Monday 2 August 2021

Entropic Environment

Entropic Environment


வெப்பஇயக்கவியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் பகுதி தான் entropy. அதாவது ஒரு அமைப்பின் சீரற்றதன்மையை குறிப்பது.எளிதாக சொல்லணும் ன்னா வீட்டில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்துக்குவோம் தற்போது அதன் entropy - 0 அதே புத்தகங்கள் அறை முழுவதும் கலைத்து போடப்படுகிறது தற்போது குறிப்பிட்ட வேலை நடந்துள்ளது. எனவே,அமைப்பின் entropy அதிகரிக்கும். தற்போது entropy - 1 என வைத்துக்கொள்வோம்.இவ்வாறு உலகில் செய்யப்படும் எந்த ஒரு வேலைக்கும்/ஓய்வுக்கும் entropy என்ற மதிப்பு இருந்துகொண்டே வரும்.இந்த entropy வெப்பத்துடன் தொடர்புகொண்டது.எவ்வாறென்றால், பிரபஞ்சத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்விலும் இறுதிக்கட்ட ஆற்றல் வெளிப்படானது வெப்ப நிலையிலே வெளியிடப்படும்.அதே சமயம் "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது,ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்றலாம்" - அப்படி இருக்கையில் எந்தவொரு இயக்கமும் இறுதியில் வெப்பதிலேயே முடிவடைகிறது.நாம் உடலளவில் ஒரு பொருளை நகர்த்தினால் கூட நமது உடலில் சிறிது வெப்பம் உருவாக்கப்படும்,இதே தத்துவம் தான் அனைத்து இயந்திர இயக்கங்களுக்கும்.சரி திரும்ப புத்தக கதைக்கே வருவோம்.கலைக்கப்பட்ட புத்தகங்களின் entropy-1 எனில் திரும்பவும் அந்த புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படுகிறது தற்போது அதன் entropy-2 என அதிகரிக்கும்.அதாவது மீள் வினையோ,மீளா வினையோ ஒரு அமைப்பின் entropy ஆனது அதிகரித்துக்கொண்டே தான் போகும்.உண்மையில் சொல்லப்போனால் 0-entropy மதிப்பில் பிரபஞ்சத்தில் எந்தவொரு பொருளும் இல்லை.நமது கணக்கீட்டிற்காகவே ஒரு குறிப்பிட்ட நிலையை 0 என எடுத்துக்கொள்கிறோம்.ஒரு பொருள் ஓய்விலே இருந்தாலும் அது இயங்கிக்கொண்டு தான் உள்ளது அதற்கான குறிப்பிட்ட அளவு entropy உயர்ந்துகொண்டே தான் செல்லும்.ஏனென்றால்,ஒருவர் எதுவும் செய்யாமல் ஓய்வில் இருந்தாலும் இந்த பிரபஞ்ச பேரசைவு நம்மை ஆட்கொண்டுள்ளது - அது தான் String Theory. ஒரு மெல்லிய அதிர்வில் தொடங்கி பிரபஞ்சம் முழுதும் அதிர்ந்துகொண்டு உள்ளது.அந்த அதிர்வோடு இயைந்து ஆடும் ஆட்டம் தான் மனிதர்களின் பூவுலக வாழ்க்கை.entropy காலத்தை போல நேர்கோடாக பயணிக்க கூடியது.இது காலத்தோடு இயைந்த அதிர்வில் இருந்து விடுபட மேற்கொண்டு வினைகளை நிகழ்த்தாமல் இருக்கவே சில ஆன்மீகவாதிகள் இந்த அதிர்வுகளை விட்டு விலகி இருக்கும் யோக முறைகளை பின்பற்றி முடிந்தளவு தனது entropy மதிப்பை கூட விடாமல் பார்த்துக்கொண்டனர்.இது இயற்கைக்கு மாறே.entropy காலத்தோடு சேர்ந்து பயணிக்கும் இதனடிப்படையில் பார்த்தால் entropy தான் காலம்.அதாவது ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை செய்யும்போது அமைப்பின் entropy அதிகரிக்கும் அதேசமயம் காலமும் அதிகரிக்கும்.இதன்படி ஒரு கூற்று தெளிவாகிறது பிரபஞ்சத்தில் ஏற்படுகின்ற/பதிவுசெய்யப்படுகிற ஒவ்வொரு செயலும்/இயக்கமும் காலம்.காலத்தை எப்படி பின்னோக்கி நகர செய்ய முடியாதோ அதே போல தான் இயக்கங்களையும் entropy யையும் பின்னோக்கி நகர்த்த முடியாது.இதை காலபயணத்தோடு தொடர்புபடுத்தினால் - உடலளவில் மனிதன் காலபயணத்திற்கு ஏற்றவன் அல்ல ஏனென்றால் அதற்கு பெரும் முட்டுகட்டு இந்த entropy.எப்படி ன்னா இப்போ நாம உணவு உண்கிறோம் இத அப்படியே reverse timetravel பண்ணுறோம் ன்னு வைங்க.இப்போ விழுங்கப்பட்ட உணவு இரைப்பையில் இருந்து உணவு குழாய் வழியே வெளியேறும் இது மனிதருக்கு ஒப்பானது அல்ல கிட்டத்தட்ட வாந்தி எடுப்பது போன்று இருக்கும் இதுமட்டுமல்லாமல் வெப்பளவில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு ஒவ்வாது.பிரபஞ்சத்தில் பயன்படுத்தப்படும் ஆற்றல்கள் தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரேமாதிரி இருப்பதில்லை.100km திறனுள்ள என்ஜினுக்கு 1லிட்டர் பெட்ரோல் என இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அது 100km பயணிக்காது இல்லையேல் சில மில்லி பெட்ரோல் இழக்கப்பட்டிருக்கும் - energy loss. இதேபோல தான் இறுதியில் வெப்பமாக வெளியிடப்படும் ஆற்றல் இந்த பிரபஞ்சத்தில் சமன்செய்யப்பட்டு பயன்படுத்த இயலா ஆற்றல்களாக மாறிவிடுகின்றன.இதற்கு எடுத்துக்காட்டு வெப்ப ஆற்றலை பயன்படுத்தி நீரை கொதிக்க வச்சு பின்னர் அந்த நீர் ஆவியாக பிரபஞ்சத்தில் சமன் செய்யப்படுகிறது.இந்த ஆற்றலை பயன்படுத்தும் நுட்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை ஒருவேளை இது கண்டறியப்பட்டால் ஆற்றலுக்கு பஞ்சமே இருக்காது.அதே சமயம் இந்த பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொரு entropy மாற்றங்களும் நினைவுகளாக (free energy) பதியப்பட்டுள்ளது.இந்த நினைவுகள் காலத்தால் கட்டப்பட்டு மீட்டெடுக்க முடியாமல் உள்ளது.இதற்கு எதிர் பரிணாமமாக இருளில் பயணித்தால் நினைவுகளோடு காலத்தையும் வென்றெடுக்கலாம்.

No comments:

Post a Comment