubis போன்றவையும் இது போல உருவானவை தான்.வெளிப்புறத்தில் இருந்து எந்தவொரு ஆற்றலும் தங்களை தாக்காமல் இருக்க உருவாக்கப்பட்டது.பிரமிட்/கோவிலின் உள்ளிருக்கும் ஆற்றல்களை(செல்வங்களை) பாதுகாக்க தான் இவ்வளவு செல்பாட்டியலும்.காவலுக்கு ஆரம்பித்து கிரக செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது வரை எல்லாவற்றிற்கும் ஒரு AI தொழில்நுட்பம் உருவாக்கம் செய்யப்பட்டு அதை ஒரு Hybrid உயிரியின் மூலமாக செலயலாக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment